Tuesday, November 3, 2009

ஓரின சேர்க்கை - ஓர் கொடிய பாவம்‏


கண்ணியமிகுந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...

சமுதாய துடிப்புமிகு இளைய சமூகமே! உங்களில் பலர் இஸ்லாமிய சிந்தனையுடனும், சமுதாய சிந்தனையுடனும் இருந்து, சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்களை தோலுரிக்க பாடுபட்டு வருவது எமது சமுதாயத்தின் பிரகாசமிக்க எதிர்காலத்திற்கு எடுத்துக்காட்டு.

எம்மில் பலர் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரிக்க பாடுபடும் அதே வேளையில், சிலர் ஐந்தறிவு படைத்த கால்நடைகள் கூட செய்திராத ஓரின சேர்க்கை என்ற ஈனத்தனமான பாவத்தை செய்துக் கொண்டு தம்மை நரக நெருப்பிற்காக தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த கொடும் பாவம், இறைவானால் கடுமையாக சபிக்கப்பட்ட இந்த பாவத்தை எமது சமுதாயத்தின் சில இளசுகள் விளைவுகள் தெரியாமல் செய்துகொண்டிருகிறார்கள் என்பது வெட்ககேடு!

இறைவனால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏராளம். அவர்களில் ஒவ்வொருவரும் அச்சமுகத்தில் நிகழும் அவலத்தை துடைதெரிந்து, மக்களை நல்வழி படுத்தவே அனுபப்பட்டனர்.


அப்படி இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் இருவரை பற்றி இத்தலைப்பிற்கு எடுத்துக்காட்டுக்காகவும், படிப்பினைக்ககாகவும் நாம் தெரிந்துகொள்வோம். அரபிய சமுதாயத்தைச் மட்டும் அல்லாமல், உலகின் எல்லா சமுகத்தையும் சீர்திருத்திட வந்த இறைவனின் மிகவும் பாசத்திற்கினிய நபி முகம்மது ஸல் (அலை) அவர்கள்.


நபி அவர்கள் அச்சமுதாயத்தை சீர்த்திருத்திய போது, நபியவர்களை அச்சமுதாயம் சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு ஆளாக்கின. இப்படி தன் நபியை அச்சமுகம் இன்னலுக்கு உள்ளாகிய போதும், கருணை கொண்ட இறைவன், அச்சமுதாயத்தை அழித்திடவில்லை.


ஆனால் ஓரின சேர்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழி படுத்த வந்த லூத் நபி அவர்களை (அல் குர்ஆன் 7:80,81; 11:78,79; 15:72; 26:165,166; 27:54,55; 29:28; 29:29) அச்சமூகம் ஒன்றும் பெரிதளவில் இன்னல்களுக்கு உள்ளாக்கவில்லை. அந்த சமூகம் திருந்த மறுத்து நபி அவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.


தன்னுடைய பாசத்திற்கினிய நபி அவர்களுக்கு அந்த அச்சமூகம் பல தொல்லைகளை கொடுத்தும் அச்சமுகத்தை அழித்திராத இறைவன், மற்றொரு நபியான லூத் (அலை) அவர்களுக்கு அவரது சமூகம் பெரும் தொல்லைகளை தந்திராவிட்டாலும் ஓரின சேர்கையில் ஈடுபட்டு வந்த அச்சமூகத்தை வேரோடு அழித்தான் இறைவன் (அல் குர்ஆன் 7:83; 7:84; 11:81; 11:82; 11:83; 15:65; 15:73; 15:74; 26:173; 27:58; 29:34; 51:33,34; 54:34; 54:38) இறைவன் ஓரின சேர்கை என்ற ஒரு அவலத்தை எந்தளவிற்கு வெறுக்கிறான் என்பதை மேலே பட்டியலிடப்பட்டுள்ள இறைவேத வசனங்கள் சாட்சியாக அமைகிறது.


நான் ஒரு சம்பவத்தை இங்கே பதித்தாக வேண்டும். எனது சொந்த ஊரான ஆயங்குடியில் தமிழ்கத்தின் முன்னணி இமாம்களில் ஒருவரான K.A. நிஜாமுத்தீன் (புரசைவாக்கம் பேஷ் இமாம்) அவர்கள் நடத்தி வைத்த ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அத்திருமணத்தில் மணமகன் தங்க மோதிரம் அணிந்திருந்ததை கண்ட ஹஜ்ரத் அவர்கள் " பன்றியின் இறைச்சியை உண்பது எப்படி ஹராமோ, சாராயம் அருந்துவது எப்படி ஹராமோ, அப்படித்தான் ஆண்கள் தங்க மோதிரம் அணிவதும் ஹராம்" என விளக்கமளித்து மோதிரத்தை கழற்றிவிடுமாறு கட்டளை இட்டார்கள்.


ஹஜ்ரத் அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால், உடன் பிறந்த சகோதரியையோ, பெற்றெடுத்த தாயையோ காம இச்சையுடன் தொடுவதும் ஹராமோ, அப்படியே ஓர் ஆண்மகன் இன்னொரு ஆண்மகனை இச்சையுடன் தொடுவதும், தொட நினைப்பதும் கூட ஹராமேயாகும்.


நம்மில் சிலர் இக்கொடிய பாவத்திற்கு அடிமையாகி இருக்கிறோம். இனி, காம இச்சையுடன் இன்னொரு ஆண்மகனை தொடும்போதெல்லாம் பெற்றெடுத்த தாயை தொடுகிறோம் என்ற உணர்வோ, உடன் பிறந்த சகோதரியை தொடுகிறோம் என்ற உணர்வோ வரவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் இறைவனின் நீதிமன்றத்தில் ஹராம் என்ற ஒற்றை குற்றபிரிவிற்கு உட்பட்டது.

இது போன்ற கொடிய பாவத்திலிருந்து எம்மையும், எம் பிள்ளைகளையும் இறைவன் காப்பாற்றிட வேண்டும்.

திருந்துவோம்.....! திருத்துவோம்.....!

ஆக்கம்: என் அன்பின் இளவல் - மு.இ. நசீருத்தீன், ஆயங்குடி
MI.Naseerudeen (aecnaseer85@hotmail.com)

No comments: