Thursday, January 1, 2009

சர்வ சக்தியுள்ள கடவுள் V கவலையை ஒழிக்க கடவுளை ஒழி

"வயதில் அறிவில் முதியார் நாட்டின்வாய்மைப் போருக்கு என்றும் இளையார்உயர் எண்ணங்கள் மலரும் சோலைஓதும் இராமசாமி வாழ்க"
என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட
தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில்தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்குதரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெறவேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------கடவுள்
உலக மாறுதலை வளர்ச்சிக்கும் பயன் படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ளஅறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு, கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல்செய்வதும் பெரிதும் கடவுள் - கடவுள் சக்தி - கடவுள்செயல் என்பவவை போன்றமுட்டாள்தனமான கருத்துக்களும் நம்பிக்கையுமேயாகும்.
கடவுள் எண்ணமோ, மனித சக்திக்கு மேம்பட்ட தெய்வீக சக்தி என்கின்ற எண்ணமோமனிதனுக்கு இல்லாமல் இருந்திருக்குமானால், இன்று மனிதன் குறைந்தது இந்தமூவாயிரம் - நாலாயிரம் ஆண்டுகளில் அவனது அறிவின் பயனாய், சிந்தனாசக்தியின் பயனாய் 500 ஆண்டுகளாவது உயிர் வாழத்தக்க தன்மையைஅடைந்திருப்பான் இறக்கை இல்லாமலேயே ஆகாயத்தில் பறக்கும் சக்தியைஅடைந்திருப்பான் என்பதோடு, கவலை இல்லாமலேயே வாழுந் தன்மையையும்அடைந்திருப்பான்.
சர்வ சக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது. எல்லாம் கடவுள்செயல்எனக்கருதும் மக்களில் யாருக்கு துக்கமும் ஏமாற்றமும், கவலையும் இல்லாமல்இருக்க முடிகிறது?
கவலையை ஒழிக்க கடவுளை ஒழி
எனவே, மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்கு துக்கமும் கவலையும்இல்லாமல் இரும்பதற்கும், “சர்வ சக்தி”க் கடவுள் ஒருவர் இருக்கிறார்என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்தாக வேண்டும்.
கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கிஅவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதைவிட உலகில் ஜீவகாருண்யத் தன்மைவேறு இல்லை என்றே சொல்லுவேன்.
மோட்சம், என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், ‘ துக்கநாசம் சுகப்ராப்தி’’ என்றுதான் சொல்லப்படுகிறது.
ஞானிக்கு கடவுள் இல்லை
இச்சொல்லுக்கு ஆதாரப் பூர்வமான பொருளும் இதுவாகத்தான் இருந்து வருகிறது.இந்நிலைக்கு அறிவுதான் காரணம். அதாவது, ஞானந்தான் என்றும் காணப்படுகிறது.இதனாலேயேதான்,”ஞானிக்குத் துக்கமில்லை-கவலையில்லை” என்றுசொல்லப்படுவதோடு,
ஞானிக்குக் கடவுளும் இல்லை; கல்லெடுப்பும் இல்லை என்றும்சொல்லப்படுகிறது.
ஞானி என்றால் என்ன பொருள்? அவன் யார் என்று பார்த்தால் - ஞானமுடையவன்ஞானி; புத்தியுடையவன் புத்தன் - அறிவை உடையவன் அறிவன் என்பதாகும்இவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமல் போனதற்குக் காரணமென்ன?
கடவுள் காணாது போனதேன்?
அறிவையோ, புத்தியையோ, ஞானத்தையோ கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள்என்றசொல்லே தென்படுவதற்கு இல்லாமல் போய் விடுகிறது. ஞானிக்குக் கடவுள் இல்லைஎன்பது மாத்திர மல்லாமல், “துறவிக்கு கடவுள் இல்லை” என்று சொல்லப்படுகிறதல்லவா? அதன் பொருள் என்ன? துறவி என்றால் ஆசை அற்றவன். பற்றுஅற்றவன் என்பதுதான் பொருள். துறவிக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை.அவனுக்கு எதைம்பற்றியும் ஆசை இல்லை. ஆனதால், அவனுக்கு கடவுளைப் பற்றியகவலை இல்லை என்பதோடு அவனுக்கு கடவும் தேவையும் இல்லை; இயற்கையோடு இயைந்துகொள்ளுகிறான்.
மனிதத் தன்மைக்கு.....
எனவே, இயற்கையை நல்ல வண்ணம் உணர்ந்து கொள்ளுவது, அதற்கேற்ப தனது வாழ்வைஅமைத்துக் கொள்ளும் அறிவுதான் முன் குறிப்பிட்ட ஞானமாகும் எனவேபகுத்தறிவு பெற்ற மனித சமுதாயம் “மனிதத்தன்மை” அடைவதற்குபகுத்தறிவுவாதியாக, அதாவது,பஞ்சேந்திரியங்களுக்கு புலப்படாத,தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை அதை எவை ஆனாலும், சிந்திக்காமலும்,அவற்றைப்பற்றிக் கவலைப்படாமலும் இருப்பதுதான் மனிதத் தன்மையாகும்.
-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-

3 comments:

Anonymous said...

Very good!

Anonymous said...

If you could give more detailed information on some, I think it is even more perfect, and I need to obtain more information!
Personalized Signature:金陵热线棋牌游戏中心,名城苏州游戏中心,云南信息港游戏,彭城视窗棋牌游戏中心,江苏互联星空棋牌游戏中心,广西休闲游戏中心,安徽棋牌游戏中心

Anonymous said...

Very rich and interesting articles, good BLOG!
fishing net