Showing posts with label கவிமதி. Show all posts
Showing posts with label கவிமதி. Show all posts

Thursday, December 11, 2008

துபாய்-ல் கீற்று அன்பர்கள் சந்திப்பு.











இலக்கியம், அரசியல் என பல நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் தமிழுணர்வாளர்கள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வரிசையில் "கீற்று இணைய அன்பர்கள் சந்திப்பு" மற்றும் கலந்துரையாடல் 5-12-2008 துபாயில் கராமா பூங்காவில் நடைபெற்றது.








முன்னதாக தமிழ்நாட்டில் நிகழவிருந்த சந்திப்புகள் மழை காரணமாக தள்ளிவைக்கபட்டதால் குறித்த நேரத்தில் கீற்று அன்பர்கள் சந்திப்பை நிகழ்த்தி இதிலும் துபாய் தமிழுணர்வாளர்கள் முன்வரிசையில் நின்றுவிட்டனர். மேலும் துபாயிலும் மழையாக இருந்து நிகழ்வின்போது நின்றிருந்தது. மழை தொடருமெனில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக நடத்த மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.








முன்னதாக கத்தார் நாட்டில் பணிபுரியும் கீற்று வாசகர் கவிஞர் திரு.இனியவன் ஹாஜி முஹம்மது அவர்கள் கீற்றுவின் பணியைப் பாராட்டி அதன் ஆசிரியர் திரு.இரமேசுக்கு தனது “இனியவன் மீடியா இண்டர்நேஷனல்” நிறுவனத்தின் சார்பாக அய்க்கிய அரபுநாடுகளின் அதிபர் காலஞ்சென்ற மதிப்பிற்குரிய "ஷேக்ஜாயித் அல் நஹ்யான்" பெயரிலான விருதினை (250டாலர்) அன்பர்கள் முன்னிலையில் கீற்று நிர்வாகத்தினர்களில் ஒருவரான திரு. குமார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கீற்று குழுமம் சார்பில் திரு,இனியவன் அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.








நிகழ்வில் அன்பர்கள் கீற்றுவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட இன்னும் நாம் என்ன முறையில் இயங்கவேண்டும் என்கிற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.








அவற்றில் சில:-




• கீற்று அன்பர்கள் சந்திப்பை கீற்று சார்பாக திரு.இ.இசாக் ஒருங்கிணைத்தார்.




• கீற்று பன்முகத்தன்மையுடன் இயங்குவது குறித்து அன்பர்களாகிய நமக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எனவே அன்பர்கள் சந்திப்பானது மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் துபாய், சார்ஜா, அபுதாபி என ஏனைய அமீரகத்திலும் நடத்துவது சம்மந்தமாக திரு.கவிமதி கருத்து தெரிவிக்க அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.








• கீற்றுவில் ஒற்றைக் கருத்தின் சார்பு நிலைதான் என்று இல்லாமல் எதிர்த் தரப்பு கருத்துகளுக்கும் இடமளிப்பது பாராட்டுக்குரியது. இதுபோன்ற எதிர்த் தரப்பு செய்திகளுக்கு இடமளிப்பது மூலம் கீற்றுவின் கோட்பாடு சார்ந்த செயல்பாடுகளுக்கும், வாசக கருத்து விவாதத்திற்கும் இப்பன்முகத்தன்மை துணைபுரிவதாகவும் அமைகிறது என திரு.ஆசிப்மீரான் தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார்.








• மற்ற வலைத்தளங்களின் "கீற்று அன்பர்கள்" எழுதிய ஆக்கங்களை அவை சிறப்பாக இருக்கும் பொருட்டு அதை கீற்றுவில் மறுபதிப்பு செய்ய ஆவன செய்ய வேண்டுமென திரு.ஆசாத் தனது கருத்தைத் தெரிவித்தார்.








• கீற்று வளர்ச்சிக்கு வாசகர் தளத்தை விரிவுபடுத்துவது குறித்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாசகர்களும் படைப்பாளிகளும் நிதியுதவிக்காக ஆவன செய்யவேண்டும் எனவும் திரு.பாரத் தனது கருத்தை வெளியிட்டார்.








• கீற்று தமிழ் இலக்கியத்திற்கு பெரும்பணியாற்றி வருவது கண்டு தானும் இக்குழுவில் இணைவதில் பெருமைகொள்வதாக குழுமத்தில் புதிதாக இணைந்த திரு.சே.ரெ.பட்டணம் மணி தெரிவித்தார்.








• மேலும் கீற்று இணையதளத்தில் வெளிவரும் ஆக்கங்கள் பற்றிய கருத்துகளையும் விவாதங்களையும் கீற்று குழுமத்தில் முன்னெடுத்து செல்ல ஆசிரியர் குழு முயற்சிக்க வேண்டும் என திரு.முத்துக்குமரன் தெரிவித்தார்.








• கீற்று பல நல்ல படைப்புகளை வெளியிட்டாலும் கீற்று தளத்தின் நிலைப்பாடுகளை வாசக சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் வகையில் ஆசிரியர் குழுவின் குரலாக ஒரு பகுதி தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆசிரியர் குழுக்கான நிலைபாட்டு கருத்துகளை பதிவு செய்யவேண்டுமென திரு.நண்பன் தனது கருத்தை தெரிவித்தார்.








• சமூக விரோதக் கருத்துக்களை பரப்புகிற எழுத்தாளர்களுக்கு ஆதாரப்பூர்வமான விடையளிக்கும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்து கீற்று வெளியிட வேண்டும் என திரு.உமர்சரீப் மற்றும் திரு.நஜீமுத்தீன் ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்தார்கள்.








• கீற்று தளம் கடந்த ஒரு வாரத்திற்கு முந்திதான் தன் கவனத்திற்கு வந்தாலும் தான் வாசித்த தளங்களிலிருந்து மிக மிக வித்தியாசமான சிந்தனையுடனும் சமூக அக்கறையுடனும் படைப்புகளை வெளியிட்டு வருவதுடன் இதைப் போன்ற சந்திப்புகளையும் நடத்துவும் மிகவும் சிறப்பானது என திரு.தயாளன் தெரிவித்தார்.








கீற்று மின்னிதழில் வெளியிடப்படும் படைப்புகளை தொகுத்து கீற்று ஆண்டுமலராக வெளியிட வேண்டுமென்று கீற்று ஆசிரியர் குழுவிடம் பரிந்துரைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நண்பர்கள் பலரும் எடுத்துரைத்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்று தங்கள் ஆசிரியர் குழு ஆவனசெய்யும் என கீற்று நிர்வாகிகளில் ஒருவரான திரு.குமார் தெரிவித்தார்.








நிகழ்வின் முடிவில் கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் திரு.சுரேசு நன்றி தெரிவிக்க கீற்று அன்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது.








செய்திகள்-படங்கள்கீற்றுக்காக...கவிமதி/துபாய்

Sunday, December 7, 2008

துபாயில் வாழும் இந்தியர்களின் மனிதாபிமானமும், வாழை இலை விருந்தும்


முன்னோடிகள் : குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில் வேலைத்தேடி செல்பவர்களில் குறிப்பாக துபாய் வந்தவர்களில் விடுமுறை நாட்களில் மது கடைகளுக்கு செல்பவர்கள் தொடங்கி, வழக்கமாக மதுக்கடைகளிலேயே இருப்பவர்வரை நிறைய பேர்வழிகளை கண்டிருக்கிறோம்.
வரும்போதும் கடன், இங்கு வந்த பிறகும் கடன்வாங்கி கேளிக்கைகளில் ஈடுபடுவதுஎன தங்கள் வாழ்க்கையை கடனில் முழ்கிக்கொண்டும் இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலைவரை செல்வதும் இங்கு மிக மிக சாதாரணமாக நடப்பவை. இதனால் தற்கொலை செய்தியை எங்கேனும் கேட்க நேர்ந்தால் கூட துபாயில் இருப்பவர்களுக்கு அது பெரிதான செய்தியில்லை என்றே சொல்லலாம்.

இப்படியான ஒரு சூழலில் (துபாய்) அஜ்மான் என்கிற பகுதியில் வசிக்கும் கட்டுமான தொழில் செய்யும் நம் தமிழ் உறவுகள் கூடி தங்களுக்குள் ஒரு சிறுசேமிப்பு திட்டம் உறுவாக்கி அதன் மூலம் தங்களுக்குள்ளாக தாங்களே உதவிக்கொள்வது என்கிற ஒரு அற்புதமான திட்டத்தினை ஏற்படுத்தி தற்போது மூன்றாம் ஆண்டினை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் எத்தனைப்பேர் நம்ப தயாராக இருப்பார்கள் என்பதை புகைப்படத்துடனும் பயனடைந்தவர்களின் பெயர் பட்டியலுடனும் வெளியிடுவதால் இதை படித்தாவது, கேள்விபட்டாவது பலர் இவர்களை பின்பற்றி பலனடைந்தால் நமக்கு மகிழ்ச்சிதான்.

சரி அப்படி என்னதான் இவர்கள் செய்துவிட்டார்கள் என்று கேட்டீர்களானால் என்னால் பட்டியலிடமுடியும். இன்று இவர்களின் அதாவது நண்பர் சிறுசேமிப்பு திட்டக்குழுவினரின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழாவிற்கு அழைப்பின் பேரில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இப்படிபட்ட முன்னோடிகளின் அபார செயலை பதிவாகி உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் புலம்பெயர்ந்தவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் உறுதியாக மகிழ்வடையளாம்.
1.தாங்கள் எடுக்கும் ஊதியத்தில் 50 திர்ஹம்களை இத்திட்டத்திற்கான சேமிப்பாக வழங்குகிறார்கள். இதை திரு. கோபாலகிருட்டிணன் என்பவர் தலைமையேற்று அனைவரையும் ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை கூடி கிடைக்கும் பணத்தை அப்போது யாருக்கு தேவை என்பதை அறிந்து வழங்குவதுடன் அத்தொகைகான குறைந்த அளவு வட்டியாக சிறு தொகையையும் பெற்று சேமிப்பில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
2.இச்சேமிப்பு தொகையானது உறுப்பினர்களில் யாருக்காவது அவசர பயணமாக தாயகம் செல்ல வேண்டியிருந்தால் பயச்சீட்டு தொகைக்காக அதற்கு வட்டியில்லா கடனாக வழங்கிகொள்கிறார்கள். சம்மந்தபட்டவர் திரும்பியதும் இத்தொகையானது சிறு தவனைமுறையில் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

3.வழக்கமான விடுமுறையில் செல்பவர்களுக்கு இத்தொகையிலிருந்து 500திர்ஹம் வட்டியில்லா கடனாக வழங்கப்படுகிறது.

4.மேலே குறிப்பிட்ட வட்டிதொகையினை என்ன செய்கிறார்கள்? என்கிற கேள்வியில்தான் இத்திட்டத்தின்மூலம் இவர்கள் அடைந்த வெற்றியின் சிறப்பு தெரிகிறது.

5.இவ்வட்டித்தொகையினை சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தின் தேவைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துக்கொண்டு உபரியாக உள்ள பணத்தை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக பிரித்துக்கொள்வது வழக்கமா இருந்தது.

6.மூன்றாவது ஆண்டாகிய இன்று உபரித்தொகையை கணக்கிட்டு 26 உறுப்பினர்களுக்கும் தலா 10 கிராம் தங்க மோதிரம் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தாய்மண் வாசகர் வட்ட தலைவர் திரு.சே.ரெ.பட்டணம் மணி, அமீரகத் தமிழர் அமைப்பின் முன்னால் தலைவர் திரு.வே.பாரத், தாய்மண் சர்வதேச அறக்கட்டளை நிறுவனர் திரு.ம.சங்கத்தமிழன், செயலாளர் அன்பழகன், துவக்கு இலக்கிய அமைப்பின் தலைவர் திரு.இ.இசாக், அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை செயலாளர் திரு.கவிமதி கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நண்பர் சிறுசேமிப்பு திட்டத்தின் உறுப்பினர்கள் கோபால கிருட்டிணன், வினோத், கார்த்திக், பெருமாள், மணிமுத்து, சேவுகமூர்த்தி, நாகராஜ், கருப்பையா, முருகானந்தம், மணிமாறன், உதயக்குமார், சரவணன், கிருடிணன், பொன்னுச்சாமி, கண்ணன், போஸ் ஆகியோருக்கு மோதிரம் வழங்கப்பட்டது. விழாமுடிவில் அனைவருக்கும் வாழையிலையில் விருந்து வழங்கப்பட்டது.

Thanks to http://www.adhikaalai.com/



கவிமதி, துபாய்

Tuesday, November 25, 2008

இஸ்லாமியப் பெண்கள்




இஸ்லாமியப் பெண்கள்
நேர்காணல் - கவிஞர் சல்மாஇஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது?


எனக்குத் தெரிந்த எத்தனையோ இந்துக் குடும்பங்களில் என்னைப் போன்று அடக்கிவைக்கப்படும் பெண்களைப் பார்த்திருக்கிறேன்.


வீட்டிலிருந்து வெளியில் வராமல் எவ்வளவே பேர் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.







இந்து-முஸ்லீம் என்ற வேறுபாடில்லாமல் பெண்களுக்கான சிரமம் என்பது ஒன்றாகவே இருக்கிறது.இதை என்இந்துத் தோழிகள் மூலமாக அனுபவப்பூர்வமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அப்போதுதான் எல்லாப் பெண்களுக்குமான பிரச்சினையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். 'இஸ்லாமியப் பெண்' என்ற தனிப்பட்ட அடையாளம் எனக்கு வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். என் தனிப்பட்ட அடையாளம் மட்டும்தான் என் கவிதைகளில் இருக்கிறது என்றால் எல்லாத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கவிதைகளாக அவை இருந்திருக்காது. ஜாதி மத வேறுபாடுகளைத் தாண்டிய, எல்லாப் பெண்களின் அனுபவமாகத்தான் என் கவிதைகளைப் பார்க்கிறேன்.




நன்றி...http://vippenn.blogspot.com/2004/06/blog-post.html
Posted by கவிமதி at 6:02 AM 0 comments

Sunday, November 23, 2008

அன்பு அண்ணன் ஹாஜி அவர்களுக்கு‏

ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லும்
அடி மணல் தூய்மை
எம் உறவுகளின் அடையாளம்

உலகின் ஈரம்காயாத அறிவுகளை
அள்ளி அள்ளி இலக்கிய பசியாற்றுவது
எம் தாய்மையின் அடையாளம்

நெடுந்துயர்ந்த மரமேரி கீற்றுமேல் அமர்ந்து
இளநீர் இறக்கி இளைப்பாற்றுவது
எம் விருந்தோம்பலின் அடையாளம்

தமிழின் தொன்மம் தேடித் தேடி
இன அடையாளத்திற்கு ஏர் பிடிப்பது
எம் உழைப்பின் அடையாளம்சக தமிழனின் உணர்வு பாய்ச்சலுக்கு
விருது படைத்து வீரத்திலகமிட்டு
வெற்றிக்களிப்பில் துள்ளிகுதிப்பதுதான்
எம் தூய்மை நட்பிற்கு அடையாளம்

அத்தகையதொரு அடையாளமாய்
எம் தோழர் இனியவன் இருக்கையில்
இனி எமக்கேது சோர்வு

தொடர்க உம் அடையாளப் பணி
பின்னால் தொடரும் உங்கள்
தம்பிகளின் அணி.

தோழர் ரமேசு (கீற்று.காம்)அவர்களுக்கு விருதளிக்கத்
தேர்வு செய்தமைக்கான மகிழ்வில்
தோழர்களுடன் துள்ளி குதிக்கும்

கவிமதி
துபாயிலிருந்து...



அன்பு அண்ணன் ஹாஜி அவர்களுக்கு
தங்களின் அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டவன்.தாங்கள் விருதுகள் பற்றி தொலைபேசியில் சொன்ன கருத்து மகிழ்ச்சிக்குரியது..

உங்கள் நல்ல பணிகள் முறையாகவும், முழுமையாகவும், அமைய கீற்று தள ஆசிரியர் நண்பர் இரமேசு அவர்களுக்கு பரிசளிப்பது சிறப்புக்குரியதாகும்.


கீற்று இரமேசு மின்னஞ்சல்: editor@keetru.com
அலைபேசி: 0091 9940097994
பரிசளிக்க உள்ள செய்தியை மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள்.
தேவை ஏற்பட்டால் முழுமையான ஒத்துழைப்பு வழங்க அணியமாக உள்ளேன். என்னால் இயன்ற ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும்.

மிக்க அன்புடன்
தம்பிஇசாக்

"thamizum nAmum vERallathamizh thAn namakku vEr"pEsa//
+971 50 4804113
http//www.iishaq.blogspot.com
http://www.thai.tamilveli.com
http://www.keetru.com http://www.vaarppu.com

Dear Ramesh,
You have been awarded Sheik Zayed Bin Sultan Al Nahyan Award. We will send US$ 250 for appriciation. Kindly send your bank account. Mr. Ishaq or Mr. Kavimathy will follow up further. Kindly read my awake..aware..activate...(vizhiththezhu..uNarvukoL..uruvaakku...) part II hand written copy is attached.

please review and give comments.

Regards,
Iniyavan Haji Mohamed
Director: Iniyavan Media Vision International
Post Box No: 80993
Al Wakrah - Qatar
Mobile: 00974 6932877/5128019/5170994
Email: iniyavan.haji@gmail.com, makkal_media@oneindia.in, iniyavan_haji@hotmail.com
http://ilaiyarajali.blogspot.com, http://iniyahaji.blogspot.com, http://iiniyamedia.blogspot.com,