Tuesday, October 28, 2008

வாழ்க்கை என்பது என்ன?

தனது ஆங்கில பிளாக் பிரபலமடைந்திருப்பதால் இந்தியிலும் பிளாக் தொடங்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது பிளாக்கில் அமிதாப் பச்சன் எழுதியிருப்பதாவது:

நான் இந்தியிலும் எழுத வேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆதரவும் அதிகரித்துள்ளது. இந்தி தெரியாத பலரும் கூட இதுகுறித்து எனக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது என்னைப் பெருமைப்படுத்தியுள்ளது, ஊக்கமளிப்பதாக உள்ளது.

ஆனால் யார் மீதும் இந்தியை திணிக்கக் கூடாது. ஆனால் நான் இந்தியில் எழுத வேண்டும் என்று பலரும் விரும்பினால் நிச்சயம் அதையும் நான் செய்வேன். இருப்பினும் தற்போதைய பிளாக்கை பலிகடாவாக்க மாட்டேன். அதற்கும் உறுதுணையாக எனது இந்தி பிளாக் இருக்கும்.

இரு பிளாக்குகளிலும் இடம் பெறும் விஷயங்கள் ஒன்றாகவே இருக்கும். எந்த மாற்றமும் இருக்காது. ஒன்றின் பிரதிபலிப்பாக இன்னொன்று இருக்கும்.

எனது உடல் பலவீனம் படிப்படியாக, அதேசமயம் வேகமாக சரியாகி வருகிறது. பல நாட்களுக்குப் போகாமல் இருந்த ரத்தம் இப்போது அனைத்து இடங்களுக்கும் போக ஆரம்பித்திருக்கிறது. இதனால் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த குறுகிய வாழ்க்கையில் நிறைய காற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. அறிவுத் தேடலுக்கு முடிவே இல்லை. நாளுக்கு நாள் அது ஆழமாகிக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் தடங்கல் ஏற்பட்டாலும் கூட அது விரக்தியை ஏற்படுத்தி விடுகிறது.

சிறிய விஷயமாக இருந்தாலும் கூட அதிலிருந்து ஒரு தொடக்கத்தை ஏற்படுத்த நாம் முயல வேண்டும். ஒரு துளி கூட ஒரு வாளியை நிரப்ப உதவும், ஆறுகளாக அது உருவெடுக்கலாம், ஏன் சமுத்திரமாகவும் கூட அது மாறலாம் என்று கூறியுள்ளார் அமிதாப்.

No comments: