Tuesday, November 18, 2008

என்னை யாரென்று என்னி என்னி நீ பார்க்கிறாய்



என் பெயர் அப்துல் ஸமது.

அபுதாபியில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் கணினி மென்பொருள் வல்லுநராக (Application Specialist) பணியாற்றி வருகிறேன்.


ஆயங்குடி Latitude 11.3 North, Longitude East 79.5 (Approximate Coordinates)

நான் பிறந்த ஊர். எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிறுந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்ளிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும்.

சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய எங்கள் ஊரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் (Pincode 608306) ஆகிய வசதிகள் உள்ளது.

அருகில் உள்ள சிறுநகரங்கள் காட்டுமன்னார்கோயில் மற்றும் லால்பேட்டை பேரூராட்சிகள். கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி மற்றும் நெய்வேலி எங்கள் ஊரைச் சுற்றி உள்ள பெறுநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் வேளை செய்து வருகிறார்கள்.

நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகளையும், ஐந்து கல்லூரி பேராசிரியர்களையும், இரண்டு மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்ச்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குறிய விசயமாகும்.

2 comments:

Anonymous said...

Please correct your spelling mistakes.

இனியவன் ஹாஜி முஹம்மது said...

Thanks brother / sister / Thirunangai,
We will make sure for the proof. I agree this mistake happend. Kindly appolozise it