நபி இபுராஹிமுக்கு நழுவிப்போன நனவில்அவரைத் தழுவிக் கொண்டதுநான்-என்ற எண்ணம்…
தவமிருந்து தரித்த தனையனைதத்துவமறந்து தழுவியதால்"அல்லாஹ"; ஆணையிட்டான்அறுத்து விடு….
அவரின்ஏக உள்ளமையில்ஏற்பட்ட தடுமாற்றம் பெற்றபாசம் படைத்தவனைஎண்ணத்திலிருந்துபாலையாக்கியது…
நான்-என்ற சுயநலத்தைதியாகம் செய்துநாம் என்ற சுயத்தை அருந்த வேண்டிய ஆணை…
இருப்பதும் இல்லாமையும்இறையாகும் போதுஅறுப்பதும் அறுக்கப்படுவம்வேறாகுவதில்லை….
அறுப்பது நானாகஇருந்தாலும்அறுக்கப்படுவதில்நான் இருக்கவேண்டும்அதுதான்குர்பான்…
இது தீர்க்கதரிசிக்கு இறைவன் தந்த தீர்ப்புமட்டுமல்லதீனோருக்கு இட்ட கட்டளை….
-கிளியனூர் இஸ்மத்
http://www.kiliyanur-ismath.blogspot.com/
No comments:
Post a Comment