ராஷ்டிரபதிபவனில் எனக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தன. ஒன்று கீழ் தளத்திலும் இன்னொன்று முதல் மாடியிலும் இருந்தன. என்னுடைய பணிகள் ஆரம்பித்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அநேகமாக எல்லா கதவுகளும் ஜன்னல்களுமே அழகான திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தன. அதனால் சூரிய வெளிச்சம் உள்ளேயே வர முடியாத அளவுக்கு ஒளி குறைவாக இருந்தது. அலுவலகத்தின் வேலை நேரம் முடியும் வரை எல்லா விளக்குகளுமே எரிந்து கொண்டிருப்பதையும் கண்டேன்.
தினமும் காலையிலும் மாலையிலும் அங்கே நான் நடைப்பயிற்சி செய்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு இந்த யோசனையே தோன்றும். ஏன் சூரியனின் கதிர்கள் தடை செய்யப்பட்டது போல் இங்கே எல்லா கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கின்றன? அழகான சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே பரவாமல் தடுக்கப் பட்டிருப்பது ஏன்? சூரிய வெளிச்சம் வராததாலேயே எல்லா அறை களும் இருட்டாகக் காணப்படுகின்றன. அந்த இருட்டைப் போக்க செயற்கை விளக்குகள் நாள் முழுவதும் எரிகின்றன? இது மின்சக்தியை வீணாக்குவதாகத்தானே அர்த்தம்?
ஜனாதிபதி இயற்கையை ரசித்து ஆக வேண்டியது ஒன்றுமில் லை என்று சிலர் நினைத்திருக்கலாம் அல்லது பாதுகாப்பு காரணங் களால் கதவுகள் அடைபட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றி யது. உடனே என்னுடைய தனிப்பட்ட அலுவல் குழுவினர் மற்றும் பாதுகாப்புக் குழுவினரை அழைத்துப் பேசினேன். அவர்களிடம் என்னுடைய எண்ணங்களை எடுத்துரைத்தேன். இயற்கையின் மகத்தான உருவம்தான் சூரியன். அதனுடைய கதிரும் வெளிச் சமும் நம் மீது பகல் நேரங்களில் படவேண்டும். தனிப் பட்ட ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் சூரியக்கதிர் ஒரு கிரிமிநாசினியாகவும் வைட்டமின் சக்தியாகவும் பயன்படும் என்பதை எடுத்துச் சொன் னேன். அவர்களும் அதை உணர்ந்தார்கள்.
ராஷ்டிரபதி பவனின் பல கதவுகளும் ஜன்னல்களும் திறந்தன. தெளிந்த காற்றும் இளஞ்சூடான சூரிய வெப்பமும் உள்ளே வந்தன. அதைக் கண்ட பணியாளர்களின் முகங் களில் பரவசமும் ஆச்சரியமும் இணைந்து தென்பட்டன. பலர் என்னிடம் வந்து இதற்காக நன்றி கூறினார்கள். ஒரு அடைபட்ட இடத்தில் இவ்வளவு நாள் சிக்கிக் கிடந்து இப்போது விடுதலை ஆனது போன்ற உணர்ச்சி ராஷ்டிரபதி பவன் எங்கும் தெரிந்தது.
பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருந்த பல விளக்குகளுக்கு இப்போது வேலை இல்லை. இயற்கை வெளிச்சமே போதுமானதாக இருந்தது. ராஷ்டிரபதி பவனில் ஆயிரக்கணக் கான விளக்குகள் உண்டு. பகல் நேரங்களில் அவை வீணாக எரிவதால் எத்தனை பணம் அநாவசியச் செலவு? இப்போது அந்தப் பணம் மிச்சமானதைக் கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அங்கே என்னைக் காண வந்தவர்கள் எல்லாம் திறந்த கதவுகள், ஜன்னல் களைப் பார்த்து ஆச்சர்யம் அடைந் தார்கள். பாராட்டைத் தெரிவித் தார்கள். “உங்கள் இல்லங்களையும் அலுவலகங்களையும் இதே போல் மாற்றுங்கள்’’ என்று நான் அவர் களிடம் சொல்வேன்.
இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், அலுவல கத்துக்கும் அடிப்படையான விஷயம். கதவுகளையும் ஜன்னல்களையும் பகல் நேரங்களில் திறந்து வைப்பதால் தேவையில்லாமல் மின் விளக்குகளையும் மின் விசிறிகளையும் பயன்படுத்தத் தேவை யில்லை. இதை கான்ஷியஸாகச் செய்வதன் மூலம் உங்களின் மின் கட்டணத்தில் பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள்.
பல மலைக்கிராமங்களில் சூரிய ஒளி பேனல்களின் மூலம் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் சக்தியாக மாற்றப்படு வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்தியாவைப் போன்ற வெப்ப நாடுகளுக்கு இந்த சோலார் எனர்ஜி டெக்னாலஜி பெரிய மாற்றத்தைத் தரும். கர்நாடகாவில் உள்ள பிஆர் மலைப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் சிறிய சோலார் பவர் பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பதை நான் கண்டிருக் கிறேன். அந்த மலைப்பகுதி வீடுகள் முழுக்க சூரிய சக்தியி னாலேயே தமக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன. காண்பதற்கே மிக அழகான காட்சி அது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் விளக்கு மற்றும் விசிறிகளுக்காக சூரிய சக்தி மின்சாரத்தையும், பயோகேஸ் மூலம் சமையல் முதலான எரிசக்தியையும் பெற்று , சுகாதாரமான கழிவுநீர் வசதிகள் மற்றும் இனிய சுற்றுச்சூழலை தன்னிறைவு பெற வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. அது பல கிராமங்களில் நனவாகி வரு கிறது என்பதும் உண்மையே. சூரிய சக்தி பேனல்களோடு எல்.ஈ.டி கிறிஸ்டல் அடிப்படையிலான விளக்குகளைப் பயன்படுத்துவது என்பது மின்சக்தி பயன்பாட்டை இன்னும் குறைக்கும். சோலார் தெர்மல் என்று வீடுகளில் பயன் படுத்தக் கூடிய டெக்னாலஜியும் இருக்கிறது. இதன் மூலம் வீடுகளுக்குத் தேவையான சுடுதண்ணீரை ஹீட்டர்களில் கொண்டு வர முடியும். ஏர்கண்டிஷனர்களையே இயக்க வைக்கும் அளவுக்கு மின்சக்தியை இந்த சோலார் தெர்மல் டெக்னாலஜியினால் அளிக்க முடியும். இதெல்லாம் மிக விரைவில் மக்களைச் சென்றடையப் போகிறது.
"காணி நிலம் வேண்டும்'’என்று பாடியவர் பாரதி. அது ஒவ்வொரு இந்தியனின் கனவு. நம் நாட்டில் 300 மில்லியன் மக்கள் நடுத்தர வர்க்க வருமானத்தில் உள்ளார்கள். சுமார் 220 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருடைய கனவும் தங்களின் தலைக்கு மேல் ஒரு கூரை. எலி வளையானாலும் தனி வளை என்பதுபோல சிறியதானாலும் சொந்தமாக ஒரு வீடு.
இந்தக் கனவை நனவாக்க, முதல் கட்ட நடவடிக்கையாக அடுத்த 15 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 130 மில்லியன் வீடுகளையாவது நாம் கட்டி முடிக்க வேண்டும். இந்த வீடுகள்தான் நமது நாட்டின் முதுகெலும்பாக எதிர்காலத்தில் திகழப் போகின்றன. இந்த வீடுகளையும் “பசுமை வீடுகளாக “ நாம் கட்ட வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவது என்பது ஒரு தேசத்தைக் கட்டுவது போல.
இப்படிப்பட்ட கனவுகளை எல்லாம் நனவாக்க, உடனே வேண்டும் இளைஞர்களின் “லீடர் ஷிப்!
மூன்றே நிமிடத்தில் வர்த்தக ஆலோசனை!
சிவராமன் (செயல் இயக்குனர்- ராயல் கிளாசிக் குரூப்)
எங்களின் வர்த்த கத்தை இந்தியாவுக்கு வெளியேயும் விரிவுபடுத்த உந்துசக்தியாக இருந்தவர் டாக்டர். கலாம்தான். கடந்த 2004-ம் ஆண்டில் திருப்பூரில் நடந்த ஏற்று மதியாளர்கள் கண் காட்சிக்கு வந்திருந்த குடியரசுத்தலைவர் கலாம், ஒவ்வொரு ஸ்டாலாக பார்வையிட்டு வந்தார். ரீபோக், அடிடாஸ் என்ற வெளிநாட்டு பிராண்டு களுக்கு டி-சர்ட் தயாரிப்ப தாக அவருக்கு ஏற்றுமதி யாளர்கள் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். அப்போது, "இங்கே இந்தியப் பெயரில் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களே இல் லையா?' என்று கேள்வி எழுப்பினார் கலாம்.
உடனே அருகில் இருந்தவர் கள் எங்களின் கிளாசிக் போலோ அரங்குக்கு அவரை அழைத்து வந்த னர். அவரை வரவேற்ற அண்ணன் சண்முகத்திடம் வாழ்த்து சொன்னவர், "வெளிநாடுகளுக்கு உங்கள் தயாரிப்பு களை விற்பனைக்கு அனுப்புகிறீர் களா?' என்று கேட்டார். "இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறோம்... இதுவரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய தில்லை' என்றதும், "வெளிநாட்டிலும் உங்க விற்பனையை விரிவு படுத்துங்க சார்.... இந்திய தயாரிப்புகள் இந்தியக் கம்பெனி பெயரிலேயே உலகம் முழுக்க விற்பனை செய்யப்படணும்' என்று அழுத்தமாக கூறினார். அவர் பேசியது 3 நிமிடங்களுக்குள்தான். ஆனால் அதற்குள் பெரிய விருட்சத்துக்கான விதையை விதைத்து சென்றார். இன்று சிங்கப்பூர், துபாய் என்று எங்கள் வர்த்தகம் விரியும்போது அவர் முகம்தான் முதலில் எங்களுக்குத் தெரிகிறது.
அப்துல்கலாம் குறித்த டாக்கு மெண்டரியின் முதல் பிரதியைக் கொடுக்க இயக்குனர் ’மின்வெளி’ தனபாலும், நானும் ராஷ்டிரபதி பவன் சென்றிருந்தோம். அப் போது, அரசு பள்ளிகளுக்கு நாங்கள் செய்து வரும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை அவருக்கு காட்டினேன். திருப்பூர் இருவம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒன்ற ரை கோடியில் நாங்கள் கட்டிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் டாய்லெட்ஸ் உள்ளிட்ட வற்றை பார்த்தவர், "சம்பாதிக்கிற ஊருக்கு செலவும் செய்யணும் சார்.
அதை சரியா செய்யறீங்க. பாராட்டுக்கள். அரசு பள்ளி களில் டாய்லெட்ஸ் இருக்காது. அவசியம் உங்க பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு டாய்லெட்ஸ் கட்டிக்கொடுங்க' என்று சொல்லி முதுகில் தட்டிக்கொடுத்தார். கலாம் சாருக்கு மாணவர்கள் மட்டுமல்ல, என்னைப்போன்ற வர்த்தக பிரமுகர்களும் பெரிய ரசிகர்களாக இருக்கிறோம்.
Monday, November 30, 2009
Friday, November 27, 2009
இறைவனிடம் கையேந்துங்கள்!!!
இஸ்லாம் எனும் மார்க்கம் இரண்டு பெரு நாட்களை இந்த உலகத்துக்கு அளித்தது. முதலாவதாக, நோன்புப் பெருநாள் எனும் ரம்ஜான், ஏழை, எளிய மக்களுடன் உண்ண உணவும், உடுக்க உடையும் அளித்து மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கும் திருநாள். இரண்டாவதாக, தியாகப் பெருநாள்.
இந்த இரு பெரு நாட்களும், தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் சரியான வழியில் பயிற்சி பெற வைக்கிறது.
உடலாலும், உள்ளத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யவோ, நினைக்கவோ கூடாது. நம் சேமித்த பொருளில் ஒரு பகுதி, ஏழை, எளியோருக்கு தர்மம் செய்வது, நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது, இதுவே ஒவ்வொரு மனிதனின் கடமை. இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், கடைசி மாதம் துல்-ஹஜ், இதுவும் மாபெரும் தியாகம் உள்ளடக்கிய மாதம்.
கருணைக் கொண்ட ரஹ்மானாகிய அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹீம் (அலை) கனவில் தோன்றி, "உம்முடைய மகனை என் பெயரால் அறுத்து பலி இடு' என சொன்ன போது, தன்னைப் படைத்தவனின் கட்டளை நிறைவேற்ற, தன் மகன் நபி இஸ்மாயிலிடம் (அலை) கூற, "தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ அதை நிறைவேற்றுங்கள்; நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்' என பதிலளித்தார். பிறகு இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்தில், பிள்ளைப் பாசம் தடுக்காமலிருக்க, கண்களை துணியால் கட்டி, கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, "அல்லாஹ் மிகப்பெரியவன்' எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில், ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியை கண்டார்.
"எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே! அவனைத் தவிர, வணக்கத்துக்குரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி' என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இதன் நினைவாகவே, எங்கள் நபிகள் முகம்மது (ஸல்), "இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்தத் தியாகம் நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்' என்றார். "நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ என்னை அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் எண்ணங்களை நான் நன்கறிந்தவனாக உள்ளேன்' என, அளவற்ற அருளாளன் பகர்கிறான்.
இத்தியாகத் திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துங்கள். எல்லாம் வல்ல இறைவனே, புகழ் அனைத்தும் உனக்கே. இவ்வுலகை படைத்து பராமரிப்பவனே, அளவற்ற அருள் பொழிபவனே, நிகரற்ற அன்புடையவனே, தீர்ப்பு நாளின் அதிபதியே, உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக. அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, நம் நாட்டில் சுபிட்சம், சாந்தி, சமாதானம், மனிதநேயம் ஏற்படுத்துவாயாக. நோய், நொடியற்ற வாழ்வு, இல்லாமை இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, எல்லாருக்கும், இந்த நல்ல நாளில் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம் வல்ல நாயனே! ஆமீன்.
குர்பானி: இறைவனின் நண்பர் ஹஸ்ரத் இபுராஹீமின் (அலை) ஈடு இணையற்ற தியாகத்தை, இந்த குர்பானி உணர்த்துகிறது. நீண்ட நெடிய காலம் தவமிருந்து இறைவனின் கொடையாகக் கிடைத்த அம்மகனை இறைவன் கேட்கிறான் எனும் போது, அம்மகனை இழக்கத் துணிந்த தியாகம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த உணர்வில், நாம் பிராணிகளை அறுத்துப் பலியிடும் போது வெளிப்படும் தியாக உணர்வை, இறைவன் விரும்புகிறான். அதற்காக நன்மைகளை வழங்குகிறான். "பிராணியின் இறைச்சியோ அல்லது ரத்தமோ இறைவனை சென்றடைவதில்லை என்றாலும், இறையச்சமே அவனைச் சென்றடைகிறது!' (23-37) "உமது இறைவனைத் தொழும் இன்னும் பிராணியை அறுத்துப் பலியிடும்!' (108-2) அல்குர்ஆனின் இந்த வசனங்கள், குர்பானியின் நோக்கங்களைத் தெளிவுபடுத்துகிறது. இதன் வழிமுறைகளைத் தெரிவிக்கும் பல நபிமொழிகளும் வந்துள்ளன.
நபி (ஸல்), இருதுரும்பை ஆடுகளை அதன் விலாப்புறமாக படுக்க வைத்து, பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறியவர், தனது கரத்தால் அறுத்தார். (அறிவிப்பு: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்) "குர்பானி கொடுக்க நாடியவர் பிறை 1 முதல் 10 வரை தனது முடியை கத்தரிக்க வேண்டாம்; நகங்களை வெட்ட வேண்டாம்!' (அறிவிப்பு: உம்முஸலமா (ரலி) நூல்: முஸ்லிம்) "ஒட்டகம் ஏழு பேருக்காகவும், மாடு ஏழு பேருக்காகவும், குர்பானி கொடுக்க வேண்டும்!' (அறிவிப்பு: ஜாபிர் (ரலி), அபூதாவூது, முஸ்லிம்) நபியிடத்தில், "எப்படிப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுப்பதை விட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்?' எனக் கேட்டதற்கு, "நான்கு' என தனது விரலால் சைகை செய்துவிட்டுக் கூறினார்.
தெளிவாகத் தெரியுமளவு நொண்டு பிராணி; காது அறுக்கப்பட்டது தெளிவாக தெரியும் பிராணி; நோயுள்ளது என தெளிவாகத் தெரியும் பிராணி; எலும்புகள் தெரிகிற பலவீனமான பிராணி. (அறிவிப்பு: பர்ரா இப்னு ஆஸிப், நூல்: அஹ்மது, திர்மிதி) குர்பானி பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மையிருக்கிறது. மேலும், அது இபாதத்தாக இருக்கிற காரணத்தால், அதைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலே அதைப் பலியிடும் விஷயத்திலே மார்க்கத்தின் வழிமுறைகளை பேண வேண்டும்.
* ஸதக்கத்துல் பித்ரு கடமையானவர்களின் மீது குர்பானி வாஜிபாகிவிடும்.
* வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஸதக்கத்துல் பித்ரு கடமையாகும். அளவு வசதி இருந்தால், அதை தனித்தனியாகக் கணக்கிட்டு, தனித்தனியாக ஒவ்வொருவருக்காகவும் குர்பானி கொடுக்க வேண்டும்.
* ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஆண், பெண் இரு இனங்களையும் குர்பானி கொடுக்கலாம்.
* வேறு விலங்கினங்களை குர்பானி கொடுக்கக் கூடாது.
* ஆடு ஒருவருக்காகவும், மாடு, ஒட்டகம் போன்றவற்றை ஏழு நபர்கள் கூட்டாக குர்பானி கொடுக்கலாம்.
* ஆட்டை குர்பானி கொடுக்கும் போது, அதில் அகீகா என்ற நிய்யத் சேர்ந்திருந்தாலும் குர்பானி கொடுக்கலாம்.
* குர்பானி பிராணியை தானே அறுப்பது சிறந்தது.
* குர்பானி பிராணியின் முடியை வெட்டக் கூடாது.
* குர்பானியின் இறைச்சியை அவரே வைத்துக் கொள்ளலாம். என்றாலும், அதை மூன்று பங்கிட்டு, ஒன்றை தனக்கும், இன்னொன்றை உறவினர்களுக்கும், இன்னொன்றை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பது சிறப்பு.
* குர்பானியின் தோலை சொந்தமாகப் பயன்படுத்தலாம். அதை விற்றால் அதை தர்மம் செய்துவிட வேண்டும்.
இவ்வகை முறைகளைக் கையாண்டு, நமது குர்பானியை நிறைவு செய்ய வேண்டும். வேறு நோக்கங்கள் ஏதுமில்லாமல், இறை திருப்தி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் குர்பானி தான் சிறந்தது. அப்படிப்பட்ட குர்பானியை மேற்கொண்டு, சிறப்படைய இறைவன் நல்லருள் பாலிப்பானாக!
"ஹஜ்' என்ற புனிதப் பயணம்: இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் உண்டு. கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ். கலிமா என்றால், "லா இலாஹா இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசுவில்லாஹ்' என்பதாகும். இதன் அர்த்தம், இல்லை இறைவன், அல்லாஹ்வை தவிர. முஹம்மத், அல்லாஹ்வின் தூதர். இந்த கலிமாவை ஒவ்வொரு முஸ்லிமும் மனப்பூர்வமாக சொல்ல வேண்டும். தினசரி ஐந்து வேளை தொழுவது, முஸ்லிம்கள் கடமை. ப்ஜர் (காலை), லுஹர் (பகல்), அஸர் (மாலை), மரிஃப் (அந்தி நேரம்), இஷா (இரவு). ஆண்டுக்கு ஒருமுறை பிறை பார்த்து, ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க 29 அல்லது 30 நாட்கள் நோன்பு வைப்பது மூன்றாவது கடமை.
வசதியுள்ளவர்கள் தங்களிடம் உள்ள செல்வத்திலிருந்து 2.5 சதவீதம், வருடந்தோறும் ஏழைகளுக்கு உதவி செய்வது ஜகாத். வசதியுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒருமுறை, ஹஜ் எனும் புனிதப் பயணம் செல்வது, அவர்களது ஐந்தாவது கடமை. மக்கா மாநகரில் உள்ள மஸ்ஜிதே, "ஹரம்' எனும் பள்ளிவாசல், முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல். இதை கட்டியவர் இப்ராஹிம் (அலை); புதுப்பித்தவர் முகம்மது நபி (ஸல்).
வருடந்தோறும் ஜில் ஹஜ் மாதத்தில், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வது ஹஜ். மற்ற காலங்களில் சென்றால், அது உம்ரா. ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலங்களில் 35 லட்சம் ஹாஜிகள், காபத்துல்லாஹ்வில் கூடுகின்றனர். இனம், நிறம், மொழி, தேசம் என்ற பாகுபாடின்றி, அத்தனை மக்கள் அங்கே கூடுவது பார்க்க பரவசமான காட்சி.
"லப்பைக் அல்லாஹும்மா லப்பைக், லப்பைக் லாஷரீகலக லப்பைக், இன்னல் ஹம்த வல் நியமத...'
"இதோ வந்து விட்டோம் இறைவா! உன் அழைப்பை ஏற்று உன் இடத்திற்கு, இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற...'
அங்கே சென்றிருக்கும் ஷாஜிகளின் புனிதப் பயணத்தை இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும், ஆமீன். அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும், ஆமீன். இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கட்டும், ஆமீன். உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும், ஆமீன். நிறம், மொழி, மதம், ஜாதி, இனம், தேச வெறி கொண்டு, மனிதன் மனிதனை துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும், ஆமீன். தேச எல்லைகள் கடந்து, நாம் எல்லாரும் மனிதர்கள் தான் என்ற பரந்த எண்ணம் உருவாகட்டும்... ஆமீன்.
நன்றி: தினமலர் நாழிதழ்

Monday, November 9, 2009
இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்!!!????
பிரிட்டன்
மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.
ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப் பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.
இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!
"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர்.
கள ஆய்வு : முஹம்மத் மாலிக் முஹம்மத் ஆரிஃப்
தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்

Saturday, November 7, 2009
அன்பைப் பரிமாறுவோம் -
மனிதர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு, நேசம், நட்பு ஆகியன நீடித்து நிலை பெறுவதற்குரிய காரணிகளை அண்ணலார் (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
அவைகளில் ஒன்று அன்பளிப்புகளை பரஸ்பரம் வழங்கிக் கொள்வது. அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அதற்கு பதிலாக (அதே சமயம் அல்லது வேறொரு சமயத்தில்) தாமும் ஏதேனும் வழங்குவார்கள்”.
(நூல்: புகாரீ 2585)
அன்பளிப்பு பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமும் அதற்கு பிரதியாக அன்பளிப்புகளை நம்மால் இயன்றளவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலார் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் செய்து காட்டி நமக்கு வழிகாட்டுகிறார்கள்.
அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டு அவரிடம் கொடுப்பதற்கு ஏதேனும் இருந்தால் அதற்கு பதிலாக தனக்கு அன்பளிப்பு செய்தவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும். எதுவு மில்லையென்றால் (நன்றி கூறும் வகையில்) கொடுத்தவரை புகழட்டும். ஏனெனில் யார் புகழ்ந்தாரோ அவர் நிச்சயமாக நன்றி செலுத்தி விட்டார். யார் (புகழவில்லையோ மாறாக உபகாரத்தை) மறைத்தாரோ அவர் நன்றி மறந்தவராவார்.
“அறிவிப்பாளர் : ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி)
(நூல்: அபூதாவூது – 4813)
இந்த நபிமொழி மூலமாக அன்பளிப்புக்கு பிரதி உபகாரமாக நாமும் ஏதாவது ஒரு வகையில் அன்பளிப்பு வழங்கியவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அன்பு நீடிக்க காரணமாகும் என்பதை அறிகிறோம்.
அன்பளிப்பில் அளவு பார்க்க வேண்டாம்
நம் வாழ்வில் பல்வேறு வைபவங்களில் விசேஷங்களில் அன்பளிப்பு செய்கிறோம். அல்லது அன்பளிப்பு பெறுகிறோம். அன்பளிப்பு செய்வதிலும் பெறுவதிலும் மனிதர்களுக்கு மனிதர் ஒருவருக்கோர் வித்தியாசப்படலாம். வசதியானவர்கள் உயர்வான அன்பளிப்பு பொருளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழ்மையானவர் அவரின் சக்திக்கு தக்கவாறு அன்பளிப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வர்.
ஏழையோ, பணக்காரரோ உயர்ந்த அன்பளிப்பு பொருளோ சிறிய அன்பளிப்பு பொருளோ இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். “ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன்.
எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி. அதைப் பெற்றுக் கொள்வேன்” என்று கூறிய அண்ணலார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் பெண்களே ! ஓர் அண்டை வீட்டுக்காரி மற்றொரு அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாக கருத வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: புகாரீ 2566 -2568
அன்பளிப்பு செய்பவரின் அன்பைத்தான் காண வேண்டுமே தவிர அவரின் அந்தஸ்தையோ அன்பளிப்பு பொருளின் தரத்தையோ பார்க்க கூடாது. அண்ணலாரின் வரலாற்றில் அன்பளிப்பு செய்ய வந்த ஒரு ஏழைப்பெண்மணியிடம் அன்னார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது அன்பளிப்பு பெறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். மதீனா நகரில் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு பலர் அன்பளிப்பு கொடுத்து அதன் மூலம் மனம் நிறைவடைவார்கள்.
சிலர் தின்பண்டத்தை சிலர் பழங்களை என்று அவரவர்களுக்கு பிடித்தமான பொருளை மனமுவந்து அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கு வார்கள். ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் தோழர்கள் சூழ மஸ்ஜிதில் அமர்ந்திருந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு திராட்சை பழக்கொத்து ஒன்றை கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கி அதை புசிக்குமாறு வேண்டி பணிவுடன் நின்றார். தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து எதை சாப்பிட நேர்ந்தாலும் அதை தோழர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கி விட்டு பின்பு தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் உண்பார்கள்.
ஆனால் இப்போது அந்தப் பெண்மணி கொடுத்த திராட்சை பழக்கொத்தில் ஒன்றை ருசித்த அண்ணலார் (ஸல்) அவர்கள் தொடர்ந்து எல்லா பழங்களையும் ஒன்று கூட விடாமல் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். யாருக்கும் வழங்கவில்லை. பரிசளித்த அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நான் வழங்கிய எல்லா திராட்சையையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதை கண்டு மனம் நிறைவடைந்து அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று சென்றார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர்களுக்கு ஆச்சரியம் தாளவில்ல.
எந்த ஒரு தின் பொருளையும் பகிர்ந்தளித்து சாப்பிடும் அண்ணலார் (ஸல்) அவர்கள் இந்த தடவை தங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட திராட்சையி லிருந்து ஒன்று கூட யாருக்கும் வழங்கவில்லையே ! என்ன காரணம்? இது குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடமே சில தோழர்கள் கேட்டும் விடுகிறார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் அளித்த பதில்! “தோழர்களே ! அந்த பெண்மணி மிக அன்போடு திராட்சை குலைகளை எனக்கு வழங்கினார். அதை ருசித்த நான் அந்த பழங்கள் மிக புளிப்பாக இருப்பதை உணர்ந்தேன். அதை உங்களுக்கு யாருக் காவது கொடுத்தால் “புளிக்கிறது” என்று கூறுவீர்கள்.
அல்லது முகத்தையாவது சுளிப்பீர்கள். இதனால் அந்தப் பெண்மணியின் மனம் நோகி விடும். எனவே தான் அந்தப் பெண்மணி மனம் சங்கடப்படக் கூடாது. சந்தோஷம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் திராட்சைப் பழங்கள் முழுவதையும் அது புளிப்பாக இருந்தும் நானே சாப்பிட்டு விட்டேன். இதைக் கண்டு அந்தப் பெண்மணியும் மனநிறைவோடு சென்று விட்டார்” என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அண்ணலாரின் இந்த பதில் தோழர்களை நெகிழச் செய்து விட்டது. எனவே அன்பளிப்பு பெறுபவர்கள் அன்பளிப்பு செய்பவரின் அன்பைத் தான் காண வேண்டும். அந்தஸ்தை அல்ல.
அன்பளிப்பில் ஹராம் ! ஹலால் !
நம்முடைய வாழ்வில் கொடுக்கல், வாங்கல், உணவு மற்றும் எல்லா நிலைகளிலும் ஹராம் மற்றும் ஹலால் பேணி வாழ வேண்டும். அது போன்று அன்பளிப்பு பெறுகிற விஷயத்தில் ஹராம் ஹலாலை பேணிக் கொள்ள வேண்டும். இது நடக்கிற காரியமா? அன்பளிப்பு செய்பவரின் தொழிலை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் நம் மனதில் வினா எழலாம். ஆனால் நமக்கு வழி காட்டிகளாக திகழ்ந்த வலிமார்கள், ஆன்றோர்கள் அன்பளிப்பு பெறு வதில் மிகுந்த பேணுதலை கடைபிடித்துள்ளார்கள்.
மஹ்பூபே சுப்ஹானி ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரளி) அவர் களின் வரலாற்றில் ஒரு சான்றை பார்ப்போம். மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் அருளுரை (பயான்) வழங்குகிறார்கள் என்றால் அதைக் கேட்டு பண்படைய லட்சக்கணக்கில் மக்கள் திரளுவார்கள். ஒரு நாள் அவர்களின் உரையை கேட்க வந்த லட்சக்கணக்கான மக்களில் கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அவர்களும் ஒருவராக அமர்ந்திருந்தார்.
நீண்ட நெடிய உரையை மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் முடித்தவுடன் அவர்களை கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அணுகி தான் கொண்டு வந்திருந்த பத்து பைகள் நிரம்பிய பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கி அதை ஏற்க வேண்டும் என பணிவுடன் வேண்டி நிற்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் அவை களில் இருந்து இரண்டு பைகளை எடுத்து தங்கள் கைகளால் பழத்தை பிழிவது போன்று பிழிகிறார்கள். அப்போது அனைவரையும் அதிர்ச்சி யடைய வைக்கும் ஒரு காட்சி நிகழ்கிறது. பிழியப்பட்ட அந்தப்பையில் இருந்து இரத்தம் பீறிட்டு வழிகிறது. கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் முதற்கொண்டு அங்கிருப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியுடன் அதைப் பார்க்கிறார்கள்.
அப்போது மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் கூறு கிறார்கள். “என்ன பொற்காசுப் பையிலிருந்து இரத்தம் வழிகின்றது என்று பார்க்கிறீர்களா? இது என்ன தெரியுமா? உங்கள் ஆட்சியில் மக்களை கொடுமைப்படுத்தி அவர்களைப் பிழிந்து எடுத்த இரத்தமாகும். (அதாவது தவறான ஆட்சியின் மூலம் மக்களை கொடுமைப்படுத்து கிறீர்கள்) இனிமேலாவது மக்களுக்கு நேர்மையான நீதியான ஆட்சியை வழங்குங்கள் என்று கூற, அதைக் கண்ணுற்ற கலீபா மயக்கமுற்று கீழே சாய்கிறார்கள்.
அப்போது அங்கிருப்பவர்களை நோக்கி மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இவர் மட்டும் அண்ணலார் (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹள்ரத் அப்பாஸ் (ரளி) அவர்கள் வழித்தோன்றலாக இல்லாதிருந்தால் இவருடைய அரண்மனை வரை இந்த இரத்தத்தை பாய்ந்தோடச் செய்திருப்பேன். ஆனால் இவர் என் உயிரினும் மேலான அண்ணலார் (ஸல்) அவர்களின் குடும்பத்தை சார்ந்தவராகவல்லவா இருக்கிறார் என்று கூறினார் கள்.
எனவே அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக் காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும்.
அல்லாஹ்வின் நினைவை அருளும் அன்பளிப்புகள்
இன்று வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் பல்வேறு பயன்களை நல்கும் விதமாக அமைகிறது. அன்பளிப்பாக வழங்கப்படும் அலங்கார விளக்குகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியால் கண்சிமிட்டி மகிழ்வை தருகிறது. மேலும் வாட்ச், கடிகாரம் மணிபார்க்க உதவுகிறது. மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பல்வேறு பலன்களை வழங்கு கிறது. ஆனால் மார்க்க ரீதியான தீனுக்கு சாதகமாக ஏதாவது அன்பளிப்புகள் பரிமாற்றம் செய்யப்படுகிறதா? என்று பார்த்தால் அது மிகவும் குறைவு.
ஆனால் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக திகழும் ஸஹாபாக்கள் வாழ்வில் அன்பளிப்பு பரிமாற்றங்கள் அல்லாஹ்வை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்திருந்ததை வரலாற்றில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. இறையச்சம் நிரம்பப் பெற்ற சாதாரண ஒரு ஏழைப் பெண்மணிக்கு “அந்தப் பெண் இறையச்சம் உடையவளாக இருக்கிறார்” என்ற ஒரே காரணத்தால் கலீபா என்ற ஜனாதிபதி பதவியை வகிப்பவர் தன் மகனையே “அன்பளிப்பாக” வழங்கி திருமணம் செய்து கொடுத்திருப்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் சொல்லும் கலீபா உமர் (ரளி) அவர் களின் ஆட்சி காலம் அது ! இரவு நேரங்களில் வலம் வந்து மக்களின் குறைகளையும் குமுறல்களையும் ஊரின் நிலைமையையும் அணிந்து அதற்கேற்றார் போல் துரித நடவடிக்கை எடுப்பது ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் ஆட்சி முறை! வழக்கம் போல் ஒரு நாள் இரவு கலீபா ஹள்ரத் உமர் (ரளி) அவர்களும், அவர்க்ளின் பிரியமான தோழர் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி) அவர்களும் நகர் வலம் வருகிறார்கள்.
ஒவ்வொரு வீதியாக வந்து இறுதியாக குடிசை குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு வருகிறார்கள். அப்போது ஒரு குடிசையினுள் வயோதிகப்பெண்மணி ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசும் ஓசை குடிசை தாண்டி கலீபாவின் காதுகளில் விழுகிறது. வயோதிகப் பெண்மணி கூறுகிறாள். “நாளுக்கு நாள் நமக்கு வறுமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
எனவே இனிமேல் நாம் விற்பனை செய்யும் பாலில் தண்ணீரை கலந்து விற்றால் தான் நமக்கு கட்டுப்படியாகும்” இதற்கு அந்த இளம் பெண் பதறியடித்தவளாக பதில் தருகிறாள் “வேண்டாம்மா! ஒருபோதும் கலப்படம் செய்து வியாபாரம் செய்யக்கூடாது. இது நம் நாட்டின் கலீபா அவர்களின் உத்தரவு!” இதனைக் கேட்ட அந்த தாய் “கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும்.நாம் கலப்படம் செய்வது கலீபாவுக் கோ, அல்லது அதிகாரிகளுக்கோ தெரிந்தால் தானே பிரச்சனை !
நாம் இரவோடு இரவாக பாலைக் கறந்து தண்ணீரை கலந்து விடலாம்” என்று கூறுகிறார். உடனே அந்த இளம் பெண் “இந்த நடுஇரவில் நாம் பாலில் தண்ணீர் கலப்பது கலீபாவுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் உன்னையும் என்னையும் இந்த பேருலகத்தையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு தெரியாமலா போகும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறானே ! என்று பதில் பகர்கிறார்.
குடிசையில் இருந்து வந்த இந்த உரையாடலை கேட்ட வண்ணமாக அவ்விடத்தை விட்டும் அகன்ற கலீபா உமர் (ரளி) அவர்கள் தன் நண்பரிடம் “வறுமையிலும் வழி தவறாமல் நேர்மையை யும் இறையச்சத்தையும் கடைபிடிக்கும் இந்த இளம்பெண்ணுக்கு என்ன பரிசளிக்கலாம்?” என்று வினவுகிறார்கள். நண்பர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரளி) அவர்கள் “நேர்மை தவறாத தக்வாவுடைய அந்தப் பெண்மணிக்கு ஆயிரம் திர்ஹம் வரை பரிசளிக்கலாம்” என்று பதில் பகர்கிறார்கள்.
ஹள்ரத் கலீபா (ரளி) அவர்கள் “இல்லையில்லை. அதைவிட அதிகமாக உயர்ந்த அன்பளிப்பு ஒன்றை நான் அளிக்கலாம் என எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். அப்படி என்ன உயர் அன்பளிப்பு? என புரியாமல் நண்பர் கலீபாவை பின் தொடர்ந்து வீட்டுக்கு வருகிறார்கள்.
மறுநாள் காலை கலீபா அவர்களின் இருப்பிடத்திற்கு அந்தப் பெண்ணும் அவளின் தாயாரும் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் கலீபா அவர்கள் ஏன் தங்களை அழைத்துள்ளார்களோ? என்று மனதில் பதறியபடி நிற்கிறார்கள். அவர்களை கலீபா அவர்கள் கனிவோடு அமரச் சொல்கிறார்கள். பின்பு தனக்கருகில் நின்றிருந்த தனது அருமை மகனை அழைத்து இரவில் நகர்வலம் சென்ற போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி “இது போன்ற இறையச்சம் நிறைந்த ஒரு பெண் தான் உனக்கு மனைவியாக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். நீ என்ன எண்ணுகிறாய்? என வினவுகிறார்கள்.
அதற்கு கலீபா அவர்களின் மகனார் “நான் இந்தப் பெண்ணை மனப்பூர்வமாக திருமணம் செய்ய விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். இங்கு அந்தஸ்து அழகு செல்வாக்கு என்று எந்த உலகாதய நோக்கமும் பார்க்கப்படவில்லை. அந்த ஏழைப்பெண் “இறையச்சம் மிகுந்தவளாக இருக்கிறாள்” என்ற ஒரே மறு உலக அம்சத்தை தகுதியாக பார்த்து தன் அருமை மகனை அந்தப்பெண்ணுக்கு கணவராக ஆகும் பேறை கலீபா அவர்கள் அன்பளிப்பு செய்கிறார்கள்.
இருவருக்கும் எளிமையான வகையில் திருமணம் நடைபெறுகிறது. இதுபோன்று நாம் வழங்கும் அல்லது பெறும் அன்பளிப்புகள் மறுமைக்கு சாதகத்தை ஏற்படுத்தும் வகையில் நன்மையை நல்கும் அம்சமாக அமைவது மிகவும் பலன் தரத்தக்க விஷயமாகும்.
அழிவைத்தரும் அன்பளிப்புகள்
அன்பளிப்பு பரிமாற்றம் என்பது பரஸ்பரம் அன்பு, நட்பு, உறவு, என்ற அம்சத்தின் அடிப்படையில் அமைவது அன்பளிப்பின் மரபு. அதே வேளையில் தற்போது ”காரியம் சாதித்துக் கொள்ளும் “லஞ்சமாக” வும் அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இது அன்பளிப்பின் நன்மையை சிதைத்து அழிவுப் பாதையில் தள்ளி விடும்.
ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை “தற்கால அன்பளிப்பு பரிமாற்ற” விஷயங்களில் வெளியிடுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களின் காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது. தற்காலத்தில் அது லஞ்சமாக மாறிவிட்டது” என தனது வருத்தத்தை வெளியிடுகிறார்கள். ஆன்றோர்களின் வாழ்வில் ஒரு சான்றை பாருங்கள்.
மவ்லானா அஷ்ரப் அலீதானவி (ரஹ்) அவர்களிடம் ஒரு நபர் வருகின்றார். ஒரு பொட்டலத்தை நீட்டி மவ்லானா அவர்களே ! இதை எனது அன்பளிப்பாக ஏற்க வேண்டும் ! என பணிவுடன் நீட்டுகிறார். வந்த நபர் புதிய நபர் என்பதாலும் அந்தப் பொருள் என்ன என்று தெரியாததாலும் மவ்லானா அவர்கள் “இது என்ன?” என்று வினவு கிறார்கள். இது எனது தோட்டத்தில் விளைந்த கரும்பிலிருந்து எடுக்கப் பட்ட சர்க்கரை ! என்று அந்த நபர் பதில் கூற அதை வாங்கிய மவ்லானா தன்னை சுற்றிலும் அமர்ந்துள்ள தனது மாணவர்களான உலமா பெருமக்களுக்கு பகிர்ந்து கொடுத்து தானும் சிறிதளவு சுவைக் கிறார்கள்.
சர்க்கரையை அனைவரும் சுவைத்த பின்பு அந்த நபர் மவ்லானா அவர்களை அணுகி “எனக்கு தாங்கள் பைஅத் செய்து கொடுத்து என்னை தங்களின் முரீ தாக்கிக் கொள்ள வேண்டும்” என்று பணிவுடன் வேண்டுகிறார். அதற்கு மவ்லானா அவர்கள் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போது தான் அறிமுகம் ஆகி உள்ளீர் கள். மேலும் பைஅத் ஆக வேண்டுமெனில் அதற்கு பல நன்னடத்தை விதிமுறைகள் உள்ளது. அதில் பூர்ணத்துவம் பெற்ற பின்பு தான் பைஅத் வழங்க முடியும் ! என தனது நிலையை விளக்குகிறார்கள்.
மவ்லானா அவர்களின் இந்த பதில் அவருக்கு கோபத்தை ஏற்படுத்து கிறது. “என்னை முரீதாக்கிக் கொள்ளவில்லையானால் எனது சர்க்கரையை திருப்பித் தாரும்!” என்று ஆவேசமாக கூறுகிறார். இதைக் கேட்டு மவ்லானாவும் சுற்றியிருந்தவர்களும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏதோ உள்நோக்கம் ஒன்றை வைத்து தான் இவர் சர்க்கரையை அன்பளிப்பு செய்துள்ளார். அன்பளிப்பு செய்ததை திருப்பி கேட்கிறாரே ! எல்லோருக்கும் அதை பகிர்ந்து கொடுக்கப்பட்டு விட்டதே! என்ன செய்வது? என மனதில் பரிதவித்தவாறு மவ்லானா அவர்களும் சுற்றி யிருந்த உலமா பெருமக்களும் அந்த நபரை அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைக்கிறார்கள்.
இனிமேல் அன்பளிப்பு பொருளை பெறு வதில் மிக ஜாக்கிரதையை கையாள வேண்டும். காரியம் சாதித்துக் கொள்ள அன்பளிப்பு தற்காலத்தில் வழங்கப்படுகிறது என்பதை மவ்லானா அவர்கள் வருத்தத்துடன் உணர்கிறார்கள்.
“(ஒருவர் அன்பளிப்பு செய்துவிட்டு அதை திரும்பக் கேட்டான் என்றால் வாந்தி எடுத்து அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன்”
(அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி)
நூல் : புகாரி
என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆக அன்பளிப்பு என்பது அன்பு, நட்பு, உறவு ஆகியவற்றை பரிமாற்றம் செய்ய இருக்க வேண்டுமே தவிர காரியம் சாதிக்க உதவும் லஞ்சமாக அமைந்து விடக்கூடாது.
எந்தப் பொருளை அன்பளிப்பு செய்யலாம் ?
அன்பை பரிமாற இன்று எத்தனையோ பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. அன்பளிப்புப் பொருட்களில் சிலருக்கு மிகவும் மனம் கவர்ந்த பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உகந்த அன்பளிப்புப் பொருள் யாது? ஹள்ரத் சுமாமா அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு எவராவது வாசனைத் திரவியத்தை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை நிராகரிக்க மாட்டார்கள்”
(புகாரி – 2582)
இதுபோன்று தற்காலத்தில் சமுதாயத்திற்கு மிகவும் பலன் தரத்தக்க அன்பளிப்புப்பொருள் என்னவெனில் பயனுள்ள வழிகாட்டும் நெறி நூல் களை அன்பளிப்புச் செய்யலாம். அன்பை பரிமாறவும் அறவழியை வளர்க்கவும் நூல் பரிமாற்றங்கள் நிச்சயம் துணை நிற்கும். அறிஞர் ஷேக்சஅதி அவர்களின் வரலாற்றில் ஒரு சான்றை இதற்கு சாட்சியாக கூறலாம்.
குலிஸ்தான், பூஸ்தான் போன்ற புகழ் பெற்ற காவிய நூல்களைப் படைத்த ஷேக்சஅதி அவர்கள் ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து பார சீகத்திலிருந்து ஈராக்கிற்கு பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரப் பயணம். 13 நாட்கள் கடந்து 14 நாட்கள் காலையில் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று கொள்ளையர் கூட்டம் ஒன்று பயணக்கூட்டத்தை சுற்றி வளைத்தது.
பயணிகள் திசைக்கொருவராக சிதறி ஓடுகிறார்கள். சஅதி அவர்கள் மட்டும் துணி வோடு இருந்த இடத்தை விட்டும் அகலாமல் பயணப்பொருளோடு நிற்கிறார். உத்தரவிட்டுக் கொண்டிருந்த (?) கொள்ளையர் கூட்டத் தலைவன் ஓடாமல் நிற்கும் சஅதி அவர்களுக்கு அருகில் வருகிறான். சஅதி அவர்கள் அவனைப்பார்த்து தன் பயணப்பொருட்களை சுட்டிக் காட்டி “இதோ! இந்தப் பையில் முழுவதும் புத்தகங்கள் தான் இருக் கின்றன. இவற்றை நான் மனப்பூர்வமாக உமக்கு அன்பளிப்புச் செய்கிறேன். ஆனால் என் கவலை என்னவெனில் நான் பொக்கிஷ மாக கருதும் இந்த புத்தகங்களை நீ நல்ல முறையில் உபயோகப் படுத்த வேண்டும் என்பது தான்!” என்றார்.
அதற்கு கொள்ளையர் தலைவன கிண்டலான தொனியில் “இதை எப்படி நான் உபயோகிப்பது? என்று வினவ! ஒரு நல்ல ஆசிரியரை நியமனம் செய்து உனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கச் சொல்.
அந்த ஆசிரியருக்கு சம்பளம் நான் கொடுக்கிறேன்! என்று சஅதி கூறுகிறார். இந்த புத்தகங் களை எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதால் என்ன பலன்? என்று அவன் மீண்டும் கேட்க; பிறர் பொருளை அபகரிப்பதும் களவாடு வதும் எவ்வளவு கொடிய செயல்! என்றும் அதன்மூலம் பாதிக்கப்பட்ட வர்கள் எவ்வளவு துன்பம் வேதனை அடைகிறார்கள் என்பது உனது குழந்தைகளுக்காவது தெரிய வேண்டாமா? என்று சஅதி சொன்னவுடன் சாட்டையடி பட்டவனாக கொள்ளையத் தலைவன் உணர்கிறான். மனதில் ஏதோ ரசாயண மாற்றங்கள் ஏற்படுவதைப் போன்று உணர்கிறான்.
உடனே ஷேக் சஅதி அவர்களின் கரங்களைப்பற்றி தம் அதரங்களில் ஒற்றிக் கொண்ட அவன் “பெரியவரே! என் கண்களையும் என் மனதை யும் திறந்து விட்டீர்கள். இத்தனை நாள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த என்னை எவரும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் என்னைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலான முறையில் என் முன் நின்றதோடு மட்டுமல்லாமல் எனக்கு அறிவுரை கூறி விட்டீர்கள்.
இனிமேல் நான் எந்த காரணம் கொண்டு இந்த தவறான தொழிலின் பக்கம் செல்ல மாட்டேன். இனிமேல் நானும் எனது கூட்டத் தினரும் உழைத்து பாடுபட்டு எங்கள் வாழ்க்கையை கழிப்போம்” என நெகிழ்வோடு கூறிய அவன் சஅதி அவர்களிடம் ”பெரியவரே! தயவு கூர்ந்து நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் நான் திருந்தி வாழவும் அறவழியில் செல்லவும் எனக்கு அது பயன்படும். என்று வேண்டுகோள் விடுக்க ஷேக் சஅதி அவர்கள் மிகவும் மகிழ்ந்து அந்தப் புத்தகப்பை அனைத்தையும் அவனுக்கு அன்பளிப்புச் செய்து அவன் நேர்வழி நடப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த வரலாற்று சம்பவத்தைப் போன்று அன்பளிப்பாக சிறந்த நூல்கள். மார்க்க தத்துவ நூற்களை அன்பளிப்புச் செய்தால் அது சிறந்த நற்பலனை நல்கும் என்பதில் சந்தேகமில்லை. நவீன இந்த யுகத்தில் அன்பளிப்பாக “கிஃப்ட் ஹாம்பர்” வழங்குவதைப் போன்று “குர் ஆனின் குரல்” போன்று தரமான இஸ்லாமிய மாத இதழ்கள் வருகின்றன. அவைகளுக்கு ஒரு வருடமோ அல்லது அதற்கு அதிகமாக நம்மால் முடிந்த அளவு சந்தா செலுத்தி யாருக்கு அன்பளிப்பு செய்ய நினைக் கிறோமோ அவர் பெயரில் இதழ்களை அனுப்பி வைக்கச் செய்யலாம்.
இதுபோன்று நல்ல புத்தகங்கள் அன்பளிப்பு செய்வதால் “அன்பளிப்பு செய்த திருப்தி நமக்கு ஏற்படுவதோடு அறவழியை காண்பித்த நன்மை யும் கிடைக்கும். எனவே நம் உறவுகள், நட்புகள், தோழமைகள் ஆகி யோருக்கு மத்தியில் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்வோம். அன்பை நீடித்து நிலைபெறச் செய்வோம். அல்லாஹ் நல்லுதவி புரிவானாக.
நன்றி : குர்ஆனின் குரல் ( மே 2009 )
( மவ்லவீ ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி, திருப்பூர் )
Friday, November 6, 2009
ஆன்மிக சிந்தனைகள் - 3
• மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.
• முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.
• வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.
• ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.
• கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.
• கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.
• இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது.
• மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.
• யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.
• ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள்.
• மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும்.
• எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
• அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை ஆகும். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.
• சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து மனிதன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.
• நாம் வாழும் காலமோ குறுகியது. இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையும் கொண்ட வர்களே இறைவனை அடையத் தகுதி உடையவர்கள். அதனால், இளமையிலேயே கடவுளை அறிய முற்படுங்கள்.
• ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று ஒவ்வொரு அவயங்களிலும் அந்தக் கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் சிறந்த வழி.
• சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள் ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள்.
• பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பல வீனத்திற்கான காரணத்தை சிந்திப்ப தல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
• உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது.
• எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடைய வராகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப் பழகுங்கள்.
• சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.
• ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
• நம்முள் நன்மை, தீமை என்று இரு விதமான எண்ணங் களும் இருக் கின்றன. நல்ல விஷயங்களில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் மட்டுமே நாம் நல்லவர்களாக முடியும்.
• நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும்.
• மகத்தான செயல்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அவற்றை செய்வதற்கு விடா முயற்சியோடு உங்கள் கடமைகளைச் செய் யுங்கள்.
• சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நம் மனோசக்தி வளரும். அதனால், நாம் அதிக அளவில் அறிவைப் பெறமுடியும்.
• தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
• நாம் எதையும் சாதிக்கவல்லவர்கள். உறுதியான மன நிலையில் விஷத்தைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தால், அந்த விஷம் கூட சக்தி அற்றதாகி விடும்.
• உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப் படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ் சென ஒதுக்குங்கள்.
• நீங்கள் போதுமான அளவுக்கு நெடுங் காலமாக அழுது விட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. எழுந்து நின்று உங்கள் சுயகால்களில் நின்று போராடத் தயாராகுங்கள்.
• பலமற்ற மூளையால் ஒன்றும் செய்ய முடியாது. பலமற்ற நிலையை மாற்றி மூளையைப் பலப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமை. பலம் வந்தால் வெற்றி தொடர்ந்து பின்னால் வரும்.
• தைரியமாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலானது துணிவு. இவ்வுலகில் வாழ்வு எத்தனை நாள்? நெஞ்சில் துணிவிருந்தால் மட்டுமே அரிய பெரிய செயல்களை எல்லாம் நிறைவேற்ற முடியும்.
• நாம் எப்படி எல்லாம் இருக்க விரும்புகிறோமோ அப்படி யெல்லாம் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடையே இருக்கிறது. உன் வாழ்க்கை உன் கையில் என்பது இதைத்தான்.
• இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற் காக நாம் வந்திருக்கிறோம்.
• இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் தான் நமது இன்றைய தேவை.
வெற்றி தோல்வியைப் பற்றி சிறிதும் சிந்திக்காதீர்கள். தியாக உணர்வோடு முழுமையாக கடமையைச் செய்யுங்கள்.
• நம் வாழ்க்கை ஒரு நாள் முடியப் போவது உறுதி. அதற்குள் ஒரு நல்ல செயலைச் செய்துவிட வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.
• கோழை தான் தப்பி ஓடமுயற்சி செய்வான். நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க கோழைத்தனம் பயன்படாது. எடுத்த செயல் முடியும் வரை சலியாது உழைத்து முன்னேறுங்கள்.
• தன்னை அடக்கி ஆளப் பழகிக் கொண்டவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அவனுக்கு அதன் பின் அடிமைத்தனம் என்பதே இல்லை.
• நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற வீணான மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்றவர்கள் .அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். இறையருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது.
• எல்லாவிதமாக அறிவும் ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படிச் செய்வது மட்டும் தான் ஒருவனுடைய வேலையாகும்
• தைரியமாயிருங்கள். எல்லாவற் றிற்கும் மேலாக என் பிள் ளைக ளாகிய நீங்கள் துணிவா யிருத்தல் வேண்டும். எதற் காகவும் எள் ளளவும் விட்டுக் கொடுத்தல் கூடாது.
• உங்களுக்குள் இருக்கும் தெய் வத் தன்மையை வெளியே புலப்படுத் துங்கள். தெய்வீகத் தன்மையைச் சுற்றி, ஒவ்வொரு செயலும் இசைவாக ஒழுங்குபடத் தொடங்கும்.
• எல்லா உயிர்களும் கோயில்கள் என்பது உண்மை தான். ஆனால், மனிதர்களே அனைத்திலும் உயர்ந்த கோயில். அதை வழிபட இயலாதவன் என்றால், வேறு கோயில் எதுவும் எப்போதும் பலன் தராது.
• மலைபோல உயர்ந்த தடைகளையும் தாண்டிச் செல் லும் மனவுறுதியோடு போராடுங்கள். நம்பிக்கையும், நேர்மையும், பக்தியும் உங்களிடம் இருக்கும் வரை வெற்றி உங்களைத் தேடிவரும்.
• இன்று நமது நாட்டின் மக்கள் மதிக்கப்படுவது நம் முடைய ஆன்மிக சிந்தனை, எண்ணங்கள் ஆகியவற்றுக்காகத்தான். ஆனால், அவற்றின் பெரு மையை நாம் உணரவில்லை. வெளிநாட்டு மக்கள் நமது ஆன்மிக வளத்திற்காகவே நம்மை நாடு கிறார்கள்.
• அனைவரும் அரும்பாடுபடும் நேரம் இது. எதிர்காலம் நம் முயற்சியைப் பொறுத்தே உள்ளது. எனவே, ஓயாது உழையுங்கள்.
• முயற்சியோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, ஏராளமான சக்தி நம் மிடத்தில் வெளிப்படுவதைக் காண லாம். பிறருக்காகச் செய்யும் சிறுநன்மைக்கான முயற்சியில் கூட சிங்கம் போன்ற பலனை நாம் பெறமுடியும்.
• எந்தச் செயலையும் நன்மை, தீமை என்று இரண்டின் கலப்பில்லாமல் செய்ய முடியாது. தீயைச் சூழ்ந்துநிற்கும் புகையைப் போல, சற்றேனும் தீமையின் நிழல் எச் செயலோடும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். மிகக் குறைவான தீமையும், மிகுந்த நன்மையும் இருக்கும் செயல்களைச் செய்ய முற்படுங்கள்.
• ஒருவரிடத்தும் பொறாமை கொள்ளாதீர்கள். கடவுளை எல்லாவுயிர்களுக்கும் தந்தையானவர் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, ஒவ்வொரு மனிதனையும் சகோதரனாக நினைக்கவில்லை என்றால் நம் வழிபாடு பொருளற்றதாகிவிடும்.
• பொறாமையும், சோம்பேறித்தனமும் அடிமையின் இயல்புகள். அவற்றை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமுடைய மனிதர்களாக சுறுசுறுப்போடு உங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.
• மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.
• மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.
• வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.
• நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.
• தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
• சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.
• பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.
-விவேகானந்தர்
-நன்றி : தினமலர் நாளிதழ்,

Wednesday, November 4, 2009
பாரம்பரியம் காக்கும் அமெரிக்க கிராமம்
நம் தாத்தாவின் தாத்தா வாழ்ந்த காலங்களைப் பற்றிக் கண்டவர்கள் இல்லை. அவர் வாழ்ந்த காலம், இடம், சூழல் இவற்றையெல்லாம் வரலாறுகளை வாசித்து மனக் கண்ணில் ஓடவிட்டுப்பார்த்துக் கொள்ளத்தான் முடியும். ஆனால் 1800களில் இருந்த அமெரிக்கக் கிராமம் ஒன்று இன்னும் அப்படியே பராமரிக்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! வாருங்கள் அந்த அற்புதக் கிராமத்தை ஒரு ரவுண்டு அடித்து வருவோம்!
நிகழ்கால வரலாறு.....
சற்றே கண்களை மூடி உங்கள் கற்பனைச் சிறகை விரியுங்கள். இப்போது....நீங்கள்... கடவுச் சீட்டு இன்றி அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் சாக்கோபி பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் பாதங்கள் தரையிறங்கிப் படர்ந்த காலம் மட்டும் சற்றே பின்னோக்கி ....
19ம் நூற்றாண்டு...
அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த பசுமைச் செழிப்பில் ஊறித் திளைத்திருந்த மின்ன சோட்டா நதிக்கரையில் செக், டானிஷ், பிரெஞ்ச், ஜெர்மன், ஐரிஸ், நார்வே மற்றும் ஸ்காண்டிநேவியன், ஆங்கிலேயர் என பன்னாட்டு மனிதர்களும் கூட்டுக் கலவையாக வந்து குவிந்து வாழத்துவங்கிய இடம் "மர்பி கிராமம்". அன்றைய அமெரிக்க அதிபர் போல்க், டகோட்டா இண்டியன் (இந்தியர் அல்ல) ஏஜெண்டாக மேஜர் மர்பி என்பவரை நியமித்தார்.
"மேஜர் மர்பி" காலுன்றிய இடம்தான் மர்பி கிராமமாக பின்னர் மாறியது. 88 ஏக்கர் பரப்பளவில் மர்பி கிராமம் அமைந்துள்ளது. இன்றைக்கு அமெரிக்காவில் எந்தக் கிராமமும் கிராமம் போல் இருக்காது. கிராமியத்தனம் இம்மி கூடத் தெரியாது. ஆனால் மர்பி கிராமம் 1800களின் மண் சாலையோடு இன்றைய நாகரிக நிழல் படியாமல் அரிக்கேன் விளக்கு வெளிச்சங்களில் "பாரதிராஜாவின்" கிராமத்து மண் வாசனையோடு இருந்திருப்பதை அறியமுடிகிறது. அவர்கள் வாழ்ந்த கிராமம், கடைத்தெரு, பள்ளி, கோவில், கடைகள், கிராம அதிகாரி அலுவலகம்,
வங்கி, அச்சுக்கூடம், கிட்டங்கி, கொல்லன் பட்டறை, காவல் நிலையம், உணவு விடுதி, ஒயின் கடை, கேளிக்கை விடுதி, பண்ணை வீடுகள், நீதிமன்றம் என 1800களை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள்.
அன்றைய அமெரிக்கக் கிராமத்தை இன்றைய இந்திய சிறு நகரத்திற்கு ஒப்பிடலாம்; 'மியூசியம்'
என்கிற சடங்குத்தனமின்றி சற்று வித்தியாசமாக ஒரு குளிர்காலத்தில் வீட்டைக்கதகதப்பாய் வைத்துக்கொள்ள வெப்பம்தரும் கருவி!
ஊரையே வளைத்து மரப்பலகை வேலியிட்டு பாதுகாத்து இருக்கிறார்கள். கடந்த காலத்தை நிகழ்காலமாக... ஒரு கற்பனை கலவாத நிஜமாகக் காண வைத்திருப்பது பாராட்டுதற்குரியது.
அது மட்டுமல்ல அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தவர்களைப்போல உடைகளில், நடைகளில், பச்சை ஆங்கிலத்தில் (அது என்ன பச்சை ஆங்கிலம் என்கிறீர்களா? நாம் பச்சைத் தமிழ் என்று சொல்வதில்லையா? அது போலத்தான்) பேசிக்கொண்டு அந்தக் கிராமம் முழுக்க "செட்அப் மனிதர்கள்"
சலவைத் தொழிலாளி குடும்பம் தச்சர் பொற்கொல்லர் வலம் வருவதோடு, கிராம நிர்வாகம், அன்றாட நடவடிக்கைகள் என்று அசலாக நடமாட விட்டிருப்பது சூப்பரோ சூப்பர்!
மினியாபொலிஸ் டௌன்டவுணிலிருந்து 35 நிமிடப் பயணம் சாக்கோபி. இரண்டாள் உயரத்துக்கு நடப்பட்ட மரவேலி; மரவேலிக்கு அந்தப் பக்கம் என்ன நடக்கிறது? நீங்கள் பார்க்க வேண்டாமா? என்ற கேள்வியோடு மரச் சுவர் ஏறி எட்டிப் பார்க்கிற ஒரு குடும்பச் சுவரொட்டி பெரிதாக கண்களில் படுகிறது. நபருக்கு நுழைவுக் கட்டணம் எட்டரை டாலர். நுழைவுச் சீட்டை நெற்றியில் ஒட்டாத குறையாக ஸ்டிக்கரைப் போல சட்டையில் ஒட்டி விடுகிறார்கள்.
உள் பக்கம் நுழைந்தால் நீநீநீநீளமான ரெட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டி தயாராக நிற்கிறது. குதிரை என்றால் அரேபியக் குதிரைகள் என்பார்களே அந்தக் குதிரைகளை எல்லாம் மிஞ்சும் ஜாம்பவான் குதிரைகள்; ஐம்பது பேர்களுக்கு மேல் தாராளமாகப் பயணிக்கலாம். ஐந்து நிமிடத்தில் குதிரை வண்டி "ஹவுஸ் ஃபுல்" ஆகி விடுகிறது. மூன்று பர்லாங் தூரம் பயணம். காட்டுக்குள் செல்வது போல இருக்கிறது.
கிராமத்தைச் சுற்றிவரும் ஜட்கா வண்டிகள்!
திடீரென்று ஒரு படு சுறுசுறுப்பான கிராமம். வண்டியிலிருந்து கீழே இறங்கினால் முதலில் தென்படுவது கொல்லன் பட்டறை. பட்டறையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் தங்கள் உழவுக் கருவிகளை கூர்படுத்தி வாங்குவதும், பட்டறையில் இருப்பதைப் பேரம் பேசி வாங்குவதும், பட்டறைக்காரரின் மனைவி அவ்வப்போது "சாப்பிடாமல் கூட என்னங்க வேலை பாக்குறீங்க?" என்ற கொஞ்சல், அதட்டல் எல்லாம் அவர்களின் மாமூல் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
பெரிய பண்ணை...
அடுத்து "பெரியபண்ணை" வீடு. விவசாயத்துக்கு வேண்டிய இடுபொருட்களிலிருந்து, குளிர் காலத்தில் கால்நடைகளுக்கு வேண்டிய தீவன சேமிப்புக் கிடங்கு, தானிய சேமிப்புக் கிடங்கு, கால்நடைகள் ஓய்வுக் கூடம், உழவு, களையெடுப்பு, கதிரறுப்பு இத்யாதிகள்... இத்யாதிகள் என இயந்திரங்களின் அணிவகுப்பு.
அந்தக் காலகட்ட மிட்டாமிராசுகள் வாழ்ந்த பண்ணை வீட்டு வசதிகள் ஒரு கணம் வியப்பிலாழ்த்தியது; இந்த வசதிகள் இன்றைக்குக்கூட இந்தியக் கிராமங்களில் வாழ்கிற "பெரிய பண்ணையம்" களில் இருக்கிறதா என்பது சந்தேகமே! அடுத்தடுத்து சின்னதும் பெரிதுமான வீடுகள்; எதிர்ப்புறம் 'எலிமெண்டரி ஸ்கூல்' என்ற பலகை தொங்குகிறது. கதவில்
லஞ்ச் டயம் என்ற அறிவிப்பு காணப்படுகிறது.
ஆரம்பப்பள்ளி, ஆசிரியை.....!
வரிசை வரிசையாக இருக்கிற வீடுகளைக் கடந்து நடந்தால் கடைத்தெரு.
குறுக்கும் நெடுக்குமாக குதிரைகளில் போகிறவர்கள், வருகிறவர்கள். ஒரு சலூன். சலூன் என்பது அந்தக் கிராமத்தின் கேளிக்கை விடுதியாகும். ஆண், பெண் பேதமின்றி புகை பிடித்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும், சீட்டு விளையாடிக் கொண்டும், சந்தோஷங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
ஓடிவா..ஓடிவா கிளாஸ் ஒரு டாலர் என்று கூவி விற்காமல் அந்த விடுதியின் நடு நாயகமாக ஒரு பெண் "ரூட் பீர்" எனப்படும் மது பானத்தை கண்ணாடி தம்ளர்களில் அளந்து விற்றுக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது, "ஜோஸ்யம் பாக்கலையோ ஜோஸ்யம்" என்ற பெண் குரல் கேட்டு குரல் வந்த திசைக்கு நம் பார்வை திரும்பியது. "ஜோஸ்யம் பாக்கலையோ... ஜோஸ்யம்...
கை ரேகை பாக்கலையோ கை ரேகை..." என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்தால்... பின்னே நம்ம ஊரா இருந்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டோம். சத்தம் கேட்ட இடம் அமெரிக்காவாச்சே!?
"இவ்விடம் கைரேகை பார்க்கப்படும்" என்ற போர்டு தொங்கிக் கொண்டிருக்க சிலருக்கு கைரேகை பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு அமெரிக்க நங்கை. கையில் ஒரு சிறு குச்சியை வைத்துக் கொண்டு நம்மூர் ஜக்கம்மா ஸ்டைலில் அவர்களின் எதிர்காலத்தை விலாவாரியாக ஒரு ராகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்க நங்கையிடம் நம்ம ஊர் பொடிசு ஒன்று கையை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த காட்சி மின்னியது.
நம் கையிலிருந்த காமிராவில் அதைக் கிளிக்கிக் கொண்டு நிமிர்ந்த போது டமால், டுமீல் என துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்தே போனோம். கால்கள் ஓட்டப் பந்தய வேகத்தில் ஓடுவதற்குத் தயாரான போது, அருகிலிருந்த அமெரிக்கர் நம்மை நிறுத்தி விபரம் சொன்னார். அப்புறம்தான் சத்தம் கேட்ட திசைக்கு நகர்ந்தோம்.
நிழல் நிஜங்கள்...
கெளபாய் குள்ளர்கள் அங்கிருந்த வங்கியின் காவலாளியை சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு குதிரைகளில் விரைந்து கொண்டிருந்தனர். விசாரித்ததில் இதே சம்பவம் 1817ம் ஆண்டு நடந்ததாகவும் அதை நிஜம் போல் நடித்துக் காட்டுவதாகவும் ஒரு மணிநேர இடைவேளைக்குப் பிறகு டவுன்ஹாலில் கோர்ட் விசாரணை இருப்பதாகவும் சொன்னார்கள்.
டவுன்ஹால் எனப்படும் கிராம நிர்வாக அலுவலகத்தில் எட்டிப் பார்த்தால் விசாரணை நடந்து கொண்டிருந்தது. காரசாரமாக நடந்த வக்கீல்களின் விவாதத்தைப் பொறுமையாக நீதிபதி 'ஐசக் அட் வாட்டர்' செவி மடுத்துக் கொண்டிருந்தார். கடைசியில் வங்கிக்காவலாளியை சுட்டுக் கொன்று கொள்ளையடித்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட இரண்டு கெளபாய் குள்ளர்களையும் தூக்கிலிடும்படி உத்திரவிட்டார்.
குற்றவாளிகளைக் காவலர்களும் ஷெரீப்பும் ஒரு மரத்தில் தூக்கிலிட அழைத்து வந்தனர். தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் வந்த கெளபாய் குள்ளர்கள் கூட்டம், படபடவென்று காக்கை குருவிகளைச் சுடுவது போல மற்றவர்களைச் சுட்டுத்தள்ளிவிட்டு கைதிகளை அபேஸ் பண்ணி மறைந்தனர். சினிமா சூட்டிங் பார்ப்பது போல ஆயிரக் கணக்கானோர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதேபோல 1800களில் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் நடித்துக் காட்டுகின்றனர். சம்பவங்களை மேடையில் நடித்துக் காட்டுவதைவிட கிராமியச் சூழலில் செயற்கைத் தனம் தெரியாமல் இயல்பாக நடப்பதாகவே செய்து காட்டுவது19ம் நூற்றாண்டின் நிழலை நிஜமாகத் தரிசிக்க முடிகிறது.
வேட்டையில் கிடைத்ததை திறந்தவெளியில் அடுப்பு மூட்டி சமைத்துச் சாப்பிடுகிற ஐரிஷ் குடும்பத்தைக் காணமுடிகிறது.
குதிரைகளுக்கு லாடம் அடிக்க வந்தவர்கள், விதவிதமான பிராணிகளின் தோல்களை பேரம் பேசி வாங்குபவர்கள், விற்பவர்கள், கைத்துப்பாக்கியிலிருந்து வேட்டைத் துப்பாக்கி வரை ரகம் ரகமாக விற்கும் பிரெஞ்சுக் கடைக்காரர், ஊசிமணி, பாசிமணி விற்கும் காட்டுவாசிகளான அமெரிக்க இண்டியன்கள் என அந்தக் கிராமம் சுறுசுறுப்புக் காட்டியிருந்ததை அறிய முடிகிறது.
கூடை முடையும் சிறுசுகள்...!
கிராமத் தெருக்களில் ஆங்காங்கே சிற்றுண்டிவிடுதி, உணவு
விடுதிகளெனப் பூத்திருக்க கலவையான ஜனங்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
மதுரை மணம்...
அந்தக் காலத்து வீடுகள் சிலவற்றை ஒரு சின்ன விசிட் அடித்ததில் அவர்களின் வாழ்க்கை வசந்தப்பொழுதுகளில் சொகுசாக இருந்ததை அறிய முடிகிறது. ஹால், கிச்சன், டைனிங், ஸ்டோர், பெட், பாத் என சகலகலா வசதிகள் வீடுகளில் உள்ளன. வீட்டைச் சுற்றி
அல்லது ஒரு பகுதியில் வீட்டுக்குத் தேவையான தக்காளி, காரட், பீன்ஸ், உருளை, கோஸ் என பயிரிட்டிருந்தததைப் பார்க்க முடிந்தது.
வீட்டின் உட்புறம் கைவேலைப்பாடுகள் நிறைந்த பொருட்களாலும், புராதனப் பொருட்களாலும் வெகுநேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. சுவர்களில் வண்ணச் சித்திரங்கள் கலை
நயத்தோடு காட்சி அளிக்கிறது. வண்ண வண்ணப் பூச்செடிகள் ஜாடிகளில் ஆங்காங்கே அலங்காரமாய் வீற்றிருக்கின்றன.
அந்தக்கால கைராட்டையில் நூல்நூற்கும் பெண்!
அன்றைய சாதாரண அமெரிக்கக் கிராம வீட்டில் நவீன தையல் இயந்திரம் இருந்தது. குளிர்காலத்தில் கதகதப்புக்கு கம்பளி நெசவு செய்யும் கைத்தறிக் கூடத்தை வீட்டின்
முற்றத்தில் வைத்திருந்திருக்கிறார்கள். டடக்...டடக் என்று பெண்கள் தறி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தறி ஒலி மதுரை செளராஷ்டிரத் தெரு ஒன்றில்
நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தியது.
சுத்திச் சுத்தி வந்தீக...
வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் இந்த "மர்பி கிராமம்" உயிர் பெற்று எழுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் வாழ்ந்த இடம், வீடு, தோட்டம், பள்ளி, சர்ச் என எல்லாம் நினைவிடங்களாகக் காட்சி அளிக்கிறது; தனியார் நிறுவனப் பராமரிப்பில் உள்ள இந்த
மர்பி கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் நிரந்தரமாக குடும்பங்களைச் சம்பளம் கொடுத்துக் குடியமர்த்தியுள்ளார்கள்.
அவர்கள் வேலை 19ம் நூற்றாண்டு மனிதர்களாக வாழ்க்கை நடத்துவது மட்டும்தான். அவ்வப்போது சில சம்பவங்களை இயல்பாக நடித்துக் காட்ட மட்டும் தன்னார்வத் தொண்டர்களுக்குத் தினசரி சம்பளம் கொடுத்து ஏற்பாடு செய்கிறார்கள். கிராமமே ஒரு
நாடக மேடையாகவும் அங்கு வாழும் மக்கள் எல்லாம் நடிகர்கள் என்பதை ஏனோ நம் மனம் நம்ப மறுக்கிறது.
"OLD IS GOLD" இல்லையா?
அமெரிக்காவில் இதுபோன்ற பாரம்பரியக் கிராமங்கள் மாநிலம் தவறாமல் அங்கங்கே அமைந்துள்ளது. இதையெல்லாம் பார்த்த போது, நம் தாய்த் தமிழகத்திலும் அந்தந்த மாவட்டத்துக்கு என்று ஒரு மண்வாசனை உள்ளது. ஆயிரம் ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் கிராமங்கள் எப்படி இருந்தது என்று அந்தந்த மாவட்டத் தலைநகரில் ஒரு செயற்கை கிராமத்தை அமைத்து இப்படி அந்தக் காலங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் ஆவன செய்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு நம்ம ஊரின் வரலாற்றை கண்முன் நிறுத்த பெரும் வாய்ப்பாக அமையும். உதாரணத்துக்கு தஞ்சையில் சோழ ராஜ்யம்,மதுரையில் பாண்டிய ராஜ்யம்,கோவையில் சேர ராஜ்யம் போன்று பிரம்மாண்ட காட்சியகங்களைஅமைத்து சேர சோழ பாண்டியமன்னர்களை உலாவரச்செய்யலாம். புறாவுக்காக தன் தசையறிந்துகொடுத்த மன்னனை உயிர்ப்பிக்கலாம். வாடிய முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்த பாரியை வலம்வரச் செய்யலாம்!
கற்பனை செய்யும்போதே நெஞ்சம் இனிக்கிறதே!
- ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா

Tuesday, November 3, 2009
ஓரின சேர்க்கை - ஓர் கொடிய பாவம்
கண்ணியமிகுந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...
சமுதாய துடிப்புமிகு இளைய சமூகமே! உங்களில் பலர் இஸ்லாமிய சிந்தனையுடனும், சமுதாய சிந்தனையுடனும் இருந்து, சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்களை தோலுரிக்க பாடுபட்டு வருவது எமது சமுதாயத்தின் பிரகாசமிக்க எதிர்காலத்திற்கு எடுத்துக்காட்டு.
எம்மில் பலர் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரிக்க பாடுபடும் அதே வேளையில், சிலர் ஐந்தறிவு படைத்த கால்நடைகள் கூட செய்திராத ஓரின சேர்க்கை என்ற ஈனத்தனமான பாவத்தை செய்துக் கொண்டு தம்மை நரக நெருப்பிற்காக தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த கொடும் பாவம், இறைவானால் கடுமையாக சபிக்கப்பட்ட இந்த பாவத்தை எமது சமுதாயத்தின் சில இளசுகள் விளைவுகள் தெரியாமல் செய்துகொண்டிருகிறார்கள் என்பது வெட்ககேடு!
இறைவனால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏராளம். அவர்களில் ஒவ்வொருவரும் அச்சமுகத்தில் நிகழும் அவலத்தை துடைதெரிந்து, மக்களை நல்வழி படுத்தவே அனுபப்பட்டனர்.
அப்படி இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் இருவரை பற்றி இத்தலைப்பிற்கு எடுத்துக்காட்டுக்காகவும், படிப்பினைக்ககாகவும் நாம் தெரிந்துகொள்வோம். அரபிய சமுதாயத்தைச் மட்டும் அல்லாமல், உலகின் எல்லா சமுகத்தையும் சீர்திருத்திட வந்த இறைவனின் மிகவும் பாசத்திற்கினிய நபி முகம்மது ஸல் (அலை) அவர்கள்.
நபி அவர்கள் அச்சமுதாயத்தை சீர்த்திருத்திய போது, நபியவர்களை அச்சமுதாயம் சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு ஆளாக்கின. இப்படி தன் நபியை அச்சமுகம் இன்னலுக்கு உள்ளாகிய போதும், கருணை கொண்ட இறைவன், அச்சமுதாயத்தை அழித்திடவில்லை.
ஆனால் ஓரின சேர்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழி படுத்த வந்த லூத் நபி அவர்களை (அல் குர்ஆன் 7:80,81; 11:78,79; 15:72; 26:165,166; 27:54,55; 29:28; 29:29) அச்சமூகம் ஒன்றும் பெரிதளவில் இன்னல்களுக்கு உள்ளாக்கவில்லை. அந்த சமூகம் திருந்த மறுத்து நபி அவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.
தன்னுடைய பாசத்திற்கினிய நபி அவர்களுக்கு அந்த அச்சமூகம் பல தொல்லைகளை கொடுத்தும் அச்சமுகத்தை அழித்திராத இறைவன், மற்றொரு நபியான லூத் (அலை) அவர்களுக்கு அவரது சமூகம் பெரும் தொல்லைகளை தந்திராவிட்டாலும் ஓரின சேர்கையில் ஈடுபட்டு வந்த அச்சமூகத்தை வேரோடு அழித்தான் இறைவன் (அல் குர்ஆன் 7:83; 7:84; 11:81; 11:82; 11:83; 15:65; 15:73; 15:74; 26:173; 27:58; 29:34; 51:33,34; 54:34; 54:38) இறைவன் ஓரின சேர்கை என்ற ஒரு அவலத்தை எந்தளவிற்கு வெறுக்கிறான் என்பதை மேலே பட்டியலிடப்பட்டுள்ள இறைவேத வசனங்கள் சாட்சியாக அமைகிறது.
நான் ஒரு சம்பவத்தை இங்கே பதித்தாக வேண்டும். எனது சொந்த ஊரான ஆயங்குடியில் தமிழ்கத்தின் முன்னணி இமாம்களில் ஒருவரான K.A. நிஜாமுத்தீன் (புரசைவாக்கம் பேஷ் இமாம்) அவர்கள் நடத்தி வைத்த ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அத்திருமணத்தில் மணமகன் தங்க மோதிரம் அணிந்திருந்ததை கண்ட ஹஜ்ரத் அவர்கள் " பன்றியின் இறைச்சியை உண்பது எப்படி ஹராமோ, சாராயம் அருந்துவது எப்படி ஹராமோ, அப்படித்தான் ஆண்கள் தங்க மோதிரம் அணிவதும் ஹராம்" என விளக்கமளித்து மோதிரத்தை கழற்றிவிடுமாறு கட்டளை இட்டார்கள்.
ஹஜ்ரத் அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால், உடன் பிறந்த சகோதரியையோ, பெற்றெடுத்த தாயையோ காம இச்சையுடன் தொடுவதும் ஹராமோ, அப்படியே ஓர் ஆண்மகன் இன்னொரு ஆண்மகனை இச்சையுடன் தொடுவதும், தொட நினைப்பதும் கூட ஹராமேயாகும்.
நம்மில் சிலர் இக்கொடிய பாவத்திற்கு அடிமையாகி இருக்கிறோம். இனி, காம இச்சையுடன் இன்னொரு ஆண்மகனை தொடும்போதெல்லாம் பெற்றெடுத்த தாயை தொடுகிறோம் என்ற உணர்வோ, உடன் பிறந்த சகோதரியை தொடுகிறோம் என்ற உணர்வோ வரவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் இறைவனின் நீதிமன்றத்தில் ஹராம் என்ற ஒற்றை குற்றபிரிவிற்கு உட்பட்டது.
இது போன்ற கொடிய பாவத்திலிருந்து எம்மையும், எம் பிள்ளைகளையும் இறைவன் காப்பாற்றிட வேண்டும்.
திருந்துவோம்.....! திருத்துவோம்.....!
ஆக்கம்: என் அன்பின் இளவல் - மு.இ. நசீருத்தீன், ஆயங்குடி
MI.Naseerudeen (aecnaseer85@hotmail.com)

Monday, November 2, 2009
திருச்சிசிதம்பரத்தில் ஜனவரியில் உலக சைவ மாநாடு
சிதம்பரத்தில் 2010 ஆண்டு, ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் 12-வது உலக சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்றார் பேரூர் இளைய ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, அண்ணாநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அருள்மிகு அன்பு பிள்ளையார் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
சிவநெறி கலந்த சைவத்தை போற்றுவதற்காக லண்டனில் 1985-ம் ஆண்டு மெய்கண்டார் ஆதீனத்தைச் சேர்ந்த சிவத்திரு சிவநந்தியடிகள் உலக சைவப் பேரவையைத் தோற்றுவித்தார்.
இந்த அமைப்பின் சார்பில் சென்னை, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, தஞ்சை, கனடா, மொரீஷியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை என இதுவரையில் 11 மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
தற்போது, உலக சைவப் பேரவையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து சிதம்பரத்தில் அடுத்த ஆண்டு, ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள உலக சைவ மாநாடானது, இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது மாநாடு ஆகும். மாநாட்டுப் பணிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைவராகவும், பழனி ஆதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளார் துணைத் தலைவராகவும், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் பொருளாளராகவும், சிதம்பரம் மெüன மடம் தவத்திரு மெüன சுந்தரமூர்த்தி அடிகளார் இணைச் செயலராகவும், என்னை பொதுச் செயலராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுப் பணிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நவ. 16-ம் தேதி நடைபெற உள்ளது.
மாநாட்டில் வெளி நாடுகளில் இருந்து சைவ நெறி பரப்பி வரும் 200-க்கும் மேற்பட்ட அறிஞர்கள், தமிழகத்தில் உள்ள சைவ அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என சுமார் 2000 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் கயிலைக் குருமணி பேரூர் அடிகளார், பிரான்ஸ் தவத்திரு யோகானந்த அடிகளார் ஆகியோர் அமைப்பாளர்களாக இருந்து பணியாற்றுவார்கள்.
மேலும், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், துறையூர் திருமுதுகுன்றம் ஆதீனம், நல்லை ஆதீனம், இலங்கை தவத்திரு பாலமுருகனடிமை ஆகியோர் அருள்புரவலர்களாகப் பணியாற்றுகின்றனர்.
திருமுறை வழிபாட்டு அமைப்பாளர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன் என்றார் மருதாசல அடிகளார். மணவைத் தமிழ்மன்றத் தலைவர் கரு. ராஜகோபாலன், திருக்குறள் பயிற்றக நிறுவனர் புலவர் நாவை. சிவம், தியாகேசர் ஆலை மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லோக. அருளரசன், நகர்மன்ற உறுப்பினர் பெ. ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)