Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, January 17, 2009

பாபா.. எங்கள் பழனி பாபா...



பாபா.. எங்கள் பழனி பாபா...

பாபா...
மனிதநேயத்தை
எங்களுக்கு
அறிமுகம் செய்து
வைத்த ஆசானே!
மத நல்லிணக்கத்தை
மதிக்கச்சொன்ன மகானே!

மனிதரில் புனிதனே!
மங்காத சுடரொளியே!
பகுத்தறிவை எமக்கு
போதித்த அறிவொளியே!

உண்மைக்கு
குரல் கொடுத்தாய்!
உரிமையைக் காக்க
உயிரையே கொடுத்தாய்!

நீ
மொழியால் தமிழன்
இனத்தால் திராவிடன்
தேசத்தால் இந்தியன்
மார்க்கத்தால் முஸ்லிமென்றும்

என்னைச்
சிறையில் அடைத்தாலும்
சிலுவையில் அறைந்தாலும்
சித்திரவதை செய்தாலும்
சீரான மார்க்கம் விட்டு
சிறிதளவேனும் மாறேனென்று
மார்தட்டிச் சொன்னாயே!

எங்களுக்கு
தளபதியாய் முன்னின்று
களம் அமைத்துக் கொடுத்தாய்!
கலங்கரை விளக்காக
நலம் பல புரிந்தாய்!

நாங்கள் உன்னை
பாபா.. பாபாவென்றே
பாசத்துடன் அழைப்போம்..!
நீ எங்களை
அத்தா.. அத்தாவென்றே
அன்பொழுக அழைப்பாய்!

நூற்றி இருபத்தாறு முறை - நீ
சிறை சென்றாய்;
அத்தனை முறையும்
நீதான் வென்றாய்!
சட்டம் உன்னிடம் மட்டும்
சரண் அடைந்தது!

நான்
சிறையில் உன்னைச்
சந்தித்த நாளை
மறக்கவே இல்லை!
பழங்கள் கொண்டு வந்தேன்..
பணியாரம் செய்து வந்தேன்...
வெளிநாட்டிலிருந்து
வாசனை திரவியமும்
வாங்கி வந்தேன்!

ஆனால் நீயோ...
செடிகள் கொண்டு வா
பறவைகள் வாங்கி வா
சிறையின் அறையைச்
சுத்தம் செய்திட
சுண்ணாம்பு கொண்டுவா என்றே
ஒவ்வொறு முறையும்
ஒவ்வொன்றாய் கோட்பாய்...!

எத்தனைச் சிறைகள்...
அத்தனையிலும் நீ
பதியம் வைத்த
கன்றுகளெல்லாம் - இன்று
மரங்களாய்...
விருட்சங்களாய்...
உன் நினைவுச் சின்னங்களாய்...
நிழல் தருகின்றன...!

உன்னை வரவேற்க
ஒவ்வொரு சிறையும்
ஆவலாய்க் கத்திருக்கும்!
ஆம்...!
அவைகளுக்குள் - நீ
அடைபடும் நாள் - அவைகளுக்கு
போகிப் பண்டிகை நாள்!
அதற்கு அடுத்தநாளில் - வெள்ளைச்
சுண்ணாம்புச் சட்டையை
சுவர்கள் போட்டுப் பார்க்கும்!

கிழவனின் பொக்கை வாயாய்ச்
சிரிக்கும் தரையின் குழிகளைச்
சிமெண்ட் கலவையால்
சரிசமம் செய்வாய்!
உனக்குத்தான் - எதையும்
சரிசமம் ஆக்குவதில்
சலிப்போ வராதே!

பழையன கழிந்திடவும்
புதியன புகுந்திடவும்
பாதை அமைத்துத்
தந்தவர் நீங்கள்!
சிறைச் சாலையில் - உன்
அதிகாரம் எப்போதும்
கொடிகட்டிப் பறக்குமே!

வெளியில் நீ பேசினால்
கருஞ் சட்டைப்படை
ஆவலாய் கேட்கும்!
உள்ளே பேசினால்
காவலர் படையும்
ஆவலாய் கேட்கும்!

கைதிகள், காவலர்கள்
பார்வையாளர்கள் என்ற
பாகுபாடு பார்க்காது
போதனைகள் செய்வாய்!

நீ
பாடம் எடுக்கும்
பாணியே அலாதிதான்!
கழுவும் மீனில்
நழுவும் மீன்போல
பொடி வைத்துப் பேசுவாய்!
வெடியாய் வெடிக்கும் - உன்
வார்த்தைகளுக்கு
விடை தெரியாத
விலங்குகள் கூட்டம்
வெறிப்பேச்சு என்றே
விளக்கம் கொடுக்கும்!

கலவரம் வருமென்றே
காவிக்கூட்டமும்
காக்கிக் கூட்டமும்
ஊரையே மிரட்டும்...
உளுத்தரைக் கூட்டும்...!

உன்னால் கலவரம்
வந்ததே இல்லையென்ற
உண்மை விவரம்
உலகே அறியும்!

எங்களுக்காக...
எவரையும் எதிர்ப்பாய்..!
எங்களைக் காக்க
உன்னையே கொடுப்பாய்!

எங்களை எதிர்க்க
எவருக்கும் பயம்..!
அது
அந்தக்காலம்..!

சிறைகளை நாங்கள்
சந்தித்து உண்டு!
வெளியெ நாங்கள்...
உள்ளே நீ...!

ஆனால் - இப்போது
உன் தம்பிகள் யாவரும்
உள்ளே... சிறைக்குள்ளே...
நம் தலைவர்கள் (?) யாவரும்
உல்லாசமாக... எதிரிகளோடு
சல்லாபம் செய்தபடி...
சந்தோசமாக...

போனால் போகட்டும்...
போய்த் தொலையட்டும்..
பிணம் தின்னும் கழுகுகளாலே
பயனொன்றும் இல்லை...
பேடிகள்.. கேடிகள்..
பிழைத்துப் போகட்டும்.. பாபா...!

பாபா...!
உன்னை
வீழ்த்தி விட்டதாய்
வெகுசிலர் நினைக்கலாம்!
ஒலி, ஒளிப் பேழைகளில்
ஒலித்துக் கொண்டும்
எங்கள் நெஞ்சில்
வாழ்ந்து கொண்டும் - நீ
இருக்கின்றாய் என்பதை
எத்தனைப் பேர் அறிவர்?

துக்கம் தொண்டையை
அடைக்குமு போதும்...
தூங்கிட உயிர்
மறுக்கும் போதும்...

கோழைகளைக் கண்டு மனம்
ஒல்தித்தெழும் போதும்...
நன்மை செய்ய
நினைக்கும் போதும்...
உண்மையைச் சொல்லி
விளக்கும் போதும்...

உந்தன் நினைவுகள்
எந்தன் நெஞ்சினில்
ஒவ்வொரு நாளும்...!
ஒவ்வொரு நாழிகையும்...!

பாபா...
வீரனாக வீழ்ந்து
வெற்றிக்கு வழிகாட்டினாய்..!

பாபா - நீ
விளைவித்த
விதைகள் நாங்கள்!
வீரமிக்கவர்கள்..
வீரியமிக்கவர்கள்...
விவேகமிக்கவர்கள்...!

பாபா - நம்
பசும்பொன் சொன்னாரே!
"விவேகமில்லாத வீரம்
முரட்டுத்தனம்!
வீரமில்லாத விவேகம்
கோழைத்தனமென்று!"

வீரத்துடனும் விவேகத்துடனும்
உன் வழிப்பாதையில்
வீழ்வது நாங்களெனினும்
வாழ்வது நன் சமுதாயமாக இருக்கட்டும்!

விரைவாய் வருவோம்..
விரைவில் வருவோம்...
வெற்றிக்கனியைப் பறித்துக்கொண்டு!

விண்ணும் மண்ணும் அதிர...
வானவர்கள் வாழ்த்தொலி முழங்க...
வரவேற்கத் தயாராய் இரு பாபா...!

ஜனவரி 28, 2002 அன்று பழனிக்கு அருகில் உள்ள புது ஆயக்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பழனி பாபாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது மண்ணறையில் அமர்ந்து இனியவன் ஹாஜி முஹம்மதுவால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதாஞ்சலி.

Tuesday, December 30, 2008

பாதகன் இஸ்ரேலியனால் கொல்லப்பட்ட பாலகனே! சுவனத்துக்கு சொந்தக்காரனே!



பாலஸ்தீன !பாலகனே
நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால்
நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை
நெஞ்சில் சுமக்கிறாய்.
நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து

எத்துனை வேதனை நீ ஏற்றாயோ
என்னாள் குமுற இயலவில்லை
உன் நெந்சம் துளைத்த ரவைகள்
எம் இதயமும் தொலைத்ததடா

காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய்
காலம் உனக்கு விடை தந்து விட்டது
காயம் உனது ஆறி விட்டது
இதயமோ எமது?

படை பட்டாளங்களுக்கு முன்னால்
பாலஸ்தீனனை உன்னால் எறியப்படும்
கற்கள் எம்மாத்திரம் என நினைத்திருந்தேன்
கண்டு கொண்டு விட்டேன் உண்மையை

ஷைத்தானை கல்லால்தான் அடிக்க வேண்டும்
சுவனத்தின் சொந்தகாரனே
ஷஹிதாகி சாய்ந்தவனே
சின்னஞ்சிறு பாலகனே

உன் மரண செய்தி கேட்டு
அன்னை உனது இங்கு
இன்னும் இருந்திருந்தால்
எப்படி துடித்திருப்பாளோ

இன்னும் அதிகமாய் இந்த
இஸ்லாம் சமுதாயம் துடிக்கிறது
இம்மை துறந்த இலவளே
என்றாவது சந்திப்போம்
இல்லை, இல்லை
சுவனத்தில் சந்திப்போம்

முதுவை சல்மான், ரியாத்

Tuesday, December 23, 2008

சும்மா அதிருதில்ல‏!

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால்
அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
==================================================
கவிதை:
ஜோதிகா கொஞ்சம் குண்டு
பூவுல இருக்கும் வண்டு
நல்லவங்க செய்யறது தொண்டு
நீயோ மர மண்டு
ஆனாலும்,நீதான் என் உயிர் ஃபிரண்டு!

காலை வணக்கம். ==================================================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். ==================================================
மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும். ==================================================
நம்ம நட்புக்கு நல்ல ரெண்டு உதாரணம்.

தளபதி படத்துல நீ ரஜினின்னா நான் மம்முட்டி
பிதாமகன்ல நீ விக்ரம்னா நான் சூர்யா.
என்ன பாக்கறே?
எப்பவுமே நான்தான்டா முதலில் சாகணும்,

என் நண்பா.No No அழக்கூடாது
Control yourself.
==============================
ஒரு சிறு கவிதை:
மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர்விட்டது தீக்குச்சி.
நினைத்து நினைத்து உருகியதுமெழுகுவர்த்தி.
==============================
நண்பன் 1: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா.
நண்பன் 2: கார் ஓட்டிப் பாரேன்.
==============================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள். ஏன்னா அறிவு......சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
==================================================
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: 'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
=============================================
-
Thanks to : Subram, Vijaya Balan, Doha - Qatar

Tuesday, November 11, 2008

அரேபிய வாழ்க்கை

பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்
அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்

விமானமும் விசாவும்
கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம்
பிச்சைக்காரானாக...

விழுவதற்குள் ஆவியாகும்
பாலைவனத் தூறல் போல்
காணாமல் போனது கனவு!

கழிவறை சுத்தம் செய்யும்
கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும்
அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்
வீட்டு வறுமை!

ஆசையும் மோகமும்
தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு
அறுபது நாட்கள்

எந்த விலக்கப்பட்ட
கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது
எங்கள் இளமை!

வெட்கம் விலக்கி
தொலைபேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!

நானில்லை எனத் தெரிந்தும்
நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!

நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!

பிழைப்பு தேடி
வாழ்வை இழந்தோம்.

விசா கடன் அடைக்கவே
வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன்
அடைக்க வழி இருக்கா?

நத்தைக் கூட்டிற்குள்
நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும்
பாழாய்போன பசியும்!

நான் சகித்து சகித்து
சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும்
அதிலோர் வீடும்

வயதும், முகமும்
வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத
குழந்தைகள் இரண்டு!

சக்கரையும் அழுத்தமும்
சரி விகிதத்தில்...

வரவுக்ககாக வந்தோம்
செலவாகிப் போனோம்

பிறிதொரு நாளில்
மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்"
நானும் எழுதினேன்
"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"

நன்றி : சேக் அப்துல்லாஹ்

Thursday, February 15, 2007

ஹஃபீஸ் கவிதை

பரிசு
***
கடவுளிடமிருந்து நான் நிறையவே
கற்றுக் கொண்டு விட்டேன்
இனி நான் என்னை
ஒரு கிறிஸ்தவன் என்றோ
ஒரு இந்து என்றோ
ஒரு முஸ்லீம் என்றோ
ஒரு பௌத்தன் என்றோ
ஒரு யூதன் என்றோ
சொல்லிக் கொள்ள மாட்டேன்

உண்மை என்னுடன் தன்னைப்
பகிர்ந்து கொண்டு விட்டது
இனிமேல் நான் என்னை
ஒரு ஆண் என்றோ
பெண் என்றோ
தேவதை என்றோ
அல்லது
ஒரு புனித ஆத்மா என்றோ
ஒருபோதும் சொல்லிக் கொள்ள மாட்டேன்

அன்பானது இந்த ஹஃபீஸை
ஆட்கொண்டு சாம்பலாகி விட்டது
மேலும்
இதுவரை என் அறிவுக்குத் தெரிந்த
எல்லா கோட்பாடுகளிலிருந்தும்
தத்துவங்களிலிருந்தும்
என்னை விடுவித்து விட்டது.