அருள்மறை குர்ஆன் இஸ்லாத்தை அல்லாஹ்வால் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை முறையாக்கி அதை உலக மக்களுக்கு பரிபூரணபடுத்தி விட்டதாக பகர்கின்றது. அதையே வாழ்க்கை நெறியாக ஏற்று நடக்கின்ற நமது இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிலை என்ன?. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் தந்த ஜனநாயக முறையை ஒழுங்காக இஸ்லாமியர்கள் பயன்படுத்தாததால் இன்று(இஸ்லாமிய மார்க்க இனத்தை அழிப்பதற்காக நேரடியாக) என்கவுண்டர் எதிர்வினை என்று தீவிரவாதத்தை செய்துவிட்டு சட்டத்தை தீர்ப்பை, சொல்கிற நீதிமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் தைரியமாக உலா வருகிறார்கள்.
மும்பையில் ஒரு பீகார் இளைஞனை காவல்துறை சுட்டுவிட்டது. நேர் எதிர்மறையில் உள்ளவர்கள் நிதீஷ், லாலு மற்றும் பஸ்வான் இன்னும் பல தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து பிரதமரை பார்க்கிறார்கள். தமிழகத்திலே திமுக உன் உறவு தேவையில்லை என்று பாமகவை வெளியேற்றிவிட்டது. கம்யூனிஸ்டுகள் திமுக உறவு தேவையில்லை என்று வெளியேறிவிட்டன. பரஸ்பரம் மாறி மாறி பழி சுமத்திக்கொண்டார்கள். இலங்கை பிரச்சனை வந்தபோது ஒன்றாக கைகோர்த்துக்கொண்டார்கள்.
ஒரே வேதம்! ஓர் இறை என்பதை பின்பற்றுகிற அனைவரும் சகோதரர்கள் என்று ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களே!! தலைவர்களே!!! உங்கள் மண்டையில் உறைக்கவில்லையா? எவ்வளவு காலம் ஈகோ வெறிபிடித்து பகைமை கொண்டாடுவீர்கள். இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை ஒடுக்க யார் காரணம்?. பெண் தீவிரவாதி சாத்விக்கு ம.பி.யில் நான் எம் எல் ஏ சீட் தருகிறேன் என்றும் மஹாராஷ்டிராவில் பத்திரிகை கௌரவிப்பதும் திமுக, காங்கிரஸ் அதிமுக உள்ளுர சிரிப்பதும் தெரிகிறதா.
நாட்டிலே நடப்பதை மக்கள் உணரவில்லை. கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமா? எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள். ஆட்டுமந்தை கூட்டமும் மழையின் இடி சப்தம் கேட்டு மிரண்டு பார்க்கும். சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் இஸ்லாமியர்களின் கட்சி பிரதிநிதிகளின் குரலுக்கு ஆட்சியாளர்கள் மிரளும் வரை இந்த நிலை மாறாது.மாறாக ஒடுக்கிக்கொண்டேயிருப்பார்கள் என்று பாமரனுக்கும் தெரியும்.
இயக்கங்களே நீங்கள் என்ன செய்தீர்கள். கொஞ்சம் விழிப்புணர்வு வந்தது உண்மை. ஆனால் எத்தனை வருடங்களுக்கு இப்படி பிரிந்து போராட்டம் என்று கத்தி முதலிடத்தை பிடிக்க போட்டி போடுவீர்கள்?. பகைமையிலேயே இப்படியே இருந்து அடிபொடிகளின் உதவியோடு காசை பிரித்து சுகபோகமாக வாழ்ந்து காலத்தை கழித்துவிடலாம் என்ற எண்ணமா?. நீங்கள் எல்லா இயக்கங்களையும் ஜமாஅத்துகளையும் கலைத்து ஒன்றாகிவிடுங்கள் என்று ஒருவரும் அழவில்லை.
வரும் தேர்தல்களில் இஸ்லாமிய (ஒடுக்கப்பட்ட) மக்களின் தனிக்கட்சி தனிச் சின்னம் வேட்பாளர்களுக்கு அது எந்த இயக்கத்தின் கட்சியானாலும் சரி அது புதிய கட்சியானாலும் சரி மற்ற கட்சியோடு கூட்டு வைத்திருந்தாலும் சரி ஒட்டு மொத்த ஆதரவை அளித்து அவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டியது காலத்தின் உயிர்நாடி கட்டாயம். இதை மீறுகின்ற இஸ்லாமிய இயக்க ஜமாஅத்துகளை ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு துணைசெய்தார்கள் என்று இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சமுதாயமும் வரும் தலைமுறையும் சபித்துக்கொண்டிருக்கும். நல்ல முடிவை எடுத்து எல்லோரும் ஒருமித்து குரல் கொடுத்து வெற்றி பெறுங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.
அன்புடன் சகோ. ரஃபீக் உதுமான், நாகர்கோவில் (ரியாத்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment