Thursday, November 27, 2008

ஹேமந்த் கர்கரே




மும்பை: மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மிகத் திறமையாக விசாரித்து வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே (54), நேற்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியாகி விட்டார். தாஜ்ம ஹால் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அடக்கும் முயற்சியில் போலீஸ் படை இறங்கியபோது, தலையில் ஹெல்மட், மார்பில் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடன் நேரடியாக களம் இறங்கினார் ஹேமந்த் கர்கரே.


அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கர்கரேவின் பெயர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானது. அனைவருமே முஸ்லீம் தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, இதில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்தது கர்கரே தலைமையிலான ஏ.டி.எம். குழு.



அதன்பின்னர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் என அடுத்தடுத்து அதிரடியான கைதுகள் நடந்தன. மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களையும் ஏ.டி.எஸ். வெளியிட்டு வந்தது. நேற்று காலையில் கூட பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரை, போலீஸ் காவலில் அனுமதிக்க மும்பை கோர்ட் அனுமதிக்க மறுத்தது குறித்து கவலை தெரிவித்திருந்தார் கர்கரே.


பிரக்யா சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும், விசாரணையும் விரைவாக நடக்கும் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இரவே அவரது மூச்சை நிறுத்தி விட்டனர் தீவிரவாதிகள். 1982ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் கர்கரே.


இந்திய அரசின் உளவுப் பிரிவான 'ரா' வில் முன்பு இருந்தவர். அப்போது ஆஸ்திரியாவில் 9 ஆண்டுகள் பணியாற்றினார். மிகவும் நேர்மையான, கட்டுப்பாடான, ஸ்ட்ரிக்ட்டான அதிகாரி என பெயரெடுத்தவர் கர்கரே. இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அவர் தனது ரா பணியை முடித்து விட்டு மகாராஷ்டிரா திரும்பினார். உடனடியாக அவரை மகாராஷ்டிர அரசு ஏ.டி.எஸ். தலைவராக நியமித்தது. இதைத் தொடர்ந்தே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.


தானேவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கர்கரேதான் தீவிரமாக செயல்பட்டு துப்பு துலக்கினார். அதேபோல பான்வேல், வாஷி குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் கர்கரே தலைமையிலான டீம்தான் துப்பு துலக்கியது. ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்தான் கர்கரேவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது. தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், நாம் போலியான சாட்சியங்களை, ஆதாரங்களை உருவாக்கக் கூடாது. நமது கடமையை நாம் செய்வோம்.


நீதி்மன்றம் மற்றதை முடிவு செய்யட்டும் என்பாராம். கடைசியாக அவர் என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்தார். நேற்று அவர் அளித்த பேட்டியின்போது பிரக்யா சிங்கை துன்புறுத்தியதாக அத்வானி குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது, எங்கள் மீது புகார் கூறப்படும்போது அதைக் கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். ஆனால், சாத்வி பிரக்யா சிங் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை. சட்டவிதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம். கோர்ட் எப்போதெல்லாம் உத்தரவிடுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் குற்றவாளிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம். துன்புறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். கர்கரேவின் மரணம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நிச்சயம் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

Source:Thatstamil.com

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்?

மும்பையில் 1992 பாபர்மஸ்ஜித் இடிப்பு, 1993 குண்டுவெடிப்பு ஆகிய நாட்டை உலுக்கிய நிகழ்வுகளுக்குப்பின்னர் நேற்று இரவு 9.40க்கு ஆரம்பித்த துப்பாக்கிச்சூடு, வெடிக்குண்டு வீச்சு, குன்டுவெடிப்பு ஆகிய தீவிரவாத சம்பவங்கள் நாடு முழுவதும் பலத்த பீதியை உருவக்கியுள்ளது. கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக மலேகான் குண்டு வெடிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தவர் மகாரஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படைத்தலைவர் ஹேமந்த் கட்காரே. நாடுமுழுவதும் மக்கள் குண்டுவெடிப்பிற்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது ஹிந்துத்துவா சங்க்பரிவார் தீவிரவாதிகள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைதுச்செய்து இன்னும் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவரும் என்று அவர் நேற்றுமுன்தினம் பேட்டியளித்த நிலையில் தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தீவிரவாத சம்ப்வங்களுக்கு பாக்கிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யுடன் சங்க் பரிவார்களுக்கு தொடர்புண்டு மேலும் விவரமான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளி வரும் என்றிருந்த நிலையில்தான் கர்காரே கொல்லப்பட்டுள்ளார்.மும்பையில் நேற்று நடந்த சம்பவம் முற்றிலும் தீவரவாத எதிர்ர்ப்பு படைக்கு நேராக நடந்த சம்பவம்தான்.
உயர் அதிகாரகள், வெளி நாட்டினர், அரசியல்வாதிகள் தங்கியிருக்கும் அதி தீவிர பாதுகாப்பு நிறைந்த தெற்கு மும்பையில் எவ்வாறு தீவிரவாதிகள் கிரேனைட், ஆ.கே 47 துப்பாக்கிகளுடன் நிழைந்து தாக்குதல் நடத்தமுடியும்? இந்தியாவில் பொதுவாஅக குற்றம் சாட்டப்படும் லஷ்கர்-இ-தைய்யிபா, அல் பதர் தீவிரவாத இயக்கங்களால் முடியாத சம்பவம் இது. நிச்சயமாக இது முன்னாள் இன்னாள் ராணுவ அதிகாரிகளைக்கொண்ட அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் தான் முடியும். இதில் அவர்கள் சில முஸ்லிம்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பது பலரின் சந்தேகம்.
டீவிரவாதிகளின் இந்த தாக்க்தலுக்காரணமான ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடம் கடுகையாக விசாரணை நடத்தினால் உண்மை வெளி வரலாம்.அதெல்லாமல் இல்லாத அமைப்புகளை மின்னணு செய்தி என்ரபெயரில் அப்பாவை முஸ்லிம்களை கைதுச்செய்து சித்திரவதைச்செய்வதால் ஒருபயனும் இல்லை.




மும்பை: மும்பை தாஜ் மஹால் ஹோட்டலில் அமெரிக்க உளவுப் பிரிவைச் 2 அதிகாரிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.இந்த ஹோட்டலில் 15 பேர் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக சிக்கியிருந்தனர். இதில் 7 பேர் அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஆவர். இதில் சிலர் பிரேசிலைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் விவரம் தெரியவில்லை.இந்தத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதையடுத்து இந்த ஹோட்டலில் இப்போது பிணயக் கைதிகள் யாரும் இல்லை. யாரும் இங்கிருந்து 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 2 பேர் அமெரிக்க உளவுப் பிரிவினர் எனத் தெரிகிறு.மேலும் டிரைடண்ட் ஹோட்டலில் இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட 30 பிணயக் கைதிகளும் நரிமன் ஹவுஸ் ஹோட்டலில் அமெரிக்கர்கள் உள்ளிட்டவர்களும் பிணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
GA_googleFillSlot("tamil-article-468x60");
இவர்களை மீட்க ராணுவமும் என்எஸ்ஜி படையினரும் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக தாஜ் ஹோட்டலின் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்ட இரு தீவிரவாதிகள் 7 வெளிநாட்டினர் உள்ளிட்ட 20 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஹோட்டலின் மாடிக்கு கொண்டு சென்றனர். அமெரிக்கர்கள்-பிரிட்டிஷாரை தேடி வந்தனர்: அவர்களைப் பிடித்தபோது உங்களில் யார் யார் அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதில் 5 பேர் தப்பியோடிவிட்டனர். மற்ற 15 பேரையும் 18வது மாடியில் ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்துள்ளனர். அதே போல டிரைடன்ட் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளும் இங்கே அமெரிக்கர்கள், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் யார் என்று கேட்டபடியே தான் சுட்டுள்ளனர். பணயக் கைதிகளில் இஸ்ரேலியர்கள்: இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் (ஓபராய் ஹோட்டல்) பல இஸ்ரேலியர்கள் உள்பட 30 பேர் பிணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டலில் 10 முதல் 12 தீவிரவாதிகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தப் பணயக் கைதிகளைக் காப்பாற்ற கமாண்டோக்கள் அந்த ஹோட்டலை சூழ்ந்துள்ளனர். ஆனால், தங்களிடம் உள்ள பணயக் கைதிகளை பல பிரிவுகளாகப் பிரித்து ஹோட்டலின் பல்வேறு அறைகளிலும் அவர்கள் அடைத்து வைத்துள்ளதால் நிலைமை சிக்கலாகியுள்ளது. அங்கு தீவிரவாதிகள் சுட்டு ஒரு ஊழியர் பலியாகியுள்ளார். அந்த ஹோட்டல் லாபியில் கிடந்த வெடிக்காத ஒரு கிரணைட் கைப்பற்றப்பட்டுள்ளது.




மும்பை: மும்பையில் தாஜ் மகால் ஹோட்டல், கொலாபா, மெட்ரோ சினிமா, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், டிரைடன்ட் ஹோட்டல், காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ், கபே லியோபோல்ட் ஆகிய 10 இடங்களில் தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 125 பேர் கொல்லப்பட்டனர், 327 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், 16 பேர் போலீசார் ஆவர் டிரைடண்ட் ஹோட்டலில் (ஓபாராய் ஹோட்டல்) மேலும் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். நரிமன் ஹவுஸ் ஹோட்டலில் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 20 பேரையும் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். தாஜ் ஹோட்டலில் பிணயக் கைதிகளைப் பிடித்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு பயணிகள் மீட்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் அந்த ஹோட்டலின் பல்வேறு மாடிகளில் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ராணுவமும் என்எஸ்ஜி கமாண்டோக்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
GA_googleFillSlot("tamil-article-468x60");
அதே போல ஹோட்டல் டிரைடண்டிலும் நரிமன் ஹோட்டலிலும் ராணுவமும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றிரவு தொடங்கிய இந்தத் தாக்குதலாலும் ராணுவம்- கமோண்டாக்களின் பதிலடி தாக்குதலாலும் மும்பை நகரமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. நேற்று இரவில் தீவிரவாதிகள் இந்த இடங்களில் புகுந்தனர். முதலில் கையெறி குண்டுகளை வீசிவிட்டு பின்னர் தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய இடம் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையமாகும். இதையடுத்து கபே லியோபோல்ட், காமா மருத்துவமனை ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் தாஜ் மகால், நரிமன் ஹவுஸ், டிரைடன்ட் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களுக்குள் புகுந்து அங்கு தங்கியிருந்த பலரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். இதையடுத்து போலீஸாரும், அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் தொடங்கியது. இதில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். 7 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாஜ் ஹோட்டலில் 5 தீவிரவாதிகளும் டிரைடண்ட் ஹோட்டலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாஜ் ஹோட்டலில் பிணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த சண்டையில் கூடுதல் கமிஷ்னர் அசோக் காம்தே, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். காமா ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின் போது அசோக் காம்தே கொல்லப்பட்டார். மற்ற இருவரும் டிரைடன்ட் ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவமும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. தீவிரவாதிகள் பிடியில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்டோரை மீட்க ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 200 பேர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அதேபோல டிரைடன்ட் மற்றும் நரிமன் ஹவுஸ் ஹோட்டல்களையும் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அங்கு சுமார் 15 முதல் 18 தீவிரவாதிகள் சுமார் 40 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஆனாலும் இன்றிரவுக்குள் இந்தப் பணி முடியாது என்று மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் தெரிவித்துள்ளார். 3 ஹோட்டல்களிலும் நாளை காலை வரை தாக்குதல் நடக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலையடுத்து நேற்றிரவு முதல் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய்விட்டது. இன்று பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அதே போல பெரும்பாலான ரயில்களும் இயக்கப்படவில்லை. இதனால் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இந் நிலையில் இன்று காலை மகாராஷ்டிர சட்டசபை கட்டடமான விதான் பவனில் ஒரு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தீவிரவாதி கைது: இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான். இவனது பெயர் அபு இஸ்மாயில். பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவன் எனத் தெரியவந்துள்ளது. மரியாட் ஹோட்டலுக்குப் பாதுகாப்பு மும்பையின் இன்னொரு புகழ் பெற்ற ஹோட்டலான ஜே.எம்.மரியாட் ஹோட்டலை தீவிரவாதிகள் பிடிக்கப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கியவர்கள், தப்பியோர் குறித்த விவரம் அறிய, Mumbai Helpline Number: +91-22-2200-5388 Delhi Helpline No: +91-11- 2389-0606 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments: