Wednesday, October 21, 2009
இளைஞர்களின் காலம்!
தமிழ்நாட்டில்உருவாக்கப்படக் கூடிய “புதிய தண்ணீர் வழிகளைப் பற்றி சென்ற இதழில் சொல்லி யிருந்தேன் அல்லவா, அது குறித்து எனக்குத் திருச்சி யைச் சேர்ந்த ஒரு இளைஞர் அனுப்பியிருந்த ஈ-மெயி லில் மிகவும் சிலாகித்துப் பாராட்டியிருந்தார். "இந்தக் கனவு மட்டும் பலித்துவிட்டால் இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டி மாநிலமாக தமிழகம் மாறும்'’என்று குறிப்பிட்டிருந்த அவர் ஒரு முக்கியமான விஷயத் தைப் பற்றிய சந்தேகத்தைக் கேட்டிருந்தார்.
"நீங்கள் அந்தத் திட் டத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியிருந்தீர்கள். அது ஒரு மிகப் பிருமாண்டமானத் திட்ட மாக எனக்குத் தோன்றுகிறது. அதைச் செய்து முடிக்க எவ்வளவு செலவாகும்? அந்தப் பணம் எங்கிருந்து கிடைக்கும்?'’’ என்று கேட்டிருந்தார்.
அவருக்கு இந்த அத்தியாயத் தில் பதில் சொல்கிறேன். பத்து ஆண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய இந்த மெகா திட்டம் முழுக்க செலவு ரீதியாகப் பார்க்கப் போனால் முழுக்க சாத்தியமானது. மின்சார ஜெனரேஷனில் இருந்து நீர்தேக் கங்கள், அணைகள் உருவாக்குவது வரை இந்தத் திட்டத்துக்கு பட்ஜெட் "பிரேக் அப்' சரியாகப் போடப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு எஸ்டிமேட் 36,000 கோடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப் படும் செலவுகளை ஒப்பீட் டளவில் பார்க்கும் போது இது வழக்கமானதே.
லார்டு கெயின்ஸ் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒரு காலகட்டத்தில் பொருளா தார ரீதியில் பெரும் பின்னடை வைச் சந்தித்த போது அவர் அர சாங்கங்கள் பொதுப்பணித்துறை யில் பிருமாண்டமான திட்டங் களை ஆரம்பித்து (அணைகள், ரயில்வே, சுரங்கங் கள் அமைப்பது போன்றவை) அதில் பெரும் பணத்தைக் கொட்ட வேண்டும் (public spending) என்று ஆலோசனை சொன்னார். அப்படிக் கொட்டப்படும் பணமானது பலவழிகளில் சுழன்று, மதிப்பு அதிகமாகி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்பது அவருடைய கருத்து. அவர் சொன்ன யோசனையை அமல்படுத்திப் பார்த்த போது அது மிக நல்ல பலனைத் தந்தது.
இந்தப் புதிய தண்ணீர்வழிச் சாலைத் திட்டமும் அப்படிப் பட்ட ஒன்றுதான். இதில் பல்லாயிரம் பேர்களுக்கு வேலையும், பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களும், பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்களும் கிடைக்கும். இஞ்சினியரிங் மற்றும் தொழில்நுட்பத் துறை களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர் களுக்கு இந்தத் திட்டம் ஒரு சவாலாக இருந்து அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும். சிவில், எலக்ட்ரானிக் மற்றும் மெக்கானிக் கல் இஞ்சினியர்கள், பூகோளவியல் நிபுணர்கள், கம்ப்யூட்டர் துறையினர், ஹைடிராலிக் நிபுணர் கள், ரிமோட் சென்சிங் விஞ்ஞானிகள், கார்ட்டோகிராபர்கள், மேனேஜ்மெண்ட் துறையினர் என்று ஒரு பெரும் தொழிநுட்ப அணியே இந்தத் திட்டத்துக்காக உழைக்கும். அப்போது வெளிப்படக் கூடிய எனர்ஜி என்பது விவரிக்க முடியாதது.
கடின உழைப்பு, திட்டமிடுதல், தலை மைப் பண்புடன் வழிநடத்துதல், நேர்மையான செலவழிப்பு, என்று எல்லாமும் சேர்ந்து இந்தத் திட்டம் நிறைவேறும்போது இதில் போடப்பட்ட பணமானது பொருளாதாரச் சுழற்சியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் புதிதாக அமையும் தண்ணீர் வழிகள் வருவாயைத் தர ஆரம்பிக்கும்.
அந்த வருவாய் எவ்வளவு இருக்கும் என்பது கூட திட்ட வரைவில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வருடத்திற்கு 4,600 கோடிகள் இதன் மூலம் ஆண்டு தோறும் வருவாய் கிடைக்கும். (மின்சாரம்- 2150 கோடி, தண்ணீர் வழிப் போக்குவரத்து 1350, மீன்பிடித்தல், குடிநீர், சுற்றுலா, மூலமாக இந்த வருவாய் கிடைக்கும்.) இப்படி நதிகளை இணைப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்கிறார்கள் சிலர். ஆனால் இந்தத் திட்ட வரைவோ, சுற்றுச்சூழலுக்கு சாதகமான பல விஷ யங்கள் இதன் மூலம் உரு வாகும் என்கிறது.
"ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர்' எனப்படும் நீர்வழி மின்சாரம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஒன்று. அணுமின் நிலையம் போன்றோ, நிலக்கரி சக்தி போன்றோ இது இயற் கையை பாதிக்காது. இந்தப் புதிய தண்ணீர் பாதைகள் புதிய வனப் பகுதிகளை அது செல்லும் வழிகளில் உருவாக்கும். சாலைவழிப் போக்கு வரத்தில் செலவாகும் எரிபொருள் சக்தியில் 10 சதவீதமே இந்தத் தண்ணீர் வழிப் போக்குவரத்தில் செலவாகும். புதிய தண்ணீர் வழிகளில் மீன்வளமும் பெருகும். இப்படி இயற்கைக்கு உகந்த எத்தனையோ நல்ல விஷயங்கள் நதிநீர் இணைப்பில் இருக்கின்றன.
இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும் என்பது அடுத்த கேள்வி. நாட்டின் வளர்ச்சிக்காக உலக வங்கி வழங்கக் கூடிய கடனை இந்தத் திட்டத்திற்காக நாம் பெறலாம் அல்லதுBOOT (BUILD, OPERATE, OWN AND TRANSFER ) முறையிலும் இதற்கான நிதியைத் திரட்ட முடியும். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் நதிநீர் இணைப்புக்கும், தேசிய நீரோட்டங்களை இணைப்பதற்கும் ஒரு முன்கட்ட அமைப்பாக இருக்கும். ஆஹா அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது.
"நிலவில் இருந்து பார்க்கும்போது வெறும் கண்ணா லேயே பூமியில் ஒரு கோடுபோல தெரியக்கூடியது' என்று சீனப்பெருஞ்சுவரைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது மனிதன் செய்து காட்டிய சாதனை.
அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தியமே. அதில் இன்னும் சந்தேகக் கண் கொண்டு "அதெல்லாம் நடக்கிற காரியமா' என்று மலைப்பவர் களுக்கு நான் அய்யன் திருவள்ளுவனின் குறள் ஒன்றையே பதிலாகத் தருகிறேன்.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் “
இதன் பொருள், “ தகுந்த கருவிகளோடு, காலம் அறிந்து செயல்பட்டால் வெற்றியடைவ தற்கு முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.’’
(தொடரும்)
விருதை இளைஞர்களுக்கு கொடு!
-ஸ்டாலின் குணசேகரன்!
மேதகு ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவரை சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்திலுள்ள அவரது அறையில் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற் றேன். அதற்கும் சில நாட்களுக்கு முன்புதான், என்னுடைய இரண்டு பாகங் கள் அடங்கிய "விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலினை என்னுடைய நண்பர் திரைப்பட இயக்குநர் நா.அன்பரசு கலாம் அவர் களிடம் என் சார்பில் நேரில் சந்தித்து வழங்கியிருந்தார்.
எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்தது. கலாம் அவர் களின் உதவியாளர் ""உங்க ளுக்கு இரண்டு நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள் ளது'' என்ற எச்சரிக்கையுடன் என்னை அறைக்குள் அனுப்பி னார். உள்ளே சென்ற எனக்கு என்னுடைய "விடுதலை வேள்வியில் தமிழகம்' நூலின் இரண்டு பாகங்களும் கலாம் அவர்களின் மேசை மீது இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது. இந் நூலைப் பற்றி விரிவாகப் பேசினார். நான் இந்நூலின் உருவாக்கம் குறித்துப் பேசிய போதும் உன் னிப்பாக கவனித்தார். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. உதவியாளர் எனக்கு இரண்டு நிமிடங்கள்தான் என்று சொன்னது எனக்கு நினைவி ருந்தாலும் ஆர்வமாக ஐயா பேசிக் கொண்டிருந்தபோது நான் இடை மறிக்க முன்வரவில்லை.
உதவியாளர் உள்ளே நுழைந் தார். வெளியில் சிலர் காத்துக் கொண்டிருப்பதை நினைவூட்டவே அவர் அறைக்குள் வந்திருப்பார் போலும். அதைப் புரிந்து கொண்ட கலாம் அவர்கள் ""வெளியே இருப்பவர்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே வரச் சொல் லுங்கள்'' என்று உதவி யாளரிடத்தில் சொல்லிவிட்டு என்னை அந்த அறைக் குள்ளேயே அடுத்த நாற்காலியில் அமரச் சொன்னார்.
அடுத்து வந்த ஒருவர் ""நாங்கள் லண்டனில் வாழும் தமிழர்கள். தங்களுக்கு லண்ட னில் ஒரு விருது கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கடிதம் போட்டு தங்களை அழைத் துள்ளோம்.
இப்போது இந்தியா வந்துள்ள நாங்கள் தங்களை நேரில் பார்த்தே அழைத்து விடலாம் என்று வந்தோம்'' என்று சொல்லி முடிப்பதற்குள் ""எனக்கு என்னுடைய திற மைக்கும் தகுதிக்கும் ஏற்ப எல்லா அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. மிகச் சிறந்த சாதனைகளை செய்து வருகிற இளம் விஞ்ஞானி களுக்கு அந்த விருதுகளைக் கொடுத்துப் பாராட்டுங்கள். மன்னிக்க வேண்டும். எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை'' என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கலாம். வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி னார்கள். இப்படி அனைவ ரையும் கட... கடவென அனுப்பிவிட்டு கடைசியாக மீண்டும் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
"இரண்டே நிமிடங்கள்' என்று நிபந்தனை விதிக் கப்பட்ட நான் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கலாம் அவர்களிடம் உரையாடி விட்டு மகிழ்ச்சியுடன் கை கூப்பி விடைபெற்றேன்.
""ஆமாம்... மறந்தே போய்விட்டேன்'' என்று சொல்லியவாறே "விடுதலை வேள்வியில் தமிழகம்' நூலின் அட்டையை தூக்கியவராய் முதல் பக்கத்தில் ""இந்த இடத்தில் உங்கள் டெலிபோன் நெம்பரை எழுதுங்கள்... பெரிய எழுத்தில் எழுத வேண்டும். கூடவே உங்கள் ஊர், கோட் நம்பரையும் எழுதுங்கள். இப் புத்தகத்தைப் படிக்கிறபோது... அது இரவு நேரமாக இருந் தாலும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே போன் செய்து உங்களிடம் பேசுவேன்'' என்று சிரித்துக் கொண்டே சொல்லியவர்தான் கலாம். எவ்வளவு பெரிய மனிதர் அவர்.
Thanks to : nakkeeran megazine (Gopal)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment