Saturday, January 31, 2009

உப்பு... சில உண்மைகள்!!! ???


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அது - உப்பு!


எவ்வளவு ருசியாக சமைத் தாலும் உப்பில்லாவிட்டல் அதை வாயில் வைக்க முடி யாது என்பது உண்மைதான் அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகாமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்து விடும்.


உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக்கொள்ள ஆரம்பிக் கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச் சினைகள், சிறுநீரகக் கற்கள், ஏன் பக்கவாதப் பாதிப்புகூட ஏற்படும்.
அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கியக் காரணம். இந்த அடைப்பு நீடிக்கும்போது இதய நோய்கள் மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும்.


32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்து வதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தள மாகவும் ஆகிறது என்பதை அறிந்தனர்.


பரம்பரை ரீதியாக இதயநோய் பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப் பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால், நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகள் உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டி ருக்கிறது.


உங்களுக்கு அடிக் கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலம் கூடுதல் உப்பு உங் களுக்குச் செல்கிறது. உடனடி உணவுகளிலும், பேக்கிங் செய் யப்பட்டுவரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாது காக்கும் பிரிசர்வேட்டிவ் ஆக உப்பு பயன்படுத்தப்படுகிறது.


பாக்கெட் பாப்கார்ன், ஊறு காய், சாஸ், பதப்படுத்தப் பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக் கும் பாலாடைக் கட்டி, வெண்ணெய் போன்றவற்றில் கூட உப்பு இருக்கிறது. இப் படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படுவற்குக் காரணம், அது எளிதாகவும், மலிவாக வும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பதுதான்.


சரி, உப்பினால் ஏற்படும் உபத்திரவங்களைத் தவிர்ப்பது எப்படி?


உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளி யேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.


காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்ற வற்றைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள். நிறைய காய்கள், பழங்கள் சாப் பிடுங்கள். உடம்புக்குத் தேவை யான நீர்ச்சத்தை அவை அளிக்கும்.


உடம்பில் தண்ணீர் தேக் கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல் போன்றவை மூலம் போக்க லாம். பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.. சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல் போகலாம்.


உப்பைக் குறைத்து சுவையை குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடு படுங்கள். அதற்கேற்ப நறு மணப் பொருட்கள் போன்றவற்றைச் சேருங்கள்.
Thanks to Mr. Thambidhurai. Ansari, Doha - Qatar

No comments: