Tuesday, November 25, 2008

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது








விருதுபெற்ற டாக்டர் திரு. மாசிலாமணி அவர்களுக்கு எமது மனமார்ந்த பாரட்டுக்களும் வாழ்த்துகளும்!தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது.




புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்த நோயின்கடுமையிலிருந்து தப்ப இரண்டே வழிகள் தான்.முதலாவது நோய் வராதவாறு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது.




இரண்டாவது, தப்பித் தவறி வந்தால் இதை துவக்கக் கட்டத்திலேயே கண்டறிவது.இந்த முயற்சியில் உலகெங்கும் பல்வேறு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.




இந்த ஓட்டப்பந்தயத்தில் டாக்டர்.வ.மாசிலாமணி என்ற தமிழக விஞ்ஞானி ஒரு அற்புத சாதனைப் படைத்து சவூதி இளவரசர் மேதகு நாயிஃபா ( Prince Naifa) அவர்களிடம் பரிசும் பட்டயமும் பெற்றுள்ளார்.




பரிசுத் தொகை இந்திய மதிப்பில் ஆறரை லட்சம் ரூபாய்.அவருக்கும், அவருக்குத் துணையாக இருந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் பாராட்டி ,பரிசுகள் வழங்கி ரியாத் சவூதி மன்னர் பல்கலைகழகம் 3-11-2008 அன்று விழா எடுத்து சிறப்பு செய்தது.




அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கௌரவம் இது.முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒர் தமிழக விஞ்ஞானி. இந்தியாவும் - குறிப்பாய் தமிழகமும் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.
அவர் அப்படி என்னதான் செய்தார்?




இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர்மூலக் கூறுகளை லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்தார். இதேபோல் அதிகாலையில் வரும் முதல் சிறுநீர்த்துளியின் மூலக் கூறுகளையும் பகுத்தெடுத்தார். இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நோயற்றவர்களிடம் இல்லாத சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தன.




இதைக் கொண்டு புதிதாக மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதியக் கருத்தமைவை (Technique)கொண்டுவந்தார் இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா , இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா என்பன போன்ற பலவிஷயங்களை கணிக்கமுடியும்.




இந்தப் புதிய முறை இந்திய மத்திய அரசின் ICMR ல் தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முறையின் தொடர் ஆராய்ச்சிக் காரணமாகத்தான் நுரையீரல் புற்று நோய்க்கு மட்டும் தனித்துக் காட்டும் புது உயிர்மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார்.




இந்த முறையின் நம்பகத்தன்மை (Reliablity) 80% என்பதும் இதுவரையில் இத்தகைய்ய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த புதிய முறையின் துணைக் கொண்டு நுரையீரல் புற்று நோயின் துவக்க நிலையைக் கண்டறிவது மட்டுமன்றி தொடர்ந்து பலகாலம் புகை பிடித்துக் கொண்டிருப்பவரில் யாருக்கு இந்நோய் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் நிர்ணயித்து எச்சரிக்கை மணி அடிக்க முடியும்.எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.




-- ------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~----------------~--~---------~--~----~------------~-------~--~----~~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~ வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது! ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.




தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.

No comments: