Friday, November 14, 2008

சுயநலத்தோடு வாழ்வது புண்ணியம் அல்ல

சுயநலத்தோடு வாழ்வது புண்ணியமும் அல்ல... புத்திசாலித்தனமும் அல்ல!

ஒரு மனிதன் ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையே கைப்பற்றினாலும் அதில் என்ன பெருமை இருக்க முடியும்..? மற்றவர்களுக்கு உதவுவது என்றைக்காவது பலனளிக்கும். இது சத்தியம்.

ஒரு பிரிட்டிஷ் செல்வந்தர், தன்குடும்பத்தோடு ஸ்காட்லாந்துக்கு பிக்னிக் போனார். அங்கே, ஒரு தோட்டத்தில் விளையாடப் போன அவருடைய ஏழு வயது மகன் ஏரியில் தவறி விழ, தொலைவிலிருந்து ஓடிவந்த ஓர் ஏழைச் சிறுவன் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பணக்காரப் பையனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

மறுநாள் அந்தச் சிறுவனைச் சந்தித்து நன்றி தெரிவிக்கப்போன அந்தச் செல்வந்தர், அந்தக் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அந்தப் பையனின் எதிர்காலம் பற்றிக் கேட்க... என் அப்பாவைப் போல நானும் விவசாயி யாக வேண்டியதுதான் சார்! என்றான் அவன்.

படிக்க ஆசையில்லையா..? என்று இவர் கேட்க, ஆசைதான்! டாக்டராக வேண்டும் என்று ஆசை. வசதியில்லை! என்றான் சிறுவன். ஏன் டாக்டராக முடியாது..? நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்றார் பணக்காரர்.

அதிலிருந்து, அவனுடைய கல்விச் செலவு அத்தனையும் ஏற்றுக்கொண்டார். வருஷங்கள் கழிந்தன...1943-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். வடஆப்பிரிக்காவில் தங்கியிருந்த (பிரிட்டிஷ் பிரதமர்) வின்ஸ்டன் சர்ச்சில் திடீரென நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். பிழைப்பதுஅரிது என்றார்கள். பென்சிலின் என்று புது மருந்து ஒன்றை அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். அதுஒன்றுதான் காப்பாற்றும் என்று யாரோ தகவல் சொல்ல, ஃப்ளெமிங்குக்கு அவசர அழைப்புபோனது.

உடனே ஒரு ஸ்பெஷல் விமானத்தில் பறந்து வந்த ஃப்ளெமிங், பிரிட்டிஷ் பிரதமருக்கு சிகிச்சை தர... உயிர்பிழைத்த சர்ச்சில், ஃப்ளெமிங்கைப் பார்த்து நன்றியுடன் இரண்டாவது முறை என்னைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்! என்று புன்னகைத்தார்.


Source : MI.Naseerudeen, United Arab Emirates

No comments: