Showing posts with label ஷேக் அப்துல் காதர். Show all posts
Showing posts with label ஷேக் அப்துல் காதர். Show all posts

Wednesday, January 7, 2009

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது......???? !!!!!!!


காஸா - இஸ்ரேல் எல்லை: காஸா பகுதியில் 11வது நாளாக தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 550 பேர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

காஸாவில் புகுந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கு மாவட்டங்களில் உள்ள உயர்ந்த கட்டடங்களைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். அங்கு வசிப்போரை கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். கண்ணில் படும் ஹமாஸ் அமைப்பினரை சரமாரியாக சுட்டுத் தள்ளி வருகின்றனர்.
இதற்கிடையே, இஸ்ரேலிய டாங்குகள் சுட்டதில் 3 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இது எதிர்பாராமல் நேர்ந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஹமாஸ் தரப்பினர் சுட்டு ஐந்து இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று இஸ்ரேல் பகுதியில் நான்கு ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் தொடுத்தனர். இஸ்ரேலின் வான் மற்றும் தரை வழித் தாக்குதலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் கடந்த சனிக்கிழமை தரை வழித் தாக்குதலை நடத்த ஆரம்பித்த பின்னர் இதுவரை 130 ஹமாஸ் அமைப்பினரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆனால் திங்கள்கிழமை நடந்த தாக்குதலில் 12 சிறார்கள் உள்பட ஏராளமான அப்பாவி பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு செல்லக் கூடிய குடிநீர்க் குழாய்கள், எரிபொருள் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை அங்கு போக முடியாத நிலை உள்ளது.
தெற்கு காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் 12க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேசமயம், இஸ்ரேலை நோக்கி 25க்கும் மேற்பட்ட ராக்கெட்களை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் ஒன்று அசோத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் விழுந்து அதை தரைமட்டமாக்கியது. ஆனால் அதில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை.

நேற்று இரவு முழுவதும் இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நீடித்தது.
ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஸிபி லிவ்னி கூறுகையில், இந்த பிராந்தியத்தில் தற்போது இருந்து வரும் நிலையை மாற்றி அமைப்போம். பிற நாடுகள் தீவிரவாதிகளை ஒழிக்க உதவிகள் செய்யும். ஆனால் நாங்கள் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. ஆயுதங்களையும் கோரவில்லை. மாறாக, இந்த சண்டையில் தலையிடாதீர்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம். எங்களை தாக்க அனுமதியுங்கள் என்பதே எங்களது ஒரே கோரிக்கை. எங்களது இலக்கை எட்டும் வரை சண்டையிட அனுமதியுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் தலைவர் மஹமூத் ஜஹாரின் பதிவு செய்யப்பட்ட பேச்சை ஹமாஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
அதில், இஸ்ரேலிய எதிரிகள் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போவதற்கான அத்தியாத்தை தொடங்கியுள்ளனர். காஸா முழுவதையும் அவர்கள் சல்லடையாக துளைத்து விட்டனர். குழந்தைகள், மருத்துவமனைகளை அவர்கள் தாக்கியுள்ளனர். மசூதிகளை அழித்து விட்டனர். அப்படிச் செய்ததன் மூலம் அவர்களை அதே வழியில் நாங்கள் தாக்குவதையும் நியாயப்படுத்தியுள்ளனர் என்றார்.




அப்பாவி மக்களைக் குறி வைத்துத் தாக்குவதை இஸ்ரேல் நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் கூறுகையில், வீடுகளில் ராக்கெட்களை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர். லாஞ்சர்களும், தீவிரவாதிகளும் மக்களுடன் மக்களாக பதுங்கியுள்ளனர். எனவேதான் அனைவரையம் குறி வைத்துத் தாக்குகிறோம் என்று காரணம் சொல்கிறது இஸ்ரேல்.

தற்போது வடக்கு காஸாவில் கடும் சண்டை நடந்து வருகிறது. டேங்குகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆர்ட்டில்லரி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது. அப்பகுதியே கரும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
காஸா நகருக்குள் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை. நகரமே சுடுகாடாக மாறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரையும், அவர்களை ஆதரிப்போரையும் எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேல் விமானப்படை, ஹெலிகாப்டர்கள் மூலம் அவ்வப்போது போட்டுச் செல்கிறது.

அந்த துண்டுப் பிரசுரங்களில், இஸ்ரேல் ராணுவத்தின் பலனை தற்போது ஹமாஸ் அனுபவித்து வருகிறது. இதை விட மோசமான வழிகள் எங்களிடம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ஹமாஸை அழிப்போம். எங்களைத் தாக்கியதன் வலியை அவர்கள் உணர்வார்கள். உங்களது பாதுகாப்புக்காக சொல்கிறோம், இங்கிருந்து போய் விடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் காஸா நகரை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் உள்ளனர். காரணம் எல்லாப் பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் எங்கும் போக முடியாத அவல நிலை.
இஸ்ரேலின் தொடர்ந்து வரும் தாக்குதலால் மக்களுக்கு உணவு கூட கிடைக்காத நிலை இருப்பதாக ஐ.நா. மனித உரிமை விவகார பிரிவு ஒருங்கிணைப்பாளர் மாக்ஸ்வெல் கேலார்ட் கூறியுள்ளார்.

ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், குழந்தைகள் பட்டினியில் தவிக்கிறார்கள். கடும் குளிரில் வாடுகிறார்கள். மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லாமல் தவிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிகுந்த பய உணர்வில் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

Sunday, January 4, 2009

இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தம்!!!




இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தம்: "காஸாப் பள்ளத்தாக்கெங்கும் குருதியாறு ஓடுகிறது!"




கடந்த முப்பத்தியாறு மணி நேரத்துக்குள் சுமார் 360 பாலஸ்தீனியர்கள் காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலால் கொல்லப்பட்டும்,1000 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.காயப்பட்ட அப்பாவி மக்களில் 80 வீதமானவர்கள் படுகாயமடைந்து இறக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர் என்றும் குழந்தைகளும்,பெண்களும் இவ் வான்தாக்குதலால் மிகவும் பாதிப்புற்றுள்ளார்கள்.எங்கும் அப்பாவி மக்களின் குருதி தோய்ந்த முகங்கள் கண்ணீர் மல்கித் தெருவில் ஓலமிடுகிறது!
உலகம் காமாஸ் இயத்தின் அழிவுக்கு இது அவசியமானதாக இனம் காணுவதன் அரசியல் முற்றுமுழுதான மேற்குலகப் பொருளாதார ஆர்வங்களோடு சம்பந்தமுடையது.இது,வரலாற்றில் கட்டவிழ்த்த யுத்தங்கள் யாவும் இந்த முதலாளியப் பொருளாதாரத்தைக் காப்பதற்கானதாகவே இருக்கிறது.

இங்கேயும்,பாலஸ்த்தீனக் காஸாப் பள்ளத்தாக்கிலும் அதே கதையோடு காமாஸ் முகமூடியாகிறது.இலங்கையில் புலிகள் போன்று!இரண்டுக்குமிடையில் நிலவும் பொருளாதார நோக்கம் ஒன்றே-அது,சந்தை வாய்ப்பையும்,உற்பத்தியையும் நோக்கியதே!இங்கே,தேசிய இனச் சிக்கல்கள் இந்த முறைமையிலான அரசியல்-பொருளாதார இலக்குகளால் மிகவும் நுணக்கமாகச் சிதைக்கப்பட்டுப் பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது.பயங்கர வாதத்தை அழிப்பதற்கெடுக்கும் நடவடிக்கையாக யுத்தம் இப்போது நியாயமான சட்ட அங்கீகாரத்தோடு அரச பயங்கரவாதமாக அப்பாவி மக்களை அண்மிக்கின்றன.வன்னியில் வதைபடும் மக்களின் துயர் உலகை எட்டவில்லை!எனினும்,மானுட அழிவில் ஆதாயம் அடைபவர்களை நாம் மிகவும் கவனமாக இனங்காண வேண்டும்.

என்றபோதும்,இவ்வகை யுத்தங்களால் மக்கள் அழியலாமா?அழியலாம்-அழியவேண்டும்!இது,மேற்குலக-அமெரிக்க ஜனநாயகம்.இதை எவராலும் மாற்ற முடியாதென்கிறது இன்றைய யுத்தச் சூழல்.அதாவது, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனப் புரியவேண்டுமென்கிறார்கள்! வரும் ஆண்டு ஏப்பிரலுக்குள் எண்ணை விலையை 70 டொலருக்கு ஏற்றுவதற்கேற்றபடி எண்ணை உற்பத்தியை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை வரவழைத்து இந்திய-சீனா போன்ற தேசங்களின் எண்ணைத் தேவையைப் பூர்த்தி செய்யாதளவு சந்தையில் தட்டுப்பாட்டைக் கொணர்வதற்கும்,அதனால் சந்தையில் எண்ணையின் விலையைப் பழையபடி 100 டொலர்கள்வரை ஏற்றிவிடவும் எண்ணை மாபியாக்கள் திட்டம் செய்திருக்கிறார்கள்.

இப்போதைய இஸ்ரேலிய அத்துமீறிய அழிவு யுத்தத்தால் பயனடைபவர்கள் இந்த எண்ணை முதலாளிகளாக இருக்கும்போது,இவ்யுத்தம் உண்மையில் காமாஸ் களையெடுப்பென்பதன் அர்த்தத்தை இழக்கின்றது.இது,சாரம்ஸத்தில் பற்பல முகங்களைக் கொண்டியங்குகிறது:
1) இவ் யுத்தத்தின்மூலம் தொடரப்போகும் ஈரான் யுத்தத்துக்கான ஒத்திகை.அரபு உலகத்தின் எதிர்வினைகளைக் காணுவதற்கும் அதை எதிர் கொள்வதற்குமான மிக தெளிவான திட்டமிடல்களுக்கும்,

2) பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் பாதளச்சரிவை குறைந்தளவாவது ஸ்த்திர நிலைக்கு மாற்றுவதற்கு,

3) சரிந்து வரும் எண்ணைச் சந்திப் பெறுமதியைச் செயற்கையாக உயர்த்தி, இழந்த மூலதனத்தை மேலும் இழக்காது காத்துக் குறுகிய காலத்தில் மூலதனத்தைத் திரட்டுவதற்கான யுத்தச் சூழலை உண்டாக்குவது,

4) காமாஸ் இயக்கத்தின் பெயரில் பாலஸ்த்தீனியர்களின் அரசியல் ஸ்த்திரத்தன்மையையும் அவர்களது அரசியல் ரீதியான போராட்டவெற்றிகளை அழித்து,வெறும் இராணுவவாதத் தலைமைக்குள் அவர்களைத் தள்ளி விடுவதற்கும்,
இவ்யுத்தம் ஆரம்பமாகிறது.

இந்தக்காரணங்கள் நான்கும் மிக அவசியமானவொரு வான்தாக்குதலையும் அதன்வழித் தரைத்தாக்குதலையும் பாலஸ்த்தீனத்தின்மீது கட்டவிழ்த்துவிடுவது அவசியமாக இருக்கிறது இந்த அமெரிக்க-மேற்குலக மூலதனத்துக்கு.

எனினும்,நவ உலகக் குடியரசுகள் ஒரு புறம் யுத்தத்தைத்தாலாட்டி வளர்த்தபடி மறுபுறத்தில் தமது வாலாட்டியை வைத்து யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்றும் பேசுகிறார்கள்.யு.என்.செயலாளர் திரு.பான் கீ மூன் இன்றைய தினத்தில் தனது குரலை ஓங்கி ஒலிக்க விடுகிறார்!அவரது கூற்றுப்படி இஸ்ரேவேல் உடனடியாக வான் தாக்குதலை நிறுத்திப் பேச்சு வார்த்தைக்குச் செல்வது ஒரு புறமிருக்கட்டும்.

இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் Ehud Barak கூறும்"யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை தொடரும்"என்பதன் அர்த்தம் என்ன?
இதன் உண்மையான முகம் பாலஸ்த்தீன மக்களிடம் உண்மையான அரசியல் விழிப்புணர்வுடைய போராட்டச் செல்நெறியமைவது தடுக்கப்பட வேண்டும் என்பதே.இதற்கேற்ற அரசியலலைக் காமாஸ் இயக்கத்தின் இஸ்ரேல்மீதான-அதன் இருப்பை அங்கீகரிக்காத அரசியல் வங்குரோத்தும் காரணமாகிறது.இன்றைய உலகப் புறச் சூழலில் இஸ்ரேல் எனும் தேசத்தின் இருப்பை எவரும் அழித்து அந்த மக்களையும் அரசியல் அகதிகளாக்குவதென்பது படு முட்டாள்தனமான அரசியலாகும்.
இங்கே,காமாஸ் இந்தக் கோரிக்கையூடாகப் பாலஸ்த்தீன ஆளும் வர்க்கத்தை குளிர்ச்சிப்படுத்தித் தனது இருப்புக்கான நிதி ஆதாரத்தைத் தேடினாலும் அதன் மறுவிளைவு அவ்வியகத்தைப் பூண்டோடு அழிப்பதில் இஸ்ரேலுக்கு நியாய வாதத்தைக் கொடுக்கிறது.இதன்பலன் மக்களின் விடுதலையைக் காட்டிக் கொடுப்பதே!

இது நாள்வரை காமாஸ் இயக்கம் பெற்ற அரசியல் வெற்றிகள் யாவும்,இஸ்ரேலின் இருப்பை மறுக்கும்போது காமாஸ் இயகத்தின் இருப்பை அசைப்பதாக மாறவில்லை.மாறாகப் பாலஸ்த்தீனியர்களின் தெளிவான அரசியல் செல் நெறியை உடைத்துக் குறுந்தேசிய-மதவாதத் தலைமைகளின் கீழ் இராணுவவாதக் கோரிக்கைகளுக்கு அடிமையாக்குவதில் முடிகிறது.இதையே உலகமும் விரும்புவதால் இந்த இஸ்ரேலிய அத்துமீறிய யுத்தம் பல வழிகளில் பாலஸ்தீன விடுதலைக்குச் சாவு மணியடிப்பதன் தொடராகவே முன்னெடுக்கப்பட்டாலும்,இதன் இன்றைய தேவை,மேற்குலகுக்குச் சாதகமானதும்,அவைகளின் பொருளாதார இலக்குகளுக்கான புதிய சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது என்பதற்காகவுமே.
இதன் பொருட்டே ஒரு பரிட்சார்த்தமாக யுத்தம் நடைபெறுவதற்கான உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.ஆனால்,அழிவு அப்பாவி மக்களுக்கே.
ப.வி.ஸ்ரீரங்கன்30.12.2008ஜேர்மனிய ஊடகங்களும்,அல் ஜெசிரா தொலைக்காட்சியும் தெரிவிக்கிறது!

இஸ்ரேலிய தரப்பு நியாயத்தின்படி, "யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை"(Kampf bis zum bitteren Ende)நடைபெறும்.இப்போது,வான் தாக்குதலில் முனைப்புடைய இஸ்ரேலிய இராணுவம், தரைப்படையையும் தயார் நிலைக்குள் வைத்துத் தரை தாக்குதலைச் செய்வதற்கான முனைப்பில் காரியமாற்றுகிறது.உத்தியோக பூர்வமற்ற தகவலின்படி காஸா நோக்கிய தாங்கிகள் அணிவகுப்பு ஆரம்பமாகிறது.

பாழாகும் மனித வாழ்வு பாலஸ்த்தீன மக்களின் அனைத்து வகைத் தார்மீக எதிர்பார்ப்புகளையுங் குலைத்து, அவர்களை மேலும் பழிவாங்கும் மன நிலைக்குள் தள்ளியபடி, அவ்வினத்தைத் தொடர்ந்து சிதைப்பதில் இஸ்ரேலிய அரசுக்கு என்ன வகை ஆதாயம் இருக்கிறது?

2006 இல் நடந்த தேர்தலில் காமாஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்க முடியாத உலகம், இப்போது நடைபெறும் யுத்தத்துக்கு அன்றே ஆரம்பப் புள்ளியைக் கீறியிருக்கிறது.எனினும்,யுத்தம் இவ்வளவு விரைவாக எழுவதற்கும்,அது பெரும்பாலும் பெருந்தொகையான மக்களின் உயிரைக்குடித்தபடி வான் தாக்குதலாகவும்,தரைத்தாக்குதலாகவும் பாலிஸ்தீனர்களின் அனைத்துக் குடியிருப்புகளையும் அழித்துவிடுமளவுக்கு நகரத்தக்க யுத்தமாக விரிவுறுவதன் பின்னால் நடந்தேறும் இலக்கு என்னவென்பது மிக அவசியமானதாக இருக்கிறது.

இன்றைய பொருளாதாரச் சூழலில் இஸ்ரேலிய அரசுக்கான உதவிகளைச் செய்யத்தக்க வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் இல்லாதிருப்பினும், இவ் யுத்தம் சாரம்சத்தில் அண்மைக் கிழக்கு அரேபிய நாடுகளில் ஒன்றான பாரசீக-ஈரானிலேயேதாம் மையங்கொண்டது.எனினும், இந்த யுத்த இலக்கு காமாஸ் களையெடுப்பென்று இப்போது பாலிஸ்த்தீனக் காசாப் பள்ளத்தாக்கில் குருதியாற்றைத் திறந்திருப்பதற்கு அவசியமான புறக்காரணியாக எண்ணைச் சந்தை நிலவரமே காரணமாக இருக்கிறது.

இஸ்ரேலின் குண்டுகள் பாலஸ்த்தீனத்தைத் தாக்கி மனிதர்களைப் பலியெடுக்கும்போது, பங்குச் சந்தையில் மசகு எண்ணை பெறலுக்கு 6 டொலர்கள்கூடியுள்ளது.34 டொலர்கள் விற்ற மசகு எண்ணை திடீரென 40 டொலர்களாக உச்சம் அடைவதால் பங்குச் சந்தைச் சூதாடிகளின் முகத்தில் வெற்றிக்களிப்பு.

Written by ப.வி.ஸ்ரீரங்கன் தகவல்: ஷேக் அப்துல் காதர்

Wednesday, December 31, 2008

அறியப்படாத அமெரிக்கா!!???


ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.


சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.




ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.




கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.




ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.




இன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000 கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.




1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.
இந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர்.



ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.




நமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை ""பிரட் லைன்'', ""சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.




1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன. அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும்.



ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.




இத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் "பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும்? பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.




அரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.




அமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.




ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ""கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது.



மறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது.



WrittenBy: புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் 2008

Saturday, December 6, 2008

அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம்!



"வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே" எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களும் அதையே பின்தொடர்ந்தார்கள். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சம்பவத்தை அரட்டைக் கலாச்சாரமும் தன்னளவில் வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்தார்கள்.
குட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லையென்றார் ஒருவர், பேப்பரைப் பிரித்தால் தினசரி குண்டு வெடிப்பு தான் சலிப்பாயிருக்கிறது என்றார் மற்றொருவர், மனது கஷ்டமாயிருக்கிறது, பிரார்த்தனை செய்வோம், நம்பிக்கையுடன் இருப்போம், சென்னைக்கு பிரச்சினையில்லை இப்படியே நாள்முழுக்க பேசினார்கள். மும்பைத் தாக்குதலை சமூகம் எப்படிப் பார்க்க வேண்டுமென்பதையே எப். எம்மின் பேச்சுக்கள் பிரதிபலித்தன. பிரச்சினை என்னவென்று புரியக்கூடாது என்று உறுதி செய்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்குமென்று எதிர்பார்க்கும் ஆபத்தில்லாத மனிதாபிமானம்.
அந்த மூன்று நாட்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விட்டு தனது பிரியத்திற்குறிய மும்பை நகரத்தின் சோகம் குறித்து லதா மங்கேஷ்கார் 300 முறை அழுதாராம். நட்சத்திர ஓட்டல்களில் விருந்து வைபவங்களுக்கு செல்பவர்கள் தங்களது போற்றுதலுக்குறிய நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்படுவதை நினைத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ணீர் வடித்தார்கள். நாடெங்கிலும் ஆங்கிலப்பள்ளிக் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார்கள். தீவிரவாதிகளை சாகசத்துடன் வீழ்த்தும் கமாண்டோக்களை ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டும் பார்த்தவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்.எஸ்.ஜி வீரர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் உயிர்த்தியாகம் செய்திருப்பதை வைத்து கவிதைப் போட்டி நடத்துகிறது தினமலர். கொல்லப்பட்ட போலீசு, இராணுவ அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டமும், பாரத மாதாவைப் போற்றிய முழக்கமும் அலைமோதின.
இப்படி எல்லோரையும் ஒருவாரம் ஈர்த்திருக்கும் வலிமையை மும்பைத் தாக்குதல் கொண்டிருந்தது.
பத்து தீவிரவாதிகள் அறுபது மணிநேரம் தேசத்தின் கவனிப்பை தமது பக்கம் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றார்கள். இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதலையெல்லாம் ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மும்பைத் தாக்குததல். விஜயகாந்த், அர்ஜூன் மற்றும் தெலுங்குப் படங்களில் வரும் மலிவான தீவிரவாதிகளையெல்லாம் விஞ்சிவிட்டனர் இந்த உண்மையான தீவிரவாதிகள். முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள், திரைப்படம் பார்க்க வந்தவர்கள், மருத்துவமனையில் நுழைந்தவர்கள் எவரையும் இரக்கம் பார்க்கமல் இயன்ற அளவு சுட்டுக் கொன்றனர். இதற்கு முன் ஆளில்லாமல் குண்டுகள் மட்டும் வெடித்து வரும் அழிவை சில மனிதர்களே நேரிட்டுக் கொண்டு வந்ததால் பீதியும், பயங்கரமும் புயல் வேகத்தில் மும்பையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவின. இத்துடன் முடிந்திருந்தால் கூட இது மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலென்று செய்திகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடி பின்னர் மறக்கப்பட்டிருக்கும்.
ஆனால் தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் மூன்றிலும் அவர்கள் நுழைந்ததும்தான் இந்திய ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் கூட கடும் அதிர்ச்சியடைந்தன. வெளி நாட்டவர்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் நாட்டினர், இந்திய முதலாளிகள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர், தனியார் நிறுவன உயர் நிர்வாகத்தினர் அனைவரும் தீவிரவாதிகளால் துரிதமாக தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இதுவரை பயங்கரவாதம் அவர்களால் ஆளப்படும் மக்களை மட்டும் தாக்கியதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொது முதல்முறையாக அதன் சூட்டை அனுபவிக்க வேண்டி வந்தது நினைத்துப் பார்த்திராத ஒன்று. இதுவே ஊடகங்கள் வழி நாட்டையும் மக்களையும் அதிர்ச்சியடைய வேண்டியதை ஒரு கடமையாகச் செய்தது.
குண்டு வெடிப்புக்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் இங்கே பரபரப்பிற்காக மட்டுமல்ல தங்களுக்கு நிகழ்ந்த துயரமாகவே கருதி செய்திகளையும் இந்தியஅரசு செய்யவேண்டிய எதிர்காலத் தயாரிப்புக்களையும் கட்டளை போல வெளியிட்டன. ஒரு வர்க்கமென்ற முறையில் ஊடகங்களுக்கு விளம்பரங்களின் மூலம் வருமானம் தரும் வெளிநாட்டினர், தனியார் நிறுவன முதலாளிகள், நிர்வாகிகளுக்கு நிகழ்ந்த அவலங்கள் ஊடக முதலாளிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோபம் அல்கய்தா அமெரிக்காவில் நடத்திய செப் -11 உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஊடகங்களுக்கு வந்த கோபத்திற்கு நிகரானது. வால் ஸ்டீரீட்டின் இதயம் தகர்க்கப்பட்டதால் அமெரிக்க முதலாளிகளுக்கு வந்த ஆத்திரம் ஆப்கான், ஈராக் மீது போர் தொடுப்பது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் என்று ஊடக முதலாளிகளால் தொடர்ந்து ஒரு கச்சேரியாக அங்கே நடத்தப்பட்டது.
அமெரிக்க எஜமானர்களை பிழைப்பு கருதி வியந்தோதும் இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நீயு இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற தினசரிகள், அவை போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையும் அதே கச்சேரியை வன்மத்துடன் செய்து வருகின்றன. இனி இதையே சன். டி.வி போன்ற பிராந்திய நாட்டாமைகள் மொழிபெயர்த்துப் பிரச்சாரம் செய்வார்கள். இந்தக் கச்சேரியை தமது வாழ்நாள் பணியாகச் செய்துவரும் குருமூர்த்தி, துக்ளக் சோ, அருண்ஷோரி, ஸ்வபன்தாஸ் குப்தா போன்ற சித்தாந்திகள் இப்போது முழுவீச்சுடன் இயங்கி வருகிறார்கள். விட்டால் இவர்களே கூட பாக்கிஸ்தானுக்கு படையெடுத்து போனாலும் போவார்கள். நாடு முழுக்க நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் போர்வெறியும், பொடா, புதிய போலீசுப் படை என்ற சர்வாதிகார வெறியும் நீக்கமற நிரைவிக்கப் போகிறது.
ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. ஆனால் சென்னை நட்சித்திர முதலாளிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் பற்றிய பாடம் நடத்தப்பட்டு விடுதிகளுக்கு போலீசு பாதுகாப்பும் போடப்பட்டது. அஸ்ஸாமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவு எல்லா நகரங்களிலும் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வரவில்லை. இப்போது தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டதும் வந்திருக்கிறது. விருந்தினர்களே எப்பொதும் சரியானவர்கள் என்ற கடமை முழக்கத்தை சிரமேற்கொண்டு தமது உயிரை ஈந்து பல முதலாளிகளையும், வெளிநாட்டினரையும் காப்பாற்றிய நட்சத்திர விடுதியின் ஊழியர்களைப் பற்றிய கதைகளை விட தாக்குதலில் சில மணிநேரங்கள் அல்லல்பட்டு தப்பித்த மேன்மக்களின் துன்பக்கதைகள் காவியமாய் பத்திரிகைகளை நிரப்புகின்றன.
அவ்வளவு ஏன் தாஜ்மஹால் பேலஸ் என்ற கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட அந்த அஃறிணைப் பொருளுக்காக எத்தனைபேர் கண்ணீர் விட்டனர்! உருக்குலைந்து நிற்கும் அந்த விடுதியின் மதுவறையை முன்பக்கச் செய்தியில் படத்தோடு வெளியிட்டு துக்கப்படுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு. நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்குமேல் வாடகை வாங்கப்படும் அதன் கோபுர உச்சியில் இருக்கும் பிரசிடன்சியல் சூட் அறை, பல உலகத் தலைவர்களெல்லாம் தங்கிய அந்தப்பெருமை மிகு அறை இன்று வெடிகுண்டு வீசப்பட்டு நிர்மூலமாயிருப்பது குறித்து வருந்துகிறது இன்னொரு நாளேடு! தாஜ் ஓட்டல் உயிர்ப்புள்ள கட்டிடம், பல இன்பங்கள், மகிழ்ச்சிகள், திருமணங்கள், நினைவுகளைக் கொண்டு வாழும் கட்டிடம் என்கிறார் ஒரு திரைப்பட இயக்குநர். இன்னும் நூறாண்டு பாரம்பரியம் மிக்க அந்த விடுதியின் பெருமை, இந்தியனுக்கு ஓட்டலில் இடமில்லை என்ற கோபத்தில் ஓட்டலைக் காட்டிய அந்தக் கால டாடாவின் கர்ண பரம்பரைத் தேசபக்திக் கதைகள், ஒரு வருடத்தில் 500 கோடி செலவழித்து விடுதியின் பொலிவை மீட்டுக் கொண்டு வருவதாக சபதமெடுக்கும் இந்தக் கால ரத்தன் டாடாவின் உறுதி மொழிகள் எல்லாம் பயங்கரவாதத்திற்கெதிரான போராய் அணிவகுக்கின்றன.
சிங்கூரில் நானா கார் தொழிற்சாலை வெளியேறி குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போதைய ஓட்டல் தாக்குதல் எல்லாம் ரத்தன் டாடாவின் கிரகநிலைமை சரியில்லையாம். இதையே பிரபலமான ஜோசியக்காரர்களிடம் செய்தியாக வாங்கி வெட்கமில்லாமல் வெளியிட்டிருக்கின்றன ஆங்கில நாளேடுகள்! உண்øமையில் டாடாவின் நில ஆக்கிரமிப்பால் மேற்கு வங்க விவசாயிகளின் கிரகம்தான் சரியில்லை என்று சொல்லலாம். தற்போது குஜராத்தின் விவசாயிகளுக்கும் கிரகநிலைமை சரியில்லை. ஒரு மாநில அரசின் ஆதரவோடு அந்த மக்களின் எல்லா வளங்களையும் சுரண்டி தொழில் செய்ய நினைக்கும் ஒரு முதலாளிக்கு வரும் பிரச்சினைகள் குறித்து என்ன ஒரு கவலை!
கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் கடலைப் பார்த்து பணக்காரர்களின் சின்னமாய் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் ஓட்டல் மும்பையின் கவுரவச் சின்னமாம். இதற்கு ஏற்பட்ட அநீதி குறித்து கொதித்தெழுகிறார் ஷோபா டே என்ற சீமாட்டி எழுத்தாளர். மும்பைக்கு அருகில் விதர்பாவில் இதே சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதை செய்தியாகக்கூட படித்திராத, நட்சத்திர விடுதிகளில் கூடி குடி கூத்துக்களை நடத்தும மேன்மக்களின் அருமை பெருமைகளை கூலிக்கு எழுதும் பத்தி எழுத்தாளருக்கு வயிறு பற்றி எரிகிறது! இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் அதற்காக இப்படியா?
சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஏறெடுத்தும் பார்க்க முடியாத தாஜ் ஓட்டல் எப்படி மும்பையின் கவுரவச் சின்னமாகும்? மும்பை நகரம் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உழைத்து ஓடாய்த் தேயும் ஆசியாவின் பெரிய சேரியான தாரவியைக் கூட மும்பையின் சின்னமாக வரையறுத்தால் ஒரு அர்த்தம் உண்டு. நாளொன்றுக்கு பல்லாயிரம் ரூபாயை வாடகையாகக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர விடுதி யாருக்கு அவசியம்? ஊழலில் புழுத்த அதிகாரவர்க்கம், நிதி மோசடிகள் செய்யும் முதலாளிகள், சந்தர்ப்பவாதங்களைக் கூடிப்பேசும் அரசியல் தலைவர்கள், உல்லசத்தில் திளைக்க விரும்பும் நடிகர்கள், இந்திய அடிமைகளை மேற்பார்வையிட வரும் மேற்குலகின் மேல்மட்டத்தினர் இவர்களுக்கெல்லாம்தானே நட்சத்திர விடுதி தேவைப்படுகிறது? ஆர்டர் செய்த ஷாம்பெய்னைக் குடிப்பதற்குள் தீவிரவாதிகள் வந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய இதே காலத்தில் துபாயில் எட்டாயிரம் கோடி செலவில் ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டு அட்லாண்டிஸ் பாம்ஜூமைரா ரிசார்ட் என்ற மாபெரும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. இதில் விடுதிகள், ஓய்வில்லங்கள், தனி பங்களாக்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் ஒரு நாள் தங்குவதற்கு எட்டு முதல் இருபது இலட்சம் வரை வாடகையாம். இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்களாக்களை வாங்கியிருக்கிறார்களாம். இந்தி மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இதன் திறப்பு விழாவின் செலவு 160 கோடியாம். வாணவேடிக்கை மட்டும் 56 கோடி. உலக முதலாளிகளுக்காக இந்த தனித் தீவை கெர்ஸனர் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பக்கத்தில் ஈராக் என்றொரு நாட்டில் அன்றாடம் இழவு வீட்டு ஒப்பாரி நடக்கும் நேரத்தில் திறக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத்தின் இந்தியப் பதிப்புதான் தாஜ் ஓட்டல். முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள். மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்.
புதன் கிழமை தீவிரவாதிகள் மும்பையில் புகுந்ததால் வியாழக்கிழமை பங்குச் சந்தை மூடப்பட்டது கடந்த 20 வருடத்திற்குள் இரண்டாவது முறையாம். இரண்டு நாள் வர்த்தகம் மூடப்பட்டதால் 50,000 கோடி இழப்பாம். மேலும் திரையரங்குகள், ஓட்டல்கள் எல்லாம் ஆளின்றி கலெக்ஷன் குறைந்தது பற்றியெல்லாம் பத்திரிகைகள் அருவருப்பின்றி கவலைப்படுகின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது நீரோக்கள் பிடில் வாசித்த கதையெல்லாம் வெறும் தூசு!
ஐந்து பந்தயங்கள் முடிந்து இரண்டு பந்தயங்களை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கிரிக்கெட் போட்டிகள் ரத்தானதையும் பத்திரிகைகள் கவலைப்படத் தவறவில்லை. அதிலும் அந்த அணியின் உடமைகள் இன்னமும் தாஜ் ஓட்டலில் இருக்கிறதாம். அவற்றுக்கு என்ன கதி ஏற்பட்டதோ என்று கூட செய்திகளை வெளியிடுகிறார்கள். மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற விவாதம், 20 ஓவர் போட்டிகளைக் கொண்ட சாம்பியன்ஸ் லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது, 2011 இல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற ஐயம், இந்திய அணியின் பாக் சுற்றுப்பயணம் ரத்தானது எல்லாம் மும்பைத் தாக்குதலின் இரத்தம் உலர்வதற்குள் விவாதத்திற்கு வந்துவிட்டன.
கிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை உசுப்பி விடுவதில் ஊடகங்கள் முனைந்திருக்கின்றன. ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. அப்போது ஒரு கோடியை நிவாரணமாகக் கொடுத்து விட்டு போட்டி நடப்பதற்கு முன் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செய்து விட்டு ஆட்டத்தை தொடர்ந்ததைப் போல இப்போது முடியவில்லை. அவ்வகையில் தமது வசூல் பறிபோனது குறித்து கிரிக்கெட் முதலாளிகள் வெறுப்பில் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் பயபீதியில் உறைய, ரசிகர்களோ தங்களது பொழுதுபோக்கு ரத்தானது குறித்து கடுப்பில் இருக்க தீவிரவாதத்தின் குறி சரியாகத்தான் அடித்திருக்கிறது. மும்பைத் தாக்குதலில் வர்த்தக உலகம் தனது வருவாயை இழந்திருப்பதும் தாஜ் ஓட்டலின் கவலைக்கு ஈடான இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா?இதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே?அப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்?


- தொடரும்

ஷேக் அப்துல் காதர்