Saturday, December 6, 2008

என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்!!!


என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்!!!


பதினாறு ஆண்டுகள் ஆகிறது.ஆனாலும் அந்த ரணங்கள் இன்றும் நம்மை விட்டு அகலவில்லை. சர்வதேச மீடியாக்களை சாட்சியாக வைத்து நீதி மன்ற உத்தரவுகளை காலில் மிதித்து ராணுவமும் போலீசும் வேடிக்கை பார்க்க பண்டார பரதேசி ஹிந்துத்துவா வெறி நாய்கள் அல்லாஹ்வின் இல்லமாம் பாபரி பள்ளியை இடித்து தரை மட்டமாக்கினர்.
பாபரியை மட்டுமா இன்னும் நூற்றுக்கணக்கான அல்லாஹ்வின் இல்லங்களும் லட்சத்திற்கும் மேற்ப்பட்ட நம் உம்மத்தின் உயிர்களும், நூற்றுக்கணக்கான நம் சகோதரிகளின் மானமும், கோடிக்கணக்கான ரூபாய் ம், மதிப்புடைய சொத்துகளையுமல்லாவா அவர்கள் சூறையாடினர்.தொடரும் இனக்கலவரங்கள், தீவிரவாதி என்ற முத்திரை அரசாலும் நீதிமன்றங்களாலும் அநீதிக்காளக்கப்படும் அலங்கோலம், என்கெள்ணடரில் பலிகளாக்கப்படும் பரிதாபம் என்னவென்று சொல்ல நம் உம்மத்தின் சோகத்தை?.
ஆண்டுதோறும் சடங்கிற்காக நடத்தப்படும் ஆர்ப்பாடங்களும், போராட்டங்களும், பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகளால் எழுப்பப்படும் கடமைக்காக கேட்கப்படும் கேள்விகளும் அதைத்தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதும் தானே தொடர்கிறது இத்தனை ஆண்டுகளாக.
இதற்கு என்ன தீர்வை சமுதாயம் வைத்திருக்கிறது. போராட்ட வழிமுறைகள்தான் மாறுகிறதே தவிர சிந்தனை ஏன் மாறவில்லை? கொள்கை, அமைப்பு, கோட்பாடு என்று மோதிக்கொண்டு சமுதாயத்தை கேவலப்படுத்துவதும் அதை தங்களது வார்த்தை ஜாலத்தால் நியாயப்படுத்துவதும்தானே சமுதாயத்தலைவர்கள் சாதித்தது.ஏமாற்றும் அரசியல்வாதிகளால் நாம் ஏமாற்றப்படுகிறோமென்று தெரிந்தும் சமுதாயத்தின் ஓட்டுக்கள் கிடைக்கும் சில்லறை பதவிகளுக்கும் ஆதாயத்திற்கு விற்கும் இவர்களா பாபரிப்பள்ளியை மீண்டும் கட்டப்போகிறார்கள்.
மாதமொணிற்கு புது புது அரசியல் கட்சிகள் வேறு.சிந்திக்குமா முஸ்லிம் சமூகம்.குறிப்பாக இளைஞர்பட்டாளம்.காலத்தையும் பொருளாதாரத்தையும், ஆற்றலையும், அறிவையும் இவர்களுக்கு அடகுவைத்தது போதும் என்று எப்பொழுது நீங்கள் முடிவெடுக்கபோகிறீர்கள். திராணியில்லாத்தலைமையை தூக்கியெறியுங்கள்.அல்லாஹ் நாடினால் முடியும் என்று முடிவெடுங்கள்.
பாபரியை எப்படி மீட்கலாம் என்று சிந்தியுங்கள்.
யார் கோழைத்தனம் இல்லாத இறையச்சமுடைய நம்பிக்கைக்குரிய பதவிக்கு ஆசைப்படாதவர் என்பவரை ஆய்வுச்செய்து தேர்ந்தெடுங்கள்.இங்கு வார்த்தை ஜாலத்திற்கோ எழுத்துவன்மைக்கோ முக்கியம் அல்ல.அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய தலைவர், அர்ப்பணிப்புள்ள தலைவர்கள், பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து நிதானமாக திட்டமிடுங்கள்.
திட்டங்களை தீட்டுங்கள். சமுதாயத்திற்கு எது தேவையோ அதனைச்செய்ய அல்லாஹ்வின் பாதையில் முயலுங்கள்.


இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

No comments: