Friday, October 23, 2009

சுபாஷ் சந்திர போஸ் : மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரன்!




18th August 1945 - என்ன நடந்தது என்று தெரியுமா?
பள்ளிக்கூடங்களில் படித்த வரலாற்று புத்தகங்களில் சொல்லப்பட்டவை ஞாபகம் இருக்கிறதா?

அன்று தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்து போனார். (அல்லது இறந்து போனதாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது!)

தைவான் நாட்டின் இருந்த விமான நிலையத்தில் நடந்த விபத்தில் காயமடைந்தவர், எப்போது இறந்தார், அவரது அஸ்தி ஏன் டோக்யோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது?

டோக்யோ அருகில் இருக்கும் ரெண்கோஜி ஆலயத்தில் இருக்கும் அஸ்தி நேதாஜியுடையது அல்ல என்று கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் ஆனது ஏன்?

1999 - 2005 நடந்த முகர்ஜி கமிஷன் 2006-இல் முடிவை அறிவித்தது. அமெரிக்கா & தைவான் நாடுகள் அளித்த தகவல்களின்படி, தைவான் நாட்டில் அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் விமான விபத்து நடக்கவில்லை எனவும், ஜப்பானில் இருக்கும் அஸ்தி நேதாஜியுடையது அல்ல எனவும் அறிவிக்கப்பட்டது. 1945-லிருந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு ... என்ன ஒரு சுறுசுறுப்பு?

கமிஷன் அளித்த விசாரணை முடிவுகளை இந்திய அரசாங்கம் ஏற்காதது ஏன்? அதற்கான காரணங்கள் என்ன?

அங்கிருப்பது நேதாஜியின் அஸ்தி தான் என்றால், அதனை தகுந்த மரியாதையுடன் இந்தியாவுக்கு கொண்டு வராதது ஏன்?



அறுபது ஆண்டுகளில் 5 தலைவர்கள் மட்டுமே அங்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு வந்துள்ளனர்.

ராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
அடல் பிஹாரி வாஜ்பாய்
ஜஸ்வந்த் சிங்

மற்றவர்களுக்கு அவர் காந்தி, நேரு அளவுக்கு இந்திய விடுதலைக்கு போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பது தெரியவில்லையா? (இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்களிப்பை விட நேதாஜியின் பங்களிப்பு அதிகம் என்று வாதிடும் மக்களுமுண்டு)

2007-இல் ஜப்பானில் இருந்த போது, ஒரு ஜப்பானிய நண்பருடன் அந்த கோவிலுக்கு சென்றேன். சில வருடங்களுக்கு முன்பு அங்கே சென்ற அவருக்கு வழி மறந்து விட்டது. வழிப்போக்கர்களிடம் கேட்டுப் பார்த்தும் எந்த பயனுமில்லை. பத்து, பதினைந்து நிமிடங்கள் சுற்றி அலைந்து கொண்டிருந்தோம். (அது சரி, டோக்யோ இந்திய தூதரகத்தில் இருப்பவர்களுக்கே நேதாஜி அஸ்தி இருக்கும் கோவிலைப் பற்றி எதுவும் தெரியாத போது, சம்பந்தம் இல்லாத இவர்கள் எப்படிச் சொல்வார்கள்?) ஒரு வழியாக அந்த சின்ன கோவிலை கண்டு பிடித்து சென்றால் அது பூட்டப்பட்டிருந்தது.

நேதாஜி சிலையருகே ஒரு நிமிடம் நின்று அஞ்சலி செலுத்தி விட்டு, படிக்கட்டில் அமர்ந்த படி நண்பருடன் சிறிது நேரம் பேசி விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.






ஜப்பானில் இருக்கும் நண்பர்கள் / ஜப்பானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கே செல்ல விரும்பினால், Shinjuku-லிருந்து Ogikubo செல்லும் தொடர் வண்டியில் ஏறி, Higashi koenji நிலையத்தில் இறங்கி, Tokyo-to, Suginami-ku, Wada 3 Chome 30-20 என்ற விலாசத்தில் இருக்கும் புத்த கோவிலுக்கு செல்லவும்.

இந்த இடுகையை சரியாக அவரது நினைவு நாளன்று வெளியிட வேண்டுமென்று எண்ணினேன், முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.





Posted by Joe at Thursday, August 20, 2009 Reactions:

Labels: டோக்யோ, நேதாஜி, ரெண்கோஜி ஆலயம்
27 comments:
கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி said...
jai hind

21 August 2009 06:39
சுல்தான் said...
எல்லா காலத்திலும் தலைமையில் இருப்பவர்கள் அல்லது பிரபலமானவர்கள் தனக்கு பிடிக்காதவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் அழுத்தி வைப்பது நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் இந்த தலைவன் இறந்த பிறகும் அல்லது இறந்ததாக சொல்லப்பட்ட பின்னரும் உரிய மரியாதையைக் கொடுக்காதது மிகப்பெரிய அவலம்தான்.

ஆ.ஞானசேகரன் said...
ஒரு இறுக்கமான பதிவு நண்பா,...
நேதாஜியின் நினைவுகளை இந்திய அரசு மறக்கடிக்கப்பட்ட நுண் அரசியல் என்வென்றுதான் புரியவில்லை

Triumph said...
மன்னிக்க வேண்டும். எனக்கு உலகில் பிடிக்காத / இவர்கள் போல வாழவே கூடாது என்று நான் நினைக்கும் இருவரில் காந்தியும் ஒருவர். மற்றவர் புத்தர். எங்கள் வீட்டில் முதன் முதலில் வந்த ஆனந்த விகடனில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் வரை வந்த ஆனந்த விகடன்கள் எங்கள் வீட்டு லைபிரரியில் உண்டு. அதில் ஒன்றில், பகத் சிங்கின் சாவு பற்றி இருந்தது. அதாவது, காந்தி தான் காட்டிய அகிம்சையில் போராடாது ஆயுதம் ஏந்தியது பகத் சிங் போராடியதில் அதிருப்தி அடைந்ததால், பகத் சிங்கை காப்பாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் காப்பாற்றாது விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்கள். 21 வயதில் பகத் சிங் சாவதற்கு காந்தியும் ஒரு காரணமே.

யுத்தத்தினால், எல்லா புத்தகங்களும் அழிந்துவிட்டன. முடிந்தால், ஆனந்த விகடனிடம் அவர்களின் பழைய புத்தங்களை வாங்கிப் பாருங்கள்.

சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை, காந்தி பெற்றது போல் நினைத்து தேச பிதா என்று அவரைக் கூப்பிடும் முட்டாள்களுக்கு எப்போது தான் புத்தி வருமோ தெரியாது... எப்படி ஐயா காந்தியை மாகான் என்கிறீர்கள். தன் சுய கட்டுப்பாடைப் பரிசோதிப்பதற்காக, தன் மனைவியை வெற்றுடலுடன் இருக்கும் படி கூறி அந்த அறையில் அவரைத் தொடாது இரண்டு மூன்று நாட்கள் இருந்து காட்டினாராம். நான் கஸ்தூரி பாயாக இருந்து இருந்தால், செருப்பாலேயே அடித்திருப்பேன். தன் மனைவி ஒரு உயிருள்ள பெண் என்பதை மறந்து இப்படி அறையில் வைத்து தன் சுய கட்டுப்பாட்டை சோதித்த இராட்சதன் தேச பிதாவா?

நீண்டகாலம் தான் வாழ என்று தன் சலத்தை தானே குடித்த மாகான் அல்லவா காந்தி... எப்படி ஐயா அந்த அற்ப மனிதனை தேச பிதா என்று கூறுகிறீர்கள்.

ஞானம் பெற போகும் போது மனைவியிடமோ யாரிடமோ கூறாது திருட்டுத்தனமாக மாளிகையை விட்டு ஓடிய கோழையை கடவுள் என்று துதிக்கும் மூடர்களைக் காணும் போது எனக்கு வரும் கோபம் கட்டுக்கடங்காதது. கோழையை புத்தர் என்று போற்றுவதை எப்போதய்யா நிறுத்தப் போகிறீர்கள்.

இந்தியாவும் இலங்கையும் சாபப்பட்ட பூமி. என்ன செய்வது தலை விதி.. வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான்... .

கார்த்திகைப் பாண்டியன் said...
அருமையான பகிர்வு நண்பா.. தலைப்பில் இருக்கும் உண்மை சுடுகிறது.. நான் பெரிதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.. கடைசி வரை அவருடைய மரணம் பற்றிய தகவல்கள் கிடைக்காது கொடுமை..

சூரியன் said...
சுபாஷ் -- வீரத்திருமகன் .பல பேருக்கு காந்திய தெரியும் ஆனா மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது .. சுபாஷ் சில பேருக்கு தெரிந்தாலும் அவர்களின் மனதில் என்றும் இருப்பவர்..

எனக்குள்ளும் ..

http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_21.html

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
நண்பர் ஜோ
ரொம்ப அருமையான பதிவுங்க
மகாத்மா சுபாச்துடன் சேராததற்கு முக்கிய காரணம்
சுபாஷ் ஹிட்லருடன் வைத்த கூட்டு.

என்ன தான் நம் நாட்டுக்கு சுதந்திரம்
வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும் பதினெட்டு லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லருடன் கைகோர்க்க சுபாஷை போல காந்திக்கு மனம் வரவில்லை.
நமக்கு சுதந்திரம் கிடைத்தும் என்ன பிரயோசனம்.
எங்கு பார்த்தாலும் ஜாதி,மத வெறி.
நீங்கள் முன்பே உங்கள் கட்டுரையில் சொன்னது போல இந்தியர்தாம் சிறந்த ரேசிஸ்ட் -இனவெறியர்.


jothi said...
ஜோ சூப்பர்.

ஆங்கிலேயன் செய்தது கொள்ளை என்றால் காங்கிரஸ்காரன் செய்தது கொலை. சமீபத்தில் கூட ஜாஸ்வந்தின் புத்தகம் நேரை கிழித்துப் போட்டது. தமிழ் நாட்டில் எத்தனை பேர் இது போல நசுக்கபபட்டார்கள்??



Joe said...
நன்றி சூரியன்.

நன்றி பாண்டியன் : இணையத்தில் தேடிப் பாருங்கள், நேதாஜியைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன.

நன்றி (என் பக்கம்) பிரதீப் : வரலாற்றில் ஆர்வமுள்ள நீங்கள் இந்த இடுகையை விரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

நன்றி தங்கம் : அழுத்தமான கருத்துகள் கொண்ட பின்னூட்டம். அட்லி பிரபு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குமுன் அளித்த பேட்டியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்கு குறைவு என்று கூறியிருக்கிறார். இருசாராருக்கிடையே சர்ச்சை வேண்டாமென்று தான் சில தகவல்களைப் பற்றி எழுதவில்லை.

நன்றி கார்த்திகேயன் : வெள்ளையர்கள் போய் நாமே தேர்ந்தெடுக்கும் கொள்ளையர்கள்களிடம் ஆட்சி மாறியிருக்கிறது. போஸ் ஜப்பான், ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்தது தவறாக இருக்கலாம், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு முக்கியமானது.

நன்றி யாசவி : 1945-இல் Bose மர்மமாகக் கொல்லப்பட்டது, 1947-இல் உயிரோடு இருந்தால் அவர் இந்த நாட்டின் பிரதமர் ஆகியிருப்பார் என்ற காரணமாகக் கூட இருக்கலாம்.

நன்றி சுல்தான்.

நன்றி கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி.

நன்றி ஜோதி : சுதந்திரத்தில் தென்னிந்தியர்கள் பங்கு பெரிதாகக் காண்பிக்கப்படவில்லை என்பதும் உண்மை.

நன்றி குறையொன்றுமில்லை : இந்த இடுகையில் உங்கள் பின்னூட்டம் ஸ்பாம் போல இருக்கிறது ;-). போதுமய்யா விருதுகள் வழங்கியதும் வாங்கியதும்!



Pradeep said...
ரொம்ப நல்ல விஷயம் ஜோ. நீங்க சொன்ன மாதிரி இங்க எல்லார்கிடேயும் கேட்டேன். ஆனால் ஒருத்தருக்கு கூட தெரியல இந்த இடத்த.
நான் இங்க போய் பார்த்துட்டு சொல்றேன்.

Triumph said...
I used to read lot. And we had a huge library @ home. Now nothing. I had Bhagat Singh's Pic in my room. also Gandhi's pic as well. One to remind that I should be like him and the other one to remind not to be like him.

I used to read lot abt Indian history. The credit goes to palaniyappa brother's "Naattukku Uzhaitha Nallavarkal". And so many other books. I forgot all now - thats sad....


Gifariz said...
///(இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்களிப்பை விட நேதாஜியின் பங்களிப்பு அதிகம் என்று வாதிடும் மக்களுமுண்டு)///

இதை உண்மை என்று சொன்னால் யார் நம்புவார்கள்.... அந்தளவுக்கு மீடியாக்கள் மாற்றிவிட்டது எங்களை....

///...பதினெட்டு லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லருடன்///

இது யூதர்கள் ஆடிய நாடகம் என்று இப்போது நிருபிக்கப்பட்டு விட்டது


Joe said...
நன்றி கிபாரிஸ் : ஊடகங்கள் அரசாங்கங்கள் ஆட்டும் பொம்மையாக இருக்கின்றன இந்த நாட்டில்.

நன்றி தங்கம் : மீள்வரவுக்கும், கருத்துக்கும்.

நன்றி தேவன்.

நன்றி பிரதீப் : நீங்கள் தங்கியிருக்கும் கோதந்தா-விலிருந்து, அங்கே செல்வதற்கு அரை மணி நேரம் ஆகும். நல்ல வேளை அங்கிருக்கும் இந்திய நண்பர்கள் "யார் போஸ்?" என்று கேட்காமல் விட்டார்களே!

நமது நாட்டு சுதந்திரத்துக்கு உழைத்த ஒரு மாமனிதனுக்கு செய்யும் ஒரு மரியாதை என்பதற்காக அங்கே போனால் தான் உண்டு. மற்றபடி அந்த இடத்தில் வேறெந்த கேளிக்கைகளுமில்லை என்பதால் நம்மவர்கள் அதிகம் போவதில்லை என்று நினைக்கிறேன். (வங்காளிகள் அங்கே வருடம்தோறும் அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள்)

நன்றி வால்பையன்.

நன்றி ஆகாய மனிதன்.


sikkandar said...
அருமையான ஒரு பதிவு.... நமது நாட்டில் எல்லா ரூபாய் நூட்டுகளிலும் காந்தி யை திவர யாருடைய போடோவையும் போடுவது இல்லை....நேதாஜி போட்டோவை போட்டு அவருக்கு மரியாதையை செலுத்த நம்முடைய அரசாங்கத்திற்கு ஏன் அறிவு வரவில்லை?


Triumph said...
This post has been removed by the author.
22 August 2009 17:49
Triumph said...
ha ha... There starts the revolution. U guys can make a difference. Teach ur kids the truth. Dont let them to believe the lies that you guys had studied in school. Thats a revolution too. Who knows in next generation you could see BS and SCB's pics printed in the notes... :D Revolution is not just fighting with arms. Bringing up your kids with truth is also revolution. Make them to become free thinkers too. Jai Hindh....


குறை ஒன்றும் இல்லை !!! said...
//இந்த இடுகையில் உங்கள் பின்னூட்டம் ஸ்பாம் போல இருக்கிறது ;-). போதுமய்யா விருதுகள் வழங்கியதும் வாங்கியதும்!//


மன்னிக்க அதை அகற்றி விட்டேன்.. இனிமேல் இந்த தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.. மீண்டும் மன்னிக்க!!


Joe said...
நன்றி சிக்கந்தர் : மற்றவர்களெல்லாம் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?

நன்றி தங்கம்.

நன்றி குறையொன்றுமில்லை : நான் உங்க பின்னூட்டத்தை ஸ்பாம்-நு சொன்னா நீங்க அதை நீக்காமே, உங்க இடுகையில என்னோட பேரை நீக்கிருக்கீங்க? நல்லது தான், எனக்கு பத்துப் பேரை தேடுற வேலை மிச்சம். ;-)


டக்ளஸ்... said...
ஒரு தனி மனுஷனா நின்னு, தனக்கு கீழ ஒரு மிகப்பெரிய ராணுவத்தையே ஆளுமை செய்து, வெள்ளையர்களின் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த ஒரு மாபெரும் வீரன். ஒரு நாட்டிற்கு ராணுவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் போஸ்.

Thanks to Mr.Joe, http://joeanand.blogspot.com

2 comments:

கவிமதி said...

கடந்த வார அம்பேத்கர் அமைப்பின் கூட்டத்தில் கூட காந்தியை மாகாத்தமா இல்லை பாவாத்மா என்று விளித்தார்கள். சுதந்திரத்தை காந்தி வாங்கித்தந்தார் என்றால் எந்த கடையில் என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. இந்திய விடுதலைக்கு நேத்தாஜி இல்லையெனில் காந்தியின் பட்டினி போராட்ட சப்பை அரசியலுக்கெல்லாம் வெள்ளைக்காரன் பயந்திருக்கமாட்டான்

தமிழ் அமுதன் said...

///இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்களிப்பை விட நேதாஜியின் பங்களிப்பு அதிகம் என்று வாதிடும் மக்களுமுண்டு///


உண்மையும் அதுதானே ..!