Wednesday, January 14, 2009

நான் ஒரு ஃபாலஸ்தீனியனாக இருந்தால்..... (யூஸ்ஸி சரித்)








(யூஸ்ஸி சரித் - இஸ்ரேலிய சுற்றுச்சூழல் அமைச்சராக இட்ஸாக் ரபீன் மற்றும் ஸிமன் பெரஸ் ஆகியோரின் (1993-96) அமைச்சரவைகளிலும், கல்வி அமைச்சராக (1999-2000) யகுத் பர்ராக் அமைச்சரவையிலும் பணியாற்றிய முன்னாள் மூத்த இஸ்ரேலிய அமைச்சர்)



தேசிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்பில், இந்த வாரம் காஸா போர் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினேன். அம்மாணவர்களில் ஒருவர் கூறிய யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான ஒரு கருத்து என்னை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச் சென்றது. என் புறத்திலிருந்து எவ்வித தூண்டுதலுமின்றி அவர் தன் மனம் திறந்து வாக்குமூலம் அளித்தார். 'நான் ஒரு இளம் ஃபாலஸ்தீனியனாக இருந்தால்... நான் கடுமையாக யூதர்களை எதிர்த்துப் போராடுவேன். அது தீவிரவாதமாக கணிக்கப்பட்டாலும் சரியே.




இதைத் தவிர்த்து வேறு கருத்தை எவர் கூறினாலும், அவர் நிச்சயமாக பொய்யுரைக்கிறார்'.அம்மாணவர் கூறிய கருத்து ஓரளவு பிரபலமானதே இதற்கு முன்பு நான் இவ்வாறு வேறு சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். சுமார் 10 வருடங்களுக்கு முன் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் யகுத் பர்ராக் கூறியது எனக்கு நினைவிற்கு வந்தது.




அப்போதைய தேர்தலில் பிரதம வேட்பாளராக களம் கண்ட பர்ராக் 'ஹாரட்ஸ்' பத்திரிக்கை நிருபர் ஜிடியோன் லெவி, - ஒருக்கால் யகுத் பாலஸ்தீனத்தில் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் எனக் கேட்ட போது, யகுத் பர்ராக் தயங்காமல் பதிலளித்தார் - ஓரு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பேன்.இது என்னுடைய பதிலல்ல. பயங்கரவாதம் என்பது தனிநபர் சார்ந்ததாக இருந்தாலும், இயக்க அல்லது அரச பயங்கரவாதமாக இருந்தாலும், அவை அனைத்தும் எப்பொழுதும் பொதுமக்களை பலி கொள்ள கூடியதாகவே உள்ளது.




பயங்கரவாதம் என்பது பாவத்திலிருந்து ஒதுங்கிச் செல்லும் துறவிக்கும், பாவிக்கும் வித்தியாசம் காண இயலாத குருட்டுத்தனம் மாத்திரமல்ல, ரத்த வெறி மூளைக்கு ஏறிய வெறியர்களின் செயல். அப்பாவிகளின் இரத்தம் ஓட்டப்படும் பொழுது எவர் அதற்கான விலையை தரமுடியும் ?




எப்பொழுது?.உலகிலுள்ள எல்லாவிதமான பயங்கரவாதத்தையும் நான் வெறுக்கிறேன். அது என்னவிதமான குறிக்கோளுக்காக போராடினாலும் சரி. என்றாலும், ஆக்கிரமிப்பிற்கு எதிராக குடிமக்கள் எடுக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் நான் ஆதரிக்கிறேன்.
வெறுப்பை உமிழும் ஆக்கிரமிப்பாளர்களுள் இஸ்ரேலும் ஒன்றுதான். எனவே பாலஸ்தீனர்களின் கிளர்ச்சி அதிக நீதியானதும், தீர்வை தரக்கூடியதுமாகும். இது மனிதாபிமானத்திற்கு ஊறு விளைவிக்காது. தவிர தீவிரவாதி ஆகமுடியாத அளவிற்கு எனக்கு வயதாகிவிட்டது என்றும் சொல்லலாம்.ஆனால் சமகால நிகழ்வை கவனித்தால், ஒரு சாதாரண இளைஞனிடம் எனது கருத்துக்கு மாற்றமான உடனடி பதில், அதுவும் ஒரு இஸ்ரேலின் லெப்டினண்ட் ஜெனரலின் வாயிலிருந்து வெளிப்பட்ட விதம் தான் ஆச்சரியத்திற்குரியது.
ஒவ்வொருவரும் தனது மகன் தவறான கூட்டத்துடன் சேர்ந்திருக்கிறானா என கவனிக்க வேண்டும். மறுபுறத்தில், நாம் பாசத்தோடு வளர்க்கும் நமது மகன் தேடப்படும் ஒரு தீவிரவாதியாக இருந்துவிட்டால்... கிட்டத்தட்ட நிலைமை அப்படிதான் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் அழுத்தத்திற்குள்ளான அகதிகளின் நான்காவது தலைமுறையினர். மீட்சி எப்பொழுது கிடைக்கும்? இவர்களுக்கு தளைகளை உடைத்தெறிவதைத் தவிர வேறு என்ன இழப்பு ஏற்படும். அவனது அப்பா, அம்மாவாகிய நாம், பாதை மாறிய அவனுக்;காக கண்ணீர் வடிக்கக் கூடும்.
ஏனெனில் அவன், நம்மையோ அல்லது அவனது தாய் நாட்டையோ காண மீண்டும் வரப்போவதில்லை. மாறாக அவனது புகைப்படம் ஒரு தியாகியாக அல்லது வீரனாக நம் வீட்டு சுவற்றில் தொங்கும். அவன் தனது திட்டங்களை செயல்படுத்தும் முன் நம்மால் அவனைத் தடுக்க முடியுமா ? நாம் விரும்பினால் அவனை பிடீத்து வைக்க முடியுமா ? அவனது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?
யகுத் பர்ராக் அவருடைய நாட்களில் எதனைப் புரிந்து கொண்டார்? அது என்ன நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றா ?எதிர்காலம் இல்லாத இந்த இளைய சமுதாயம், தொடுவானம் வரை தென்படாத அந்த எதிர்காலத்தையே தொலைக்க தயாராகின்றனர். அவர்களது கடந்த காலம் நெருக்கடி மிகுந்தது. நிகழ்காலமோ சாபத்திற்குரியது.
வேலை கிடைக்காத விரக்தியில் உழலும் இவ்விளைஞர்கள் தங்களது விடியலைத் தேடி ஓடு;கின்றனர். அவர்களது வாழ்வை விட இறப்பே மேலானது. அவர்களது இறப்பு ஒடுக்கப்பட்டவர்களான நமது வாழ்வைவிடவும் மேன்மையானது, என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பிறந்ததிலிருந்து இவ்வுலகை விட்டுச் செலலும் வரை அவர்களுக்கு முன்னால் விரிந்துள்ள அவர்களது பூமியல் அவர்கள் சுதந்திரமாக இல்லை.நல்ல மற்றும் மோசமான மனிதர்கள் என்று ஒன்றுமில்லை.
தலைவர்களின் பொறுப்புணர்வாலும், பொறுப்பற்ற தன்மையிலும் தான் அவை அமைந்திருக்கின்றன. நம்மிடையே கணிசமான எண்ணிக்கையில் போராடிக் கொண்டிருக்கும் இவர்களின் இடத்தில் நாம் 41 ½ வருடங்களாக இருக்க முடியுமா ?
நன்றி : ஹாரிட்ஸ் (இஸ்ரேலிய ஆங்கில நாளிதழ்)
தமிழில் : அபூஹாஜர் http://tamilnadus.blogspot.com/2009/01/blog-post_9744.html

ஷேக் அப்துல் காதர்

No comments: