Monday, January 12, 2009

படுகொலைக் களமாகும் பலஸ்தீனம்! - வெ.ஜீவகிரிதரன்









அபு அம்ரா அமைதியாக தன் வீட்டினிலே உறங்கிக் கொண்டிருந்த 18-வயது இளம் பெண்- மருத்துவமனை கட்டிலில் உடலெங்கும் காயங்களுடன் கை, கால்கள் முறிந்த நிலையில் கிடத்தப்பட்டிருக்கிறாள். அவளுடைய 17-வயது சகோதரன் எஹியா உயிரற்ற பிணமாக கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டான். உம்மு மஹ்மூது தஸ்பி 47 வயதான தாய்-தன் குழந்தையுடன் இரவு முழுவதும் வெட்ட வெளியில், கொட்டும் மழையில் தவித்து நின்றாள். காலையில் தன் வீடு முழுவதும் சிதறிக் கிடந்த சன்னல் கண்ணாடித் துண்டுகளை பெருக்கித் தள்ளுகிறாள். உரூத்- பள்ளி மாணவி குப்பைக் குவியலாய் கிடக்கும் தன் வீட்டின் இடிபாடுகளில் தன் புத்தகப்பையைத் தேடிக்கொண்டிருக்கிறாள். டிசம்பர் மாதத்தின் பனிக்கால பண்டிகை கொண்டாட்டங்களில் உலகமே திளைத்திருக்கிறது. ஹகிறிஸ்துமஸ் தாத்தா-வின் பரிசு மழை தேவலோகத் திலிருந்து பொழியாதா என உலக மக்கள் ஆர்வத்துடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறனர்.

ஆனால், பாலஸ்தீனக் குழந்தைகள் எந்த நேரம் வானத்திலிருந்து போர் விமானங்கள் அள்ளி இறைக்கும் குண்டுகள் வந்து தம் வீட்டை சாம்பல் மேடாக்கு மோ என்ற அச்சத்துடன், இரவு முழுவதும் அந்த கறுப்பு வானத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க ஏவல் நாய் இஸ்ரேல் டிசம்பர் 28ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரை போர் விமானங்கள், ஏவுகனைகள் மூலம் தாக்கத் தொடங்கிவிட்டது.


கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1000 இலக்குகளை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஹெலிகாப்டர்கள், உளவு விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன், மிகத் துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஜி.பி.எஸ். வசதி படைத்த விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன. இஸ்ரேலின் இந்த பயங்கரவாத தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளனர்.


குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், என்ற பாரபட்சமின்றி, இரவிலே வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் வீட்டைவிட்டு ஓடவேண்டும். இல்லையெனில் வீட்டோடு சமாதியாக்கப்படுவார்கள் என்ற நிலையில் காசா நகர மக்கள், எந்த நேரத்தில் ஏவுகனை தன் வீட்டின் மீது பாயுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர்.


தங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் மாற்று இடமும் இல்லை என்பதால் வெளியேறவும் முடியாத நிலை. ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிஸார் ரய்யான் ஜபாலியா அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். புத்தாண்டு தினத்தன்று அவருடைய குடியிருப்பையும் திட்டமிட்டு தாக்கின. இஸ்ரேல் ஏவுகனைகள். இதில் ரய்யான் தன் மனைவி, குழந்தைகளோடு கொல்லப்பட்டார். காசா நகரின் பாராளுமன்ற கட்டிடம், இராணுவ நிலைகள், போலிஸ் நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.


காசா நகருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வழிகள் முழுவதும் தகர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் கேடுகெட்ட இனப்படுகொலையை தட்டிக்கேட்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆண்மையில்லை. இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹஹஅனைத்து விதமான வன்முறைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது.


இந்த அறிக்கை-பாலஸ்தீன குழந்தைகள் பயிலும் கல்விக் கூடங்களின் மீது விழும் ஏவுகனைகளை தடுத்து நிறுத்துமா? காசா நகரில் வருங்கால பாலஸ்தீன சந்ததிகளே இல்லாதொழிந்திடும் ஈனச் சதியில் இஸ்ரேல் இறங் கியுள்ளது. இளம் குழந்தைகள் பயிலும் நர்சரிகள், பள்ளி கள் மேல் குண்டுகள் வீசப்படுவது அங்கே மிகவும் சகஜம். இது குறித்து ஹஹமனித உரிமை முழக்கமிடும் அமெரிக்காவோ அதன் துதிபாடிகளான மேற்கத்திய நாடுகளோ ய+னிசெப் நிறுவனமோ இதுவரை வாய் திறந்ததில்லை.


காசா நகர குழந்தைகள் உலகின் மற்ற குழந்தைகள் பெற்றுள்ள ஹஹவாழும் உரிமை இல்லாதவர்களாகவே உள்ளனர். காசா நகர குழந்தைகள் பிறக்கும்போதே ஹஹமரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக பிறக்கின்றனர். என்றைக்கு மரண தண்டனையை இஸ்ரேல் நிறை வேற்றுமோ? என ஏவுகனைத் தாக்குதலை எதிர்பார்த்தே வாழ்கின்றனர், வளர்கின்றனர். இவர்களுக்கு மற்ற பிள்ளைகளைப் போல என்ஜினியர் ஆகவேண்டும், டாக்டர் ஆக வேண்டும், பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கிடையாது உயிரோடு வாழவேண்டும் என்பதுதான் மிகப் பெரிய ஆசை!


ஈத் பெருநாளிலே தனக்கு அப்பா நல்ல சட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும்,, பரிசுப் பொருள் வாங்கித் தரவேண்டும் என பாலஸ்தீனக் குழந்தை ஆசைப்படுவதில்லை அந்த பெருநாளிலாவது நம் மேல் ஏவுகணைகள் பாயாமல் இருக்க வேண்டுமே என்றுதான் பிரார்த்திக்கின்றது. இஸ்ரேலின் தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக் கிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அங்கே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


இந்த தேர்தலில் தங்களின் வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் முக்கிய அரசியல் வாதிகள் ஒன்று கூடி முடிவெடுத்தது தான் இப்போது நடந்து கொண்டிருக்கு காசா நகரத்தின் மீதான தாக்குதல் என சொல்லப்படுகிறது. கதிமா கட்சியின் தலைவியும், இஸ்ரேல் வெளிவிவகாரத் துறை அமைச்சருமான டிசிப்பி லிவினி மற்றும் லேபர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சருமான எஹத் பராக் ஆகிய இருவரின் தேர்தல் சதித்திட்டம் தான் இந்த தாக்குதல்.


ஊழல் புகாரில் சிக்கியுள்ள இஸ் ரேல் பிரதமர் எஹ{த் ஒல்மர்ட் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மக்கள் மத்தியில் தன் செல் வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டி இத் தாக்குதலுக்கு அனுமதி அளித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இஸ்ரேலை ஆளும் அரசியல்வாதிகள் பாலஸ்தீனத்தை தாக்கி அழித்து தங்களின் தேச பக்தியை தம் நாட்டு மக்களிடம் நிரூபிப்பது வழக்கம். இம்முறை நடக்கும், தாக்குதலும் இந்த ஈனத்தனமான அரசியல் வாதிகளின் செய்கைதான் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.


தன் ஏவல் நாய் இஸ்ரேல் நடத்தும் இந்த கொடூரமான, நியாயமற்ற, காட்டு மிராண்டி தாக்குதலை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்து அறிக்கை வெளி யிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகனைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்.


உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா இத்தாக்குதல் பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். ஈராக் மீதான போர், இஸ்ரேலுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் என பல்வேறு நடவடிக்கைகளால், அரபு நாடுகளில் ஜார்ஜ் புஷ் தன் செல்வாக்கை தொலைத்து விட்டார். புதிதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பாரக் ஒபாமா இதிலிருந்து மாறுபட்டிருப்பார் என அரபு நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன.


இந்த நேரத்தில் ஒபாமாவின் மௌனம் அவர் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அர்த்தமளிக்கும் என்கிறார் ஹகான்ப் பிளிக்ட்ஸ் போரம் என்ற அமைப்பைச் சேர்ந்த பால் வுட்வேர்ட். இவருடைய இந்த அமைப்பு ஹமாஸ் போன்ற இஸ்லாமிய அமைப்பு களைப் பற்றிய மேற்கத்திய நாடுகளின் தவறான கணிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பாகும்.


கெய்ரோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முஸ்தபா அல் சயீத் கூறுகையில் ஒபாமாவைச் சுற்றி உள்ள நபர்கள் இஸ்ரேலுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால் எந்த நிலையிலும் அவர்கள் இஸ்ரேலின் கருத்துக்கு மாற்று சொல்ல துணிய மாட் டார்கள் எனக் கூறுகிறார். தற்போது பாரக் ஒபாமா தன் வெளி விவகார கொள்கையை தீர்மானிக்கும் குழுவில் ஹிலாரி கிளின்டனை அமைச்சராகவும், ராஹ்ம் இம்மானுவேலை முதன்மை செயலாளராகவும் தெரிவு செய்திருப்பதை சுட்டிக் காட்டியே இதைக் கூறுகிறார்.


வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும் வீரம் விளைந்த பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் தம் வேறுபாடுகளை புறம்தள்ளி ஒன்றுபட்டு எழுந்து நின்றால் உலகமே அவர்களின் பின்னால் நிற்கும். சர்வதேச பயங்கரவாதி அமெரிக்காவிற்கும் அதன் அடியாட்களுக்கும் முடிவு கட்டும் பயங்கரவாதம்-மனித குல நாகரிகத்துக்கு எதிரானது. பயங்கரவாதத்தை எதிர்த்து மனித நேய போராட்டத்தில் நாமும் கரம் இணைப்போம். பாலஸ்தீனம் காக்க குரல் கொடுப்போம். ஒரு நாடும், இனமும் அழியாமல் காப்போம். பாலஸ்தீன பாலகர்களின் உயிர் காப்போம்.



-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்






காஸா பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
காஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் பாலஸ்தீனரகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் மோதலில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் பதிமூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினர். BBC.Tamil.com 11-01-2009.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏகஇறைவனின் திருப்பெரால்...
இதுவரை காஸா நகரை அழித்ததுப் போதாது என்று இன்னும் பெரிய அளவில் திட்டம் தீட்டி காஸாவை முற்றிலும் துடைத்தெறிவதற்காக யூத சியோனிஸக் கும்பலால் மாபெரும் திட்டம் தீட்டப்படுகிறது.
இறைவன் நாடியது மட்டுமே நடக்கும் இறைவனுடைய நாட்டத்திற்கு மாறாக ஒன்று உலகில் நடைபெறவே செய்யாது.
இதற்கு பின் இறைவன் மிகப் பெரிய நன்மையை நாடி இருப்பான்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்து விட்டு அதை பின்லேடன் மீது பழியைப் போட்டு ஆப்கானிஸ்தானை வேட்டையாடினார்கள்.
அவர்கள் ஒரு புறம் ஆப்கானிஸ்தானை வேட்டையாடிக் கொண்டிருக்கும் பொழுதே மறுபுரம் வல்ல இறைவன் அவர்களுடைய சொந்த நாட்டில் பல்லாயிரக் கணக்கானோரை இஸ்லாத்தில் திருப்பி விட்டான்.
'' மால்கம் எக்ஸ் '' அவர்களுடைய இஸ்லாமிய பிரவேசப் புரட்சியின் போது அமெரிக்காவில் கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தை தழுவியதற்கு பிறகு பெருங் கூட்டம் இஸ்லாத்தை நோக்கி மீண்டும் வருவதற்கு யூத சியோனிஸர்களின் இரட்டை கோபுர தகர்ப்பு சதியே காரணமாக அமைந்தது. அவர்கள் ஒன்றை விரும்பினால் அதற்கு மாற்றமான ஒன்றை இறைவன் நிச்சயம் நிகழ்த்தியே தீருவான்.
அதனால் காஸாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படுகிறார்களே இதை இறைவன் பார்க்க வில்லையா ? என்று விரக்தி அடைய வேண்டாம்.
உறுதியாக இறைவன் பாரத்துக் கொண்டிருக்கிறான் அவன் நாடியதே அங்கு நடந்து கொண்டிருக்கிறது அவனுடைய நாட்டத்திற்கு மாறான வேறொன்று நடக்காது.
யஹீதிகளுடைய மிகப்பெரிய பிண்னடைவுக்கான தடத்தைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். என்பதில் நாம் உறுதியான மனநிலையில் இருப்பதுடன் சடைவடையாமல் இறைவனிடம் அந்த பாலஸ்தீன மக்களுடைய வெற்றிக்காகவும், இறைவனுடைய பேகாபத்திற்கு ஆளான யஹூதிகளுடைய தோல்விக்கு இறைஞ்சுவதிலிருந்தும் பின் வாங்கிட வேண்டாம்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. ''அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!2. அல்லாஹ் தேவையற்றவன்.3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.4. அவனுக்கு நிகராக யாருமில்லை. 112:5''எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.) 60:5
''எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!'' 18:10
...''எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்றனர்.2:250
எங்கள் இறைவா! எங்களுக்கு வரிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்). 2:286

No comments: