Tuesday, November 18, 2008

தங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்







தங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்…!

தங்கத்தில் முதலீடு செய்யும் தருனம்…!உலகில் பொருளாதார தடுமாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.நாம் ஊடகங்களில் தினம் பார்த்து வருகிறோம்…நாம் இந்த தருணத்தில் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது.






ஏற்கனவே முதலீடு செய்த பங்கு சந்தை சரிந்து இருக்கிறதுஎன்ன செய்வது என்று தெரியாமல் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்…பெரும் பணத்தை முதலீடு செய்தவர்களுக்குத் தான் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கிறது.






எப்போதுமே எதிலுமே எச்சரிக்கையோடு நடப்பதே புத்திசாலிதனம். கையில் 1000 ருபாய் இருந்தால் அதில் 500 ஐ மட்டும் தான் முதலீடு செய்ய வேண்டும்.முதலீட்டில் நஸ்டம் வந்தால் மீதமுள்ள 500ஐ வைத்து நஸ்டத்தை சரிக்கட்டலாம்..ஆனால் ஆசை அதிகம் உள்ளவர்கள் இதில் விதிவிலக்கு..தற்போது தங்கம் விலை இறங்கி வருகிறது இதில் முதலீடு செய்யலாம்.ஒரு ஆண்டுக்குப் பின் இது நிகழ்ந்துள்ளது.






ஆபரண தங்கமாக வாங்குவதை விட தங்க கட்டிகளாக தங்க காசுகளாக வாங்க வேண்டும் இதில் செய்கூலி இல்லை.ஆபரண தங்கத்திற்கு செய்கூலியும் சேதாரமும் உண்டு.






தங்கக் காசின் எடை -4 கிராம் 8 கிராம் 22 கேரட்ஒரு அவுன்ஸ் என்பது-3 1 . 10 கிராம் 24 கேரட் (சுத்தமான) தங்கம்.






டிடி பார் என்பது – 1 1 6 . 64 கிராம் 24 கேரட்டிடி பார் என்றால் -டென் தோலா பார்- இதை பிஸ்கட் என்பார்கள்.






ஒரு தோலா என்பது 11.664 கிராம் எடைக் கொண்டதாகும்.






தங்கத்தின் விலை அவுன்ஸ் கணக்கில் டாலரின் மதிப்பில்வணிகம் செய்யப்படுகிறது..தற்போது ஒரு அவுன்ஸின் விலை 730 டாலர்-இது ஒவ்வொரு நிமிடமும் விலை ஏற்றம் இறக்கம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும்.






இணையதளத்தில் கிட்கோ டாட் கம்மில் தங்கத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம் .






டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கத்தை ஆன்லைனில் வாங்க விற்க முடியும்…அது இல்லாதவர்கள் நகை வியாபாரிகளிடம் தங்க பிஸ்கட்டை வாங்கலாம்.






விலை ஏறும் போது அவர்களிடமே விற்கலாம்.தற்போது சந்தை சூழ்நிலையில் தங்கத்தின் முதலீடு லாபம் தரும் என்பது வணிக மேளாளர்களின் கணிப்பு ஆகும்…






Written By: Kiliyanoor - Ismath Kavingar

No comments: