Saturday, November 29, 2008

Who are the NRI's


வளமையான வாழ்விற்காக

இளமைகளை தொலைத்த


துர்பாக்கியசாலிகள் !




வறுமை என்ற சுனாமியால்


அரபிக்கடலோரம்கரை ஒதுங்கிய


அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !




சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது


வறுமை எனும்சூறாவளியில் சிக்கிய


திசை மாறிய பறவைகள் !




நிஜத்தை தொலைத்துவிட்டு


நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும்


அபாக்கிய சாலிகள் !




தொலைதூரத்தில் இருந்து கொண்டே


தொலைபேசியிலே குடும்பம்


நடத்தும் தொடர் கதைகள் !




கடிதத்தை பிரித்தவுடன்


கண்ணீர் துளிகளால்


கானல் நீராகிப் போகும்


மனைவி எழுதிய எழுத்துக்கள்!




ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும்


இல்லறம் நடத்தும்


கம்ப்யூட்டர் வாதிகள் !




நலம் நலமறிய ஆவல் என்றால்


பணம் பணமறிய ஆவல் என கேட்கும்


ஏ . டி . எம் . மெஷின்கள் !




பகட்டான வாழ்க்கை வாழ


பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த


பரிதாபத்துக்குரியவர்கள் !




ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே


மனைவியின் மூச்சுக்காற்றை


முற்றும் துறந்தவர்கள் !




வளரும் பருவத்திலே வாரிசுகளை


வாரியணைத்து கொஞ்சமுடியாத


கல் நெஞ்சக்காரர்கள் !




தனிமையிலே உறங்கும் முன்


தன்னையறியாமலே


தாரை தாரையாக


வழிந்தோடும்கண்ணீர் துளிகள் !




அபஷி என்ற அரபி வார்த்தைக்கு


அனுபவத்தின் மூலம்


அர்த்தமானவர்கள் !




உழைப்பு என்ற உள்ளார்ந்த


அர்த்தத்தை உணர்வுபூர்வமாக


உணர்ந்தவர்கள்!




முடியும் வரைஉழைத்து விட்டு


முடிந்தவுடன் ஊர்


செல்லும் நோயாளிகள் !




கொளுத்தும் வெயிலிலும்


குத்தும் குளிரிலும்


பறக்கும் தூசிகளுக்கும் இடையில்


பழகிப்போன ஜந்துகள்!




பெற்ற


தாய்க்கும் வளர்த்த


தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும்


பெற்றெடுத்த குழந்தைக்கும்


உற்ற குடும்பத்திற்கும்


இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !




Source: Bilal, Eta Melco Engineer, Doha - Qatar

‘என்கவுண்டர்’ இன்னமும் முடிவடைய இல்லை
















நண்பன்





எல்லையற்ற சிந்தனைகளின் தளம்..... கவிதைகள் வாயிலாக...
"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....." - நண்பன்


நாற்பத்தெட்டு மணி நேரங்களைத் தொடப் போகும் இந்த யுத்தத்தில், இன்னமும் நிலைமை தெளிவடையவே இல்லை. ‘முடிந்து விட்டது’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய ஒரு நிமிட இடைவெளிக்குள், அதிகாரிகள், ‘என்கவுண்டர்’ இன்னமும் முடிவடைய இல்லை, விலகுங்கள்’ என்று அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கு முன்னரே வெற்றி குரல்களும், பாராட்டு குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. It’s spontaneous. தேவையான ஒன்றும் கூட.




தங்கள் பணியை எந்த சார்புமற்ற பொதுமக்கள் உற்சாகக் குரல் கொண்டு ஆதரிக்கிறார்கள் என்பது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்த வீரர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தைக் கொடுக்கும். ஒவ்வொருவருமே தங்கள் பணிக்காக வெறும் சம்பளத்தை மட்டும் கொண்டே திருப்தியுறுவது கிடையாது. Appreciation is an important motivation. இந்தத் தாக்குதல் பற்றி, பலவகை எண்ணங்களும் கருத்துகளும் வலைத்தளத்தில் வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது பார்வையில் கருத்துகளை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனது கருத்துகளை சுதந்திரமாக வைக்க உரிமை இருக்கிறது.




ஒவ்வொரு இடத்திலும் பின்னூட்டமிடவில்லையென்பதால், அவற்றைப் பற்றிய எனது எண்ணங்களை மொத்தமாக ஒரே பதிவாக எழுதி விடுகிறேன்.




‘இந்தத் தீவிரவாதம், கஜினி முகமது, கோரி முகமது வந்த பொழுதே வந்துவிட்டது’என்ற நகைச்சுவையுடன், ஒரு முழுநீள காமெடியுடன் இட்லிவடை தளம் ஆரம்பிக்கின்றது. புஷ்ஷின் உறுதியான தலைமையாலேயே மீண்டும் அங்கு ஒரு தீவிரவாத செயல் நிகழவில்லை என்றும் வாதிடுகிறார்.. ‘அமெரிக்கர்களின் நலனை உலகம் முழுவதும் தாக்குவோம்’ என்ற அல்-கொய்தாவின் நிலைபாட்டையொட்டி, அமெரிக்கர்கள் இயங்கும் ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தத் தான் செய்கின்றனர் - அதை எதிர்த்துத் தான் அவர்களும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துகின்றனர் நேர்மையற்ற வழிகளில் என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி என்ன சொல்வது?








புஷ்ஷின் இந்தத் தோல்வி தான்,சமீபத்தில் நடந்த தேர்தலில் அகோரமான தோல்வியை அவரது கட்சிக்கும், நண்பருக்கும் பெற்று கொடுத்ததும் என்பதுவும், 'மிக மோசமான அதிபர்' என்ற பெயருடனும், பெருத்த அவமானத்துடனும் தான் அவர் பதவி விலகுகிறார் என்பதும் தெரியாதவர்களாக இவர்கள். இல்லை, நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம் அதனால் உலகம் இருண்டுவிட்டது என்று நாங்கள் சொல்லும் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களது வாதத்தின் 'அதிபுத்திசாலித்தனம்' குறித்து நகைக்க வேண்டியிருக்கிறது. இறுக்கமான சூழ்நிலையைக் குறைக்கத் தேவையான காமெடி நடிகர்களின் பணியைச் செய்திருக்கின்றனர்.




ஒரு காலத்தில் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாக். அரசைக் குறி வைத்துக் கூட தீவிரவாதத்தைத் தொடர்கின்றனர் என்ற பொழுது, அல்-கொய்தாவிற்கு யாரும் பொருட்டில்லை. இவர்களை ‘நல்லது / கெட்டது’ என்ற எல்லைக்குள் வைத்து மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர, வேறு எந்த சித்தாந்தாங்களுடன் இணைக்க முடியாது.
தன்னிச்சையாக இயங்கும் ஒரு Evil force மட்டுமே இவர்கள். அதை நியாயப்படுத்த அவர்கள் எந்த ஒரு தத்துவத்தையும் இழுத்து வந்து தங்களுக்கு அரணாக நிறுத்தி வைக்க முடியும். Counter terrorism என்ற வகையில், தாங்கள் நீதி வழங்கப் போவதாக எண்ணிக்கொண்டு, தீவிரவாதத்தை கையிலெடுத்த சில அமைப்புகளைப் போன்றதே இந்த அமைப்பும். counter terrorism என்பது ‘ரா’வின் வேலை என்று சொல்லி மற்றொரு நகைச்சுவையாளர் ஒருவர் தனது தேசபக்தியையும் வெளியிட்டிருந்தார். அத்துடன், இவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு நரேந்திர மோடி தான் சரி என்ற தீர்வையும் முன்வைக்கிறார்.


டோண்டுவும் கூட அந்த கருத்தைத் தான் வைக்கிறார். இந்தத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுவது ஒன்று தான் வழி என்ற இனஒழிப்பை ஆதரிக்கும் இவர்களால் வேறு நற்சிந்தனைகளை முன் வைக்க முடியாது. இஸ்லாமியர்களை அழித்து ஒழித்த பின்பு, வேறு எவரைக் குறித்த counter terrorism குண்டுகளை சங் பரிவார்கள் தங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப் போகிறார்கள் என்பது ஒரு interesting question! அல்லது தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிடப் போகிறார்களா என்பதுவும் தெரியவில்லை. மூடிவிட மாட்டார்கள். அழித்தொழிப்பிற்கு, அவர்களது மேலாண்மையை எதிர்க்க பலர் இருக்கின்றனர். மறுபுறம் பல கேள்விகளை எழுப்பி, இந்தத் தீவிரவாதிகளை இந்துத்வத்தின் முகமாகப் பார்க்க முனைகிறது – சத்தியமார்க்கம். அந்தத் தீவிரவாதிகள், தங்கள் கைகளில் சிவப்புக் கயிற்றை அணிந்திருந்தார்கள் என்ற சாதாரண விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வருவது எத்தனை சரியாகும்? என்றாலும், சத்தியமார்க்கம் எழுப்பிய முக்கியமான கேள்விகளில் ஒன்று – ஏன் ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்டார்?


Counter terrorism என்ற பெயரில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்த சில அமைப்புகளைக் குறித்த தகவலை வெளிக்கொணர்ந்தார் – அவர்கள் சங் பரிவார் சித்தாந்தத்தில் வந்தவர்கள் தான் என்ற தகவலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், சங் பரிவார்களும், அதன் அரசியல் முகமான பிஜேபி-யும் இனியும் தீவிரவாத துருப்புச் சீட்டை எடுத்ததெற்கெல்லாம் வீசியெறிய முடியாது என்ற இக்கட்டான நிலைமைக்கு கொண்டு வந்த ஆத்திரம் இருந்தது. அதனால், தீர்த்துக் கட்டி விட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்தது. ஆரம்பத்தில் அப்படித் தான் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்திருக்கும். ஆனால், தொடர்ந்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த நிலையின் உக்கிரம் அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது.


ஹேமந்த கர்கரே - தானாகத் தான் அங்கு சென்றிருக்கிறார். அவரைக் கொல்வது தான் உத்தேசம் என்றால், அவர்கள் இந்த வழியைத் தேடியிருக்க மாட்டார்கள். உயர் அதிகாரிகள் முன்னணியிலிருந்து சண்டையிடுவார்கள் என்று எவருமே எண்ணிப்பார்த்திருக்க முடியாது. அவரது பதவியின் தன்மையைக் கொண்டு பார்த்தால், அவர் பின்னால் நின்று கொண்டு, தனது கான்ஸ்டபிள்களை முன் அனுப்பி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக முன்னணிக்குச் சென்று தானே தீவிரவாதிகளை எதிர் கொண்டிருக்கிறார் என்ற பொழுது அவரது தீரம் பிரமிக்க வைக்கிறது. //இது போன்று ஒரு உயர் அதிகாரியே துப்பாக்கியை எடுத்து வந்து, தனது படையினருடன் தோளாக தோள் நின்று போரிடுவார் என்று எந்த இயக்கமும் நம்பி திட்டம் தீட்டியிருக்க முடியாது. அதிகாரிகள் பெரும்பாலும் responsible for taking the decision – not for executing it themselves in the field.


அவர் முன்னணிக்குச் சென்று யுத்தமிட்டது தீரம் என்றாலும், இன்று இழப்பு நமக்கு தான். இதையே என்றென்றும் அன்புடன் பாலாவும் தனது தளத்தில் தெரிவித்திருக்கிறார். சத்தியமார்க்கம் முன்வைத்த தியரி ஒத்துவருமா என்று தெரியவில்லை.இந்த மாதிரி ஒருநிலை சார்பான கருத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிற தளங்களின் கருத்துகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழரங்கம், ராயகரன் எழுதிப் பதிவிட்ட, பம்பாய் பயங்கரவாதம் ஆளும் வர்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கட்டுரை படிக்க வேண்டும். // அரச பயங்கரவாதமும், மனித விரோதக் கூட்டத்தின் குறுகிய நலன்களும் தான் 'பயங்கரவாதத்தை" உற்பத்தி செய்கின்றது.


இந்தப் பூமியில் சக மனிதனாக வாழமுடியாத நிலைமைதான் 'பயங்கரவாதத்தின்" வெளிப்பாடு. எப்படி மனிதன் இந்த உலகில் வாழமுடியாது அதிருப்தியுற்று தற்கொலை செய்கின்றானா, அப்படித்தான் 'பயங்கரவாதம்" எதிர் தாக்குதலாகின்றது. // பயங்கரவாதத்தின் உற்பத்தி மூலத்தைத் தொட்டிருக்கிறார், இராயகரன். // சட்டம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்பது அனைவருக்கும் மறுக்கப்பட்டு, அது சில சமூகங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் சிறப்பாக அடைபடும் போது, அதன் எதிர்வினை தான் 'பயங்கரவாதம்".// என்று அது எவ்வாறு வளர்கிறது என்பதையும் பொதுப்படையாகவே சொன்னவர், // பம்பாய் தாக்குதல் கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, இந்து பயங்கரவாதம் நடத்திய கொடூரத்தின் மொத்த விளைவாகும். // என்று இந்த இரு தின யுத்தத்தை இந்து பயங்கரவாதத்தின் எதிர்வினையாகப் பார்க்கிறார். இந்தத் தாக்குதல், இந்து பயங்கரவாதத்திற்கு எதிரான பின்வினை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.


இன்றைய தினத்தில் நடந்த பம்பாய் தாக்குதல் குறி வைத்தது – அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இஸ்ரேல் மக்கள். அயோத்தி சம்பவத்திற்குப் பின், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தாக்குதல் தொடுத்தவர்கள் – இப்படி ஒரு selected targetஐ குறிவைத்து இயங்கியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு இந்திய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் குறியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நிகழ்ந்தது – குறி வைக்கப்பட்டவர்களில் எவரும் இந்தியர்களாக இல்லை. இறந்து போனவர்களில் இந்தியர்கள் இருக்கக்கூடும் – அது, crossfireல் மாட்டிக்கொண்டவர்கள் தான்.


குறிப்பாக ஊழியர்கள். தாஜ் ஊழியர்கள். அதனால், இந்த மும்பை தாக்குதல், வெறுப்படைந்த இந்திய முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் – அதற்கான நியாயம் அவர்களுக்கிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை மறுக்கிறேன். மேலும் ஊடக உலகைப் பற்றிய குறைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் அதை ஒரு வன்முறையாகச் செய்கிறார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தே திணிப்புகளே – செய்திகளை தங்கள் நலனுக்குகந்ததாக மாற்றிப் பேசவைப்பதே – ஊடக வன்முறைகளாக மாறுகிறது. ஆனால், இங்கு எந்த சித்தாந்த திணிப்புமின்றி, காட்சிகளை அது நிகழும் வகையில் அப்படியே காட்டுவது என்பதை வன்முறையாகப் பார்க்க முடியாது. அதிலும், சில காட்சிகளை அவர்களே தவிர்த்துவிட்டார்கள் என்பதுவும் தெரிய வந்தது.


இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் எந்த ஒரு ஊடகமும், எந்த ஒரு முடிவையும் செய்யாமல், நாலு ‘எக்ஸ்பர்ட்டுகளைக் கூப்பிட்டு’ தாங்கள் கண்டுபிடித்த முடிவைச் சொல்லி, கருத்து கேட்காமல் இருந்ததே ஒரு ஆறுதல். அதை பின்னர் செய்யக்கூடும். ஆனால், அதை செய்யாது நிகழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதை குறை கூற முடியாது. இது குறித்து நான் எழுதியது: // மேலும் ஒரு முழு இரவு முழுக்கவும் விழித்திருந்து - 12:30 லிருந்த்து காலை 10:00 மணி வரைக்கும் தொடர்ந்து பார்ர்த்த பொழுது - ஒரே ஒரு வார்த்தை கூட 'islamic terrorist' என்ற வார்த்தைப் பேசப்படவே இல்லை. முதன் முதலாக ஒரு செய்தியை அச்சத்துடனும், பதட்டத்துடனும் பாராமல், ஒரூ இந்தியன் என்ற உணர்வுடன் பார்க்க வைத்தது. இப்பொழுது கூட, terrorist என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இனி, இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை -மாறாக அவர்களை கெட்டவன் என்ற நோக்கை மட்டும் கொண்டே பார்க்க வேண்டும் என்ற புரிதலுக்கு வந்திருக்கின்றனர்.


முதன்முதலாக, அத்வானி அரசைக் குறை கூறாமல், மன்மோகன்சிங் குடன் மும்பை வருவதற்கு தயாராகியிருக்கிறார். தீவிரவாதத்திற்கு எதிராக, ஒருமித்த குரல் ஒன்றாக எழுந்திருக்கிறது. அதைவரவேற்கத் தயாராகுங்கள்.//தீவிரவாதம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு மதத்துடன் அதை இணைப்பதினால், தீவிரவாத ஒழிப்பு என்ற பாதையை விட்டுவிலகி மததுவேஷம் என்ற பாதையிலே மட்டும் தான் பயணம் செய்வோம். தீவிரவாதத்தை GOOD Vs EVIL என்ற பார்வையைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும்.பின் எவர் தான் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை trial by media ஆவாக எவரும் செய்ய வேண்டியதில்லை.


அதற்கான துறைகள் விசாரித்து, முறைப்படியான தகவல்களைக் கொடுக்கட்டும் என்று பொறுத்திருக்கத் தான் வேண்டும். இல்லையென்றால், ஊடக வன்முறைகள் என்று புலம்பும் பிளாக்கர்கள், தாங்கள் செய்யும் ‘வன்முறையைக்’ காண கண்ணில்லாதவர்களாகிவிடுவார்கள். Trial by media என்பது போய் trial by bloggers என்ற தளத்திற்குப் போய்விடுவோம்அனைவரும், தீவிரவாதம் குறித்த பார்வையில் ஒரு மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் –

உங்களுக்காக எழுதியவர் - நண்பன்

Friday, November 28, 2008

முற்பகல் செய்யின் பிற்பகல் பலன் மும்பை பயங்கரம்: மாறட்டும் அணுகுமுறை!
















2001ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு இரண்டாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் மும்பையில் நடந்துள்ளது.இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ், டிரைடண்ட் நட்சத்திர விடுதிகள், நாரிமேன் மாளிகை, வில்லே பார்லே, மெட்ரோ திரையரங்கு ஆகியன உட்பட 9 இடங்களை குறிவைத்து நேற்று இரவு புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,





187க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நிய நாட்டு முக்கிய நபர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரை பயங்கரவாதிகள் பிணையமாக பிடித்துவிட்ட நிலையில், அவர்களை மீட்க விடுதிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்திய மும்பை காவல் துறை அதிகாரி கார்க்கரே உட்பட 3 அதிகாரிகளும், 11 காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மற்ற இடங்களில் நடந்த மோதல்களில் அசோக் காம்தே, விஜய் சலாஸ்கார் உள்ளிட்ட அதிகாரிகளும், மேலும் பல காவலர்களும் உயிரிழந்துள்ளனர்.








பயங்கரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஏ.கே.47 துப்பாக்கிகளுடனும், கையெறி குண்டுகளுடனும் இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். மிரண்டுபோன மும்பை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை கட்டுப்பாடு விதிக்கும் அளவிற்கு நிலைமை அபாயகரமாக உள்ளது.உளவு முன்னெச்சரிக்கை வராதது ஏன்?இவ்வளவு பெரிய அளவிற்கு தாக்குதல் நடத்த வேண்டுமெனில் இது நிச்சயம் நீண்ட கால சதித் திட்டமாகவே இருக்க வேண்டும். ஆனால், இது குறித்த உளவு எச்சரிக்கை ஏதும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. 2006ஆம் ஆண்டு மும்பை புறநகர் இரயில் குண்டுவெடிப்புகள், மாலேகான் குண்டுவெடிப்பு என்று பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, அமைப்புகளை கண்டறிந்து தீவிர புலனாய்வில் மும்பை காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஈடுபட்டுவந்த நேரத்தில் இந்த பயங்கரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.பெங்களூருவில் இருந்து தொடங்கி, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, பிறகு சமீபத்தில் அஸ்ஸாம் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் பலர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது எதைக் குறிக்கிறது என்றால், இன்னமும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னறிந்து (உளவறிந்து) தடுக்கும் திறனை நமது உளவு அமைப்புகள் பெறவில்லை என்பதே.இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெறும் என்று ஒரு சிறிய எச்சரிக்கை கூட வராத காரணத்தினால், மும்பை காவல் அமைப்பின் திறனையும் தாண்டி, மக்களுக்கும், காவலர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே இது நமது உளவு அமைப்பின் மிகப் பெரிய தோல்வியாகும்.




அதன் திறன் கிரீடத்தில் பதிந்த மற்றொரு தோல்விச் சிறகாகும். இந்திய உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக இருந்த எம்.கே. நாராயணன், பிரதமரின் தேச ஆலோசகராக உள்ள நிலையில் இப்படிப்பட்ட தொடர் தாக்குதல்கள் தடையின்றி நடக்கிறது என்றால், அது நமது மத்திய உளவு அமைப்புகளில் உள்ள திறன் குறைவே அன்றி வேறில்லை.நமது நாட்டில் இப்படி திட்டமிட்டு நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் பின்ன‌ணியிலும் எல்லைக்கு அப்பால் இயங்கும் சக்திகளின் கைகள் உள்ளன என்று நமது அரசாலேயே பலமுறை கூறப்பட்ட பின்னரும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன என்றால் அது நமது அயல் உளவு அமைப்பின் தோல்வியே என்பதிலும் சந்தேகம் இல்லை.பயங்கரவாதத்தை தடுக்க, ஒடுக்க தனித்த அமைப்புத் தேவை!




பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னறிந்து, அதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்கவும், சதியில் ஈடுபடும் பயங்கரவாதிகளை கைது செய்து, விசாரணையின் வாயிலாக அவர்களின் தொடர்புகளை அறிந்து, தேச அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ அதிகபட்ச நடவடிக்கை எடுப்பது அவசியமானது என்றும், அதற்கு தனித்த உளவு அமைப்பை - தேச அளவில் - ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ.வெப்துனியா.காம் தொடர்ந்து கூறிவந்துள்ளது.இதனை மத்திய அரசு அமைத்த நிர்வாக சீர்திருத்த ஆணையமும் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கான அவசியமில்லை என்று மத்திய அரசு நிராகரித்தது. மத்திய உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகளை மேலும் பலப்படுத்தினாலே போதும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.




சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த காவல் துறைத் தலைமை இயக்குனர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்தை ஒடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனிப் படைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அப்படிப்பட்ட தனிப் பிரிவை கொண்டுள்ள (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) காவல் துறை இயங்குமிடத்தில்தான் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக அல்ல...1992ஆம் ஆண்டு முதல் 2006 மெட்ரோ இரயில் தாக்குதல் வரை பல முறை நடந்துள்ளது.எனவே பயங்கரவாதத்தை காவல் துறையில் ஒரு தனிப் பிரிவு அமைப்பதனால் மட்டுமே தடுக்கவோ, ஒடுக்கவோ முடியாது என்பது தெளிவாகிறது.




அதுமட்டுமல்ல, காவல் துறை தலைமை இயக்குனர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல், பயங்கரவாதத்தின் முகங்கள் மாறிக்கொண்டு வருகின்றன என்றும், அவர்கள் அணுகுண்டு, பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தும் ஆபத்து கூட உள்ளது என்று பேசினார். அவர் பேசியதன் பொருள் என்னவென்பது அவருக்குதான் வெளிச்சம். தனது பேச்சிற்கு அவர் எந்த அடிப்படையையும் கூறவில்லை. பயங்கரவாதத்தை பயங்கரமாக சித்தரித்துவிட்டு... ம்... பார்த்துக்கொள்ளுங்கள் என்று முடித்துகொண்டு போய்விட்டார். ஒரு இலக்கை நிர்ணயிக்கும் பேச்சாக அது இல்லை.




2001ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிற்குப் பிறகு, மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அமெரிக்காவில் நடத்தப்படவில்லையே ஏன்? காரணம் அந்நாட்டு உள் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. பயங்கரவாதத்தை ஒடுக்கும் ஒற்றை இலக்குடன் கடுமையாக பணியாற்றியது. அதற்கான முழுச் சுதந்திரத்தையும் அந்நாட்டு அரசு எஃப்.பி.ஐ.க்கு தந்தது.




ஆனால் நமது நாட்டில்? நமது உளவு அமைப்புகள் சிரத்தையுடன் பணியாற்றியிருந்தால் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்திருக்குமா? எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் என்று ஒவ்வொரு முறையும் கூக்குரலிட்டு மக்களை திசை திருப்பி விடுவது, அதையும் மீறினால் முன்பிருந்த ஆளுங்கட்சியைக் குறை கூறுவது. இதுதான் நடந்தது, நடக்கிறது. மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை நடத்தினால் அவர்களை சித்தரவதை செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாற்றுகிறது. மற்ற பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரித்தபோது இக்கட்சி இப்படி எந்தக் குற்றச் சாற்றையும் கூறவிலலை. பயங்கரவாதத்தை அரசியலாக்குவதிலேயே குறியாக உள்ளார்கள். இதில் காங்கிரஸ் கட்சியும் மாறுபட்டதல்ல.




உண்மையில் குற்றம்சாற்றப்பட வேண்டியது நமது உளவு அமைப்புகள் மீதுதான். உளவு அமைப்புகள் சரியாக செயல்படாததே பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்று பலரும் கூறிவிட்டனர். ஒரு பீடாதிபதி கூட உளவுத் துறை மீதுதான் குற்றம் சாற்றினார். அந்த அளவிற்கு இவர்களின் ‘திறன்’ ஊரறிந்த ரகசியமாக உள்ளது.நமது உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதையெல்லாம் ஆராய்ந்து, எங்கே தவறு ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டும் அளவிற்கு அவைகள் வெளிப்படையாக இயங்குவதில்லை என்பதும், பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதும் இந்த நாடறிந்த இரகசியம்.




எனவே அதை ஆராய்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.பயங்கரவாத நடவடிக்கைகள் இதற்கு மேலும் நடைபெறாமல் தடுக்க வேண்டுமெனில் அதனை ஒடுக்குவதை மட்டுமே இலக்காகக் கொண்ட மத்திய புலனாய்வு-உளவு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை ஒரு சட்டத்தை உருவாக்கி (மத்திய புலனாய்வுக் கழகத்தை உருவாக்கியதைப் போல) ஏற்படுத்த வேண்டும். அதன் செயல்பாடு சுதந்திரமாக இருக்கவும், பயங்கரவாதிகள் மற்ற குற்றவாளிகள் பெறக்கூடிய சட்ட நிவாரணங்களை பெற முடியாத ஒரு சட்டத்தையும் (பொடா போன்றது அல்ல) அதற்கு இணையாக நிறைவேற்றி உருவாக்க வேண்டும்.




மத்திய அமைப்பைப் போன்று மாநில அளவிலும், அனைத்து மாநிலங்களிலும் இதேபோன்று ஒரே ஒரு இலக்கை கொண்ட புலனாய்வு-உளவு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு, குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அந்த அமைப்பு முழுமையாக பிரிக்கப்பட்ட தனித்த அமைப்பாக செயல்பட அனுமதிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தபோது மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் அளித்த யோசனையை நிறைவேற்ற வேண்டும். அது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தேச அடையாள அட்டை வழங்குவது.




அதுவே அவர்களின் சட்ட கவசமாகவும், பாதுகாப்பு, வாக்குரிமை, கடன் பெறுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் அடிப்படையானதாக இருத்தல் வேண்டும்.பலமான பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துகொண்டு, “மக்கள் பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும்” என்றெல்லாம் கூறிக்கொண்டு, அத்தோடு அவர்களின் பாதுகாப்பை மறந்துவிடாமல், உண்மையாக நடப்பதாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் இதனைச் செய்யட்டும்.






Thursday, November 27, 2008

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்



பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!! இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். (ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்



எங்களுடைய இறைவனே! அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த சீரிய வழியில் நாங்கள் வாழ்ந்து மரணிப்பதற்கு எங்கள் மீது அருள்புரிவாயாக!




அன்புடன்,முஹம்மது ஷூஐபு,ஜித்தா- 27.11.2008.

ஹேமந்த் கர்கரே




மும்பை: மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மிகத் திறமையாக விசாரித்து வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே (54), நேற்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியாகி விட்டார். தாஜ்ம ஹால் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அடக்கும் முயற்சியில் போலீஸ் படை இறங்கியபோது, தலையில் ஹெல்மட், மார்பில் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடன் நேரடியாக களம் இறங்கினார் ஹேமந்த் கர்கரே.


அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கர்கரேவின் பெயர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானது. அனைவருமே முஸ்லீம் தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, இதில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்தது கர்கரே தலைமையிலான ஏ.டி.எம். குழு.



அதன்பின்னர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் என அடுத்தடுத்து அதிரடியான கைதுகள் நடந்தன. மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களையும் ஏ.டி.எஸ். வெளியிட்டு வந்தது. நேற்று காலையில் கூட பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரை, போலீஸ் காவலில் அனுமதிக்க மும்பை கோர்ட் அனுமதிக்க மறுத்தது குறித்து கவலை தெரிவித்திருந்தார் கர்கரே.


பிரக்யா சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும், விசாரணையும் விரைவாக நடக்கும் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இரவே அவரது மூச்சை நிறுத்தி விட்டனர் தீவிரவாதிகள். 1982ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் கர்கரே.


இந்திய அரசின் உளவுப் பிரிவான 'ரா' வில் முன்பு இருந்தவர். அப்போது ஆஸ்திரியாவில் 9 ஆண்டுகள் பணியாற்றினார். மிகவும் நேர்மையான, கட்டுப்பாடான, ஸ்ட்ரிக்ட்டான அதிகாரி என பெயரெடுத்தவர் கர்கரே. இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அவர் தனது ரா பணியை முடித்து விட்டு மகாராஷ்டிரா திரும்பினார். உடனடியாக அவரை மகாராஷ்டிர அரசு ஏ.டி.எஸ். தலைவராக நியமித்தது. இதைத் தொடர்ந்தே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.


தானேவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கர்கரேதான் தீவிரமாக செயல்பட்டு துப்பு துலக்கினார். அதேபோல பான்வேல், வாஷி குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் கர்கரே தலைமையிலான டீம்தான் துப்பு துலக்கியது. ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்தான் கர்கரேவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது. தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், நாம் போலியான சாட்சியங்களை, ஆதாரங்களை உருவாக்கக் கூடாது. நமது கடமையை நாம் செய்வோம்.


நீதி்மன்றம் மற்றதை முடிவு செய்யட்டும் என்பாராம். கடைசியாக அவர் என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்தார். நேற்று அவர் அளித்த பேட்டியின்போது பிரக்யா சிங்கை துன்புறுத்தியதாக அத்வானி குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது, எங்கள் மீது புகார் கூறப்படும்போது அதைக் கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். ஆனால், சாத்வி பிரக்யா சிங் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை. சட்டவிதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம். கோர்ட் எப்போதெல்லாம் உத்தரவிடுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் குற்றவாளிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம். துன்புறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். கர்கரேவின் மரணம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நிச்சயம் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

Source:Thatstamil.com

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்?

மும்பையில் 1992 பாபர்மஸ்ஜித் இடிப்பு, 1993 குண்டுவெடிப்பு ஆகிய நாட்டை உலுக்கிய நிகழ்வுகளுக்குப்பின்னர் நேற்று இரவு 9.40க்கு ஆரம்பித்த துப்பாக்கிச்சூடு, வெடிக்குண்டு வீச்சு, குன்டுவெடிப்பு ஆகிய தீவிரவாத சம்பவங்கள் நாடு முழுவதும் பலத்த பீதியை உருவக்கியுள்ளது. கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக மலேகான் குண்டு வெடிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தவர் மகாரஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படைத்தலைவர் ஹேமந்த் கட்காரே. நாடுமுழுவதும் மக்கள் குண்டுவெடிப்பிற்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது ஹிந்துத்துவா சங்க்பரிவார் தீவிரவாதிகள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைதுச்செய்து இன்னும் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவரும் என்று அவர் நேற்றுமுன்தினம் பேட்டியளித்த நிலையில் தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தீவிரவாத சம்ப்வங்களுக்கு பாக்கிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யுடன் சங்க் பரிவார்களுக்கு தொடர்புண்டு மேலும் விவரமான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளி வரும் என்றிருந்த நிலையில்தான் கர்காரே கொல்லப்பட்டுள்ளார்.மும்பையில் நேற்று நடந்த சம்பவம் முற்றிலும் தீவரவாத எதிர்ர்ப்பு படைக்கு நேராக நடந்த சம்பவம்தான்.
உயர் அதிகாரகள், வெளி நாட்டினர், அரசியல்வாதிகள் தங்கியிருக்கும் அதி தீவிர பாதுகாப்பு நிறைந்த தெற்கு மும்பையில் எவ்வாறு தீவிரவாதிகள் கிரேனைட், ஆ.கே 47 துப்பாக்கிகளுடன் நிழைந்து தாக்குதல் நடத்தமுடியும்? இந்தியாவில் பொதுவாஅக குற்றம் சாட்டப்படும் லஷ்கர்-இ-தைய்யிபா, அல் பதர் தீவிரவாத இயக்கங்களால் முடியாத சம்பவம் இது. நிச்சயமாக இது முன்னாள் இன்னாள் ராணுவ அதிகாரிகளைக்கொண்ட அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் தான் முடியும். இதில் அவர்கள் சில முஸ்லிம்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பது பலரின் சந்தேகம்.
டீவிரவாதிகளின் இந்த தாக்க்தலுக்காரணமான ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடம் கடுகையாக விசாரணை நடத்தினால் உண்மை வெளி வரலாம்.அதெல்லாமல் இல்லாத அமைப்புகளை மின்னணு செய்தி என்ரபெயரில் அப்பாவை முஸ்லிம்களை கைதுச்செய்து சித்திரவதைச்செய்வதால் ஒருபயனும் இல்லை.




மும்பை: மும்பை தாஜ் மஹால் ஹோட்டலில் அமெரிக்க உளவுப் பிரிவைச் 2 அதிகாரிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.இந்த ஹோட்டலில் 15 பேர் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக சிக்கியிருந்தனர். இதில் 7 பேர் அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஆவர். இதில் சிலர் பிரேசிலைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் விவரம் தெரியவில்லை.இந்தத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதையடுத்து இந்த ஹோட்டலில் இப்போது பிணயக் கைதிகள் யாரும் இல்லை. யாரும் இங்கிருந்து 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 2 பேர் அமெரிக்க உளவுப் பிரிவினர் எனத் தெரிகிறு.மேலும் டிரைடண்ட் ஹோட்டலில் இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட 30 பிணயக் கைதிகளும் நரிமன் ஹவுஸ் ஹோட்டலில் அமெரிக்கர்கள் உள்ளிட்டவர்களும் பிணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
GA_googleFillSlot("tamil-article-468x60");
இவர்களை மீட்க ராணுவமும் என்எஸ்ஜி படையினரும் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக தாஜ் ஹோட்டலின் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்ட இரு தீவிரவாதிகள் 7 வெளிநாட்டினர் உள்ளிட்ட 20 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஹோட்டலின் மாடிக்கு கொண்டு சென்றனர். அமெரிக்கர்கள்-பிரிட்டிஷாரை தேடி வந்தனர்: அவர்களைப் பிடித்தபோது உங்களில் யார் யார் அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதில் 5 பேர் தப்பியோடிவிட்டனர். மற்ற 15 பேரையும் 18வது மாடியில் ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்துள்ளனர். அதே போல டிரைடன்ட் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளும் இங்கே அமெரிக்கர்கள், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் யார் என்று கேட்டபடியே தான் சுட்டுள்ளனர். பணயக் கைதிகளில் இஸ்ரேலியர்கள்: இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் (ஓபராய் ஹோட்டல்) பல இஸ்ரேலியர்கள் உள்பட 30 பேர் பிணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டலில் 10 முதல் 12 தீவிரவாதிகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தப் பணயக் கைதிகளைக் காப்பாற்ற கமாண்டோக்கள் அந்த ஹோட்டலை சூழ்ந்துள்ளனர். ஆனால், தங்களிடம் உள்ள பணயக் கைதிகளை பல பிரிவுகளாகப் பிரித்து ஹோட்டலின் பல்வேறு அறைகளிலும் அவர்கள் அடைத்து வைத்துள்ளதால் நிலைமை சிக்கலாகியுள்ளது. அங்கு தீவிரவாதிகள் சுட்டு ஒரு ஊழியர் பலியாகியுள்ளார். அந்த ஹோட்டல் லாபியில் கிடந்த வெடிக்காத ஒரு கிரணைட் கைப்பற்றப்பட்டுள்ளது.




மும்பை: மும்பையில் தாஜ் மகால் ஹோட்டல், கொலாபா, மெட்ரோ சினிமா, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், டிரைடன்ட் ஹோட்டல், காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ், கபே லியோபோல்ட் ஆகிய 10 இடங்களில் தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 125 பேர் கொல்லப்பட்டனர், 327 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், 16 பேர் போலீசார் ஆவர் டிரைடண்ட் ஹோட்டலில் (ஓபாராய் ஹோட்டல்) மேலும் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். நரிமன் ஹவுஸ் ஹோட்டலில் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 20 பேரையும் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். தாஜ் ஹோட்டலில் பிணயக் கைதிகளைப் பிடித்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு பயணிகள் மீட்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் அந்த ஹோட்டலின் பல்வேறு மாடிகளில் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ராணுவமும் என்எஸ்ஜி கமாண்டோக்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
GA_googleFillSlot("tamil-article-468x60");
அதே போல ஹோட்டல் டிரைடண்டிலும் நரிமன் ஹோட்டலிலும் ராணுவமும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றிரவு தொடங்கிய இந்தத் தாக்குதலாலும் ராணுவம்- கமோண்டாக்களின் பதிலடி தாக்குதலாலும் மும்பை நகரமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. நேற்று இரவில் தீவிரவாதிகள் இந்த இடங்களில் புகுந்தனர். முதலில் கையெறி குண்டுகளை வீசிவிட்டு பின்னர் தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய இடம் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையமாகும். இதையடுத்து கபே லியோபோல்ட், காமா மருத்துவமனை ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் தாஜ் மகால், நரிமன் ஹவுஸ், டிரைடன்ட் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களுக்குள் புகுந்து அங்கு தங்கியிருந்த பலரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். இதையடுத்து போலீஸாரும், அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் தொடங்கியது. இதில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். 7 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாஜ் ஹோட்டலில் 5 தீவிரவாதிகளும் டிரைடண்ட் ஹோட்டலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாஜ் ஹோட்டலில் பிணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த சண்டையில் கூடுதல் கமிஷ்னர் அசோக் காம்தே, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். காமா ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின் போது அசோக் காம்தே கொல்லப்பட்டார். மற்ற இருவரும் டிரைடன்ட் ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவமும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. தீவிரவாதிகள் பிடியில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்டோரை மீட்க ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 200 பேர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அதேபோல டிரைடன்ட் மற்றும் நரிமன் ஹவுஸ் ஹோட்டல்களையும் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அங்கு சுமார் 15 முதல் 18 தீவிரவாதிகள் சுமார் 40 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஆனாலும் இன்றிரவுக்குள் இந்தப் பணி முடியாது என்று மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் தெரிவித்துள்ளார். 3 ஹோட்டல்களிலும் நாளை காலை வரை தாக்குதல் நடக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலையடுத்து நேற்றிரவு முதல் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய்விட்டது. இன்று பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அதே போல பெரும்பாலான ரயில்களும் இயக்கப்படவில்லை. இதனால் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இந் நிலையில் இன்று காலை மகாராஷ்டிர சட்டசபை கட்டடமான விதான் பவனில் ஒரு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தீவிரவாதி கைது: இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான். இவனது பெயர் அபு இஸ்மாயில். பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவன் எனத் தெரியவந்துள்ளது. மரியாட் ஹோட்டலுக்குப் பாதுகாப்பு மும்பையின் இன்னொரு புகழ் பெற்ற ஹோட்டலான ஜே.எம்.மரியாட் ஹோட்டலை தீவிரவாதிகள் பிடிக்கப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கியவர்கள், தப்பியோர் குறித்த விவரம் அறிய, Mumbai Helpline Number: +91-22-2200-5388 Delhi Helpline No: +91-11- 2389-0606 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பண்பாடு பலி பீடமா? - நெஞ்சின் அலைகள் - ஆனாரூனா








தமிழன் என்றொரு இனமுண்டுதனியே அவர்க்கொரு குணமுண்டு'என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.ஒரு தமிழன் என்கிற முறையில் அந்த வரிகள் மீது எனக்குப் பெருமிதம் எழுந்தாலும், ‘ஒவ்வொரு மனிதனும் தனது அறிவு பூரணத்துவம் வாய்ந்ததென்றும், தனது குழந்தை அழகானதென்றும் நம்புகிறான்' என்று பாரசீகக் கவிஞர் ஷாஅதி கூறியதும் நினைவுக்கு வருவதுண்டு.தொடர்ந்து அறிஞர் பெர்னாட்ஷாவின் புகழ் பெற்ற சொற்றொடரும் பளிச்சிடும்.




‘ஒருவன் ஒரு நாட்டிலே பிறந்து விட்டான் என்பதாலேயே, அந்த நாடு உலகின் மற்ற எந்த நாட்டையும் விட, உயர்வானது என்று நம்பும் முட்டாள்தனத்துக்குப் பெயர்தான் தேசபக்தி!'இவ்வாறெல்லாம் யோசிக்கும் வேளையில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' எனும் நாமக்கல்லார் வரிகள் வெறும் சுயதம்பட்டம் என்றாகி விடுகிறது.




ஷாஅதியும் பெர்னாட்ஷாவும் சுய தம்பட்டப் பேர்வழிகளின் போதையேறிய ஆர்ப்பாட்டங்களின் மீது வெறுப்புற்று, தமது கண்டனங்களைப் பொழிந்திருந்தால்?....நாமக்கல் கவிஞரின் நெஞ்சுரம் மிகவும் பொருளுடையதாகிறது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பது சமூக விஞ்ஞானத்தின் ‘அகர'மாகும். நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும்; மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு என்று வள்ளுவரும், வாழ்நிலைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது என்று அறிஞர் கார்ல் மார்க்சும்,




சொன்னதெல்லாம் வேடிக்கைப் பேச்சுதானா?இல்லை! சரி; தமிழர்க்கென்றொரு குணம், பண்பாடு உண்டு என்றால், ஆரியர்க்கென்றொரு பண்பாடும், ரோமானியர்க்கென்றொரு பண்பாடும், சீனர்க்கென்றொரு பண்பாடும் உண்டு அல்லவா? நிச்சயமாய் ஒவ்வொரு இனத்துக்கும் அதனதன் வாழ்நிலைக்கேற்ப குணமும் பண்பாடும் அமைந்து விடுகிறது. முதலில், தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்கிற கருத்தைப் பரிசீலிக்கலாம்.தமிழர்கள் வரலாற்றுரீதியாக ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.




அவர்களுக்கென்று திட்டவட்டமான ஒரு நாடு, ஒரு மொழி சார்ந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பாதுகாப்பான, அச்சமற்ற வாழ்வாதாரத்தை இயற்கை வழங்கியிருக்கிறது. அதனால், பேராசைகளோ, போர் வெறிகளோ இல்லாத - ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்கிற விரிந்த பார்வையும் மனித நேயமும் தமிழனத்துக்கு இயல்பான பண்பாடாக அமைந்து விட்டது.




தமிழர்கள் தாம் மாத்திரமே உயர்ந்த குலத்தார்; மற்றவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்று பிறப்புரிமை, தெய்வீக உரிமை கொண்டாடியதில்லை. அறம் சார்ந்து நின்றார்கள். ஈன்ற தாயே பசியின் கொடுமைக்கு ஆளானபோதிலும் சான்றோர் பழித்த காரியம் செய்யர் என்று குறள் ஒளியுறுத்துகிறது.தமிழர்கள் போர் செய்ததுண்டு.




அது, நாடு பிடிக்கும் வெறியால் நேர்ந்ததல்ல. அகந்தை கொண்டோரை அடக்குவதற்கு மட்டுமே தமிழன் களம் கண்டான். வென்ற நாடுகளைத் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர வேண்டும்; அடிமைகளின் கண்ணீரில் ஆனந்தம் கொள்ள வேண்டும் என்று எப்போதும் அவன் எண்ணியதில்லை. தமிழர்களின் சங்ககால வாழ்க்கை கூறும் சரித்திரச் சான்றுகள் இவை.




பார்ப்பனர்களோ, தமிழினத்துக்கு நேரெதிரான பண்பாடு கொண்டவர்கள். அவர்களுக்கு நிலைத்த நாடு இல்லை; நிரந்தர மொழி இல்லை. ஆடு மாடு மேய்க்கும் நாடோடி வாழ்க்கை திட்டவட்டமான ஒரு தேசிய இனம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி இல்லை. இம்மாதிரியான வாழ்நிலை அவர்களைச் சாதுரியம் மிக்க மோசடிப் பேர்வழிகளாக மாற்றிவிட்டது.




சூழ்ச்சி நடவடிக்கைகளை ராஜதந்திரம் - அர்த்தசாஸ்திரம் என்று பாராட்டுவது பழகிப்போன ஒன்று. தங்களை ஒரு தேசிய இனமாக - நாகரிக மாந்தராக நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியாத தாழ்வு மனப்பான்மையின் கொதிப்பேறிய வெளிப்பாடு அவர்களை அகம்பாவத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.பிறக்கும்போதே ஒருவன் உயர்ந்த சாதி, அல்லது கீழ்சாதி என்று தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. பார்ப்பனன் சாதியால் உயர்ந்தவன்.




மற்றவர்கள் எல்லோரும் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களே என்று பார்ப்பனர் கர்வம் கொண்டு திரிவதற்குக் காரணம், தன் கர்வத்துக்குக் காரணமான எந்தத் தகுதியும் தனக்கு இல்லை என்கிற சுயகழிவிரக்கமே. அவமான உணர்ச்சி அகம்பாவத்தால் மார்தட்டிக் கொள்கிறது. அறம்சார்ந்த வாழ்க்கை அவர்கள் அறியாதது. மனுதர்ம நூலின் ஒவ்வொரு வரியிலும் கபடம் ஒளிந்திருப்பதைப் பாமரன் கூடப் புரிந்து கொள்ள முடியும்.




இந்திரனே மதமற்ற கறுப்பு மனிதர்கள் வர்ணபகவானைச் சிறையிலடைத்திருக்கிறார்கள். நீ அந்தச் சிறையைத் தகர்த்து அவனை விடுதலை செய் என்றெல்லாம் ரிக்வேதம் கூறுகிறது. இந்திய மண்ணின் மைந்தர்கள் விவசாயத்துக்காக அணைகட்டி நீரைத் தேக்கியிருக்கிறார்கள். அதைத்தான் வர்ணபகவானைக் கைது செய்திருப்பதாக எண்ணி, அணையை உடைக்குமாறு இந்திரனை வேண்டுகிறார்கள்.




அணையை உடைப்பது - பொதுச் சொத்தை அழிப்பது - பார்ப்பனர்கள் நோக்கில் குற்றமோ, பாவமோ அல்ல.அலெக்சாந்தர் இன்டிகா (இந்தியா)வுக்குள் வந்து பல சிற்றரசர்களை வெல்கிறான். வென்ற பகுதிகளில் தனது கடவுளை (ஜீயஸ்) வணங்குவதற்காக வழிபாட்டுத் தலங்களை அமைக்கிறான். அதுவரை அப்படியெல்லாம் நேர்த்தியான வழிபாட்டுத் தலங்களைக் கண்டறியாத கௌடில்யன் (சாணக்கியன்) அலெக்சாந்தரின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து தன் ஆரியக் கடவுளர்களின் சின்னங்களை வைக்கிறான்.




‘ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பதும், அழிப்பதும், தன்வயப்படுத்துவதும் நேர்மையானவர்கள் செய்கிற காரியமா?' என்று சந்திரகுப்தன் கேட்கிறான்.கௌடில்யன் கொஞ்சமும் கூச்ச உணர்ச்சியில்லாமல் சொல்கிறான்: ‘சாதிக்க நினைப்பவன் சாத்திர தர்மங்களைப் பார்க்கக் கூடாது!'அலெக்சாந்தர் வருகையின்போது சிந்து சமவெளி ‘சிந்தஸ்' என்றும் ‘இன்டஸ்' என்றும் அழைக்கப்பட்டது.




இதுவே செல்யூகஸ், மெகஸ்தனிஸ் போன்றவர்களால் இண்டிகா என்று அழைக்கப்பட்டது. இண்டிகா தான் ‘இண்டியா' ‘இந்தியா' என்று மருவியது. இப்பகுதியில் வாழ்ந்த பூர்வீக மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்கள் உயர்ந்த நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று அரப்பா - மொகஞ்சாதாரோ அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.




அந்த மக்கள் பயன்படுத்திய பாண்டங்களில், சிற்பங்களில் மதர்த்த மாடுகள் காணப்படுகின்றன. இப்போது அந்த வரலாற்று ஆவணங்கள் கணினி மூலம் மாற்றப்படுகின்றன. காளைகள் குதிரைகளாக மாற்றப்படுகின்றன.




ஏன்? ஏன்?காளை திராவிடர்களுடன் தொடர்புடைய சின்னம் என்றால், குதிரை ஆரியர்களுடன் தொடர்புடையது என்று ஒரு பொய்யான சான்றை உருவாக்கி, அதன் மூலம் ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆதியில் திராவிடர்கள் இந்தியாவில் இருந்ததில்லை, பிற்காலங்களில் அவர்கள் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருக்கலாம் என்று உரிமை கொண்டாடலாம் அல்லவா? ஆரியர்களைப் பொறுத்தமட்டில், தமக்கு நல்லது என்றால் எதையும் செய்யலாம்; எப்படியும் செய்யலாம் என்று திடமாக நம்புகிறவர்கள்.




அன்று அலெக்சாந்தரின் வழிபாட்டுத் தலங்களை மாற்றி அவற்றை ஆரியர்களின கோயிலாக மாற்றினான் கௌடில்யன் என்றால், இன்று முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துவிட்டு, அங்கே ராமர் கோயில் கட்டுவதில் தீவிரம் காட்டினார் அத்வானி.தாய்நாடற்றவர்கள் என்கிற அவப்பெயரிலிருந்து விடுபடுவதற்காக, நாங்கள் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வம்சத்தார், இந்தியா ஆரியர் நாடே என்று ஒரு புதிய பட்டா உயில் ஆவணம் நிறைந்த வரலாறு படைக்க நினைக்கிறார்கள் ஆரியர்கள்.




தங்களது தொன்மை அடையாளங்களைக் கற்பனை வழியாகக் கண்டுபிடித்து அதுதான் வரலாறு என்று நிரூபிக்க வெறிகொண்டு திரிகிறார்கள். சிந்து சமவெளியில் மாத்திரமல்ல, கடல் கொண்ட குமரிக் கோட்டத்திலும் ஆரியர்களே நாகரிகச் சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்று நிரூபிக்கும் முயற்சியின் தொடர்ச்சிதான் இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே கடலுக்கடியில் ராமர் பாலம் இருக்கிறது என்று பொய்யுரைத்துப் போர்க் கொடி தூக்கும் நிகழ்ச்சிகள்.




ராமர் பாலம் இருந்ததற்கு என்ன ஆதாரம்? அது எங்கள் மத நம்பிக்கை! மத நம்பிக்கையைப் புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்! மதநம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதும், அறிவார்ந்த சான்றோர் ஆயம் என்று நம்பப்படுகிற நீதிமன்றம் புராணக் கதைகளை வரலாறாக்கும் இழிசெயலுக்குத் துணைபோவதும் எப்படிச் சாத்தியமாகிறது? கயமைத்தனங்களை ராஜதந்திரம் என்று புகழ்வதும், புராணப் புனைவுகளை சரித்திரச் சான்றுகளை மாற்றுவதும் அவர்களுக்குக் கைவந்த கலைதான்.




அதனால்தான் பார்ப்பனன் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்று தந்தை பெரியாரும் அறிவார்ந்த சான்றோரும் பகிரங்கமாகக் கூறினார்கள்.இரண்டாம் உலகப் போர் எப்படித் தொடங்கியது? உலகத்தின் வரைபடத்தையே மாற்றி அமைக்க வேண்டும். விரிந்து பரந்த ஆரிய சாம்ராஜ்யம் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான் இட்லர். பக்கத்திலே நட்பு நாடு என்று கருதப்படும் போலந்து இருக்கிறது.




போலந்து நட்பை மறந்து ஜெர்மனி மீது படையெடுத்து ஆக்கிரமித்து விட்டது. இந்தத் துரோகத்துக்குப் பதிலடி தரவேண்டும் என்று ஜெர்மன் மக்களையும், உலக நாடுகளையும் நம்ப வைப்பதற்காக, ஜெர்மன் வானொலி நிலையத்துக்குள் போலந்து ராணுவ உடை தரித்த நாஜிகள் திடீரென்று நுழைகிறார்கள். வானொலியில் துப்பாக்கிகள் முழங்கும் சத்தம் கேட்கிறது. போலந்து கொடியை ஏற்றுங்கள் என்று ஒருவன் கத்துகிறான்.




ஜெர்மனி வீழ்க! இட்லர் ஒழிக என்று சில போலந்துக் குரல்கள் ஒலிக்கின்றன.ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கோயரிங் வேறொரு வானொலியில் பேசுகிறான். தாயகத்தை மீட்பதற்காக துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காக கனத்த இதயத்துடன் ஜெர்மனி போரில் ஈடுபடுகிறது. இப்படித்தான் ஒரு பொய்யான நாடக நிகழ்ச்சி போருக்கான அடிப்படை நியாயமாக்கப் படுகிறது ஆரியன் இட்லரால். இட்லர் பாணி நாடகங்களைத்தான் இங்குள்ள ஆரியர்களும் தொடர்ந்து நடத்தி அரசியல் ஆக்குகிறார்கள்.




இந்திய முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். என்ன செய்யலாம்? ஒரு முஸ்லீம் இளைஞன் காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டான் என்று ஒரு விபரீதமான நிஜ நாடகத்தை நடத்த வேண்டும். ஆரிய வெறி கொண்ட சில இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுடைய பூணூல் களையப்படுகிறது. சுன்னத் செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நாதுராம் கோட்சே! திட்டமிட்டபடி காந்தியடிகளின் பிரார்த்தனைக் கூடத்துக்குள் கோட்சே நுழைகிறான்.




ராம நாமத்தை ஜபித்தபடி கோட்சே சுடுகிறான். ஹேராம்... என்றபடி காந்தியடிகள் உயிர் துறக்கிறார்.அவ்வளவுதான். முஸ்லீம்கள் காந்தியடிகளைக் கொன்று விட்டார்கள் என்று கதை பரப்பப்படுகிறது. நாடெங்கும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள். (நடிகர் கமல்ஹாசன் தனது ‘ஹேராம்' எனும் திரைப்படத்திலும் இதைக் காட்டியிருந்தார்) ஒரு கொலை - அல்லது குற்றச் செயலை நிகழ்த்துவது. அதைத் தமது எதிரிகள் மீது சாற்றுவது.




பொதுமக்கள் பார்வையில் பொய்யை உண்மையென்று நம்பும்படி செய்வது. பிறகு மத நம்பிக்கையின் ஆதரவோடும், சட்டத்தின் பாதுகாப்போடும் நினைத்ததை நடத்தி முடிப்பது. வெகு காலமாய் ஆரியர் நடத்தும் நிஜ நாடகம் இது.ஒரிசாவிலே ஒரு இந்துமத சாமியார் கொல்லப்படுகிறார். பழி கிறிஸ்தவர்கள் மீது போடப்படுகிறது. தேவாலயங்கள் தகர்க்கப்படுகின்றன. கன்னிமாதர் கசக்கப்படுகிறார்கள்.




மாதக் கணக்கில் அப்பாவி மக்களின் கண்ணீரும் கதறலும் இதயமுற்றோரைத் துடிக்க வைக்கின்றன. அந்த நாடகம் - அந்தக் குரூரத் தீ - கன்னடத்துக்கும் பரவுகிறது. சங்கப் பரிவாரங்களின் புனிதப்போர் இப்படித்தான் நாடெங்கும் விரிந்து பரவுகிறது.இஸ்லாமியர்களை ஒழிப்பது; கிறிஸ்தவர்களை ஒழிப்பது; முற்போக்கு இயக்கங்களை ஒழிப்பது. இந்துத்துவத்தை எந்த ரீதியிலும் வளர்ப்பது. இறுதியில் இந்துமத நம்பிக்கையுள்ளவர்களிலும் பார்ப்பனர் அல்லாதாரை ஒழிப்பது.




இப்படியாக ஆரியர்களுக்கென்றொரு தாயகத்தை உருவாக்குவது. இதுதான் சங்கப் பரிவாரங்களின் போர்ப் பிரகடனம். மீண்டும் ஆரம்பத்திற்குச் செல்வோம்; தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்பது சரி. அந்தத் தனிக்குணம்; அந்தத் தனிப் பண்பாடு தமிழனின் இன்றைய வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா? பண்பாடு என்பது, ஏட்டில் இலக்கியத்தில் படிக்கும் போது ரசனைக்குரியதாக இருக்கலாம்;




எதார்த்தத்தில்?பண்பாடுள்ள மக்களைக் காட்டுமிராண்டிகள் வெற்றி கொண்டார்கள் என்பதுதான் வரலாறு. பண்பாடு என்பது கோழைகளின் முகமூடி என்று ஏளனம் செய்யப்படும் காலம் இது. தமிழன் இனியும் பழம்பெருமைகளில் பண்பாட்டுப் பழம்பாட்டில் மயங்கிக் கிடக்கப் போகிறானா? மங்கை உருவில் மகான் உருவில் வேத முழக்கங்களோடு வந்து புகுந்த வஞ்சத்தை வீழ்த்த வீறுகொண்டு எழப்போகிறானா?




Thanks to http://www.keetru.com/ and my appa Semmalai. Arunaachalanaar (ஆனாரூனா), Founder: Tamil ChanROr pEravai.

Wednesday, November 26, 2008

நெருப்பாய் பொறுப்பாய் இருப்பாய் தமிழா








இலங்கைத் தமிழர்களும், இஸ்லாமியர்களும்
நேற்றிரவு வின் தொலைக்காட்சியில் தவ்ஹீத் ஜ்மாத்தாரின் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியை கண்டேன். அதில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பி. ஜெய்னுல் ஆபிதீன். அதில் ஒரு கேள்வி ' நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை ?




பதில்: விடுதலைப் புலிகள் தமிழர்களை மதரீதியில் பிரித்து பார்க்கிறார்கள். ஈழத்து இஸ்லாமியத் தமிழர்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள் ஈழத் தமிழ் முஸ்லிம்கள்.




Any comments friends ? *****தனி மடலில், இப்படியொரு கேள்வி வந்தது -நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி. நான் என்ன ஒரு சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு முக்கியமானவனா? என் கருத்தைக் கூட ஆவலாகக் கேட்க ஒருவர் முனைகிறார்? கேள்வியை அனுப்பியவர், நான் மிகவும் மதிக்கும் நண்பர். குழப்பமான கேள்வி தான். நான் சந்தித்த சில இலங்கை இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமே அவ்வாறு சொல்கிறார்கள் - புலிகளால் நாங்கள் தொல்லைக்காளானோம் என்று.




ஆனால், மற்ற பெரும்பான்மையான முஸ்லிம் நண்பர்கள் பலரும் அவ்வாறு சொல்லவில்லை. யாரும் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லவில்லை. இலங்கையின் தமிழ் இலக்கிய உலகில் இயங்கும் சில நண்பர்கள் கூட அவ்வாறு குற்றச் சாட்டை வைக்கவில்லை.




(நடந்துவிட்ட சில சம்பவங்கள், மனதை வருத்தினாலும், புலிகளைக் கைவிட தயாரில்லை என்றே சொல்கிறார்கள்)இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் கிழக்குப் பகுதியில், கருணாவின் தலைமையில் நிகழ்ந்தது. ஆனால், அவர் விலகிய பின்பு அத்தகைய நிகழ்வுகள் இல்லையென்றும் சொல்கிறார்கள். மறுபுறம், இஸ்லாமியர்கள், சிங்களத்தினரிடம் புலிகளை அடையாளம் காட்டும் வேலையில் ஈடுபட்டதாகவும், அந்தத் துரோகத்திற்குப் பதிலாகத் தான் அவர்கள் மீது தொடக்கத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.




அதாவது காட்டிக் கொடுத்தல் என்ற சம்பவத்தை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டோம் - அவர்களின் மதசார்பு நிலையைக் கணக்கில் கொள்ளவில்லையென்று. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேட்டியளித்த பொழுதும், முஸ்லிம்களை நோக்கி நேசகரம் நீட்டுவோம் என்றே குறிப்பிட்டிருக்கிறார். எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாகப் பார்க்காமல், வேறு வகையில் தனித்த இனமாகப் பிரித்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் - தாங்கள் எந்தப் பக்கமென்று.




தமிழ் மொழியை ஒரு அடையாளமாக ஏற்க மறுத்தால், நாளை அதே வீச்சில், சிங்கள மொழியையும் ஏற்க மறுக்க வேண்டும். அந்த சமயத்தில், சிங்கள சமூகத்தில், அவர்களுக்கு எந்த அடையாளமும் இருக்காது. இல்லை, நாங்கள் சிங்கள அடையாளத்தை எந்தவித சிரமமுமின்றி ஏற்போம் என்று கூறினால், அது ஒரு இரட்டை நிலைபாட்டை எடுத்ததாகிவிடும். முஸ்லிம் அடையாளம் என்ற காரணத்தால், தமிழ் அடையாளத்தைத் துறக்கத் துடித்தவர்கள், நாளை சிங்கள அடையாளத்தை ஏற்க முனைந்தால், அதைப் போன்று ஒரு அபத்தம் இருக்க முடியாது.




சிங்கள அடையாளத்தையும் மறுப்போம் என்றால், பேரினவாதத்தின் கொடுங்கரத்திலிருந்து, இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது. இப்பொழுது அவர்கள் எங்களை நன்றாக வைத்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்வது தற்காலிக பாதுகாப்பாக அமையக் கூடும். இது பிரித்தாளும் உத்தியை சிங்களவர்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு மாத்திரமே அடையாளம். சிங்கள மேலாண்மையை ஏற்று பாதுகாப்பைத் தேடுவோம் என்பது இஸ்லாமியர்களின் இன்றைய நிலைபாடாக மட்டும் இருக்காது.




வாழ்நாள் முழுவதற்கும் 'அண்டி வாழும்' நிலையை மேற்கொள்ள இன்றைய சூழல் இட்டுச் செல்லும். அதிலும், சிங்கள மொழியை தங்கள் அடையாளமாக ஏற்றுக் கொள்ளும் பொழுது மட்டுமே சாத்தியப்படும். பாதுகாப்பிற்காக, தமிழைக் கைவிடுவோம், சிங்களத்தை ஏற்போம் என்ற நிலைபாட்டை எடுத்தால் - it would be totally against the free spirit of the humankind and the intellectual capability of the human animals.




தமிழை தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள், இலங்கையில் தங்களைத் தமிழர்களாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். அது ஒன்றே அவர்களுக்கு நன்மை தரும். இல்லையென்றால், the muslims will become the hypocrites in SriLanka.தமிழகத்து இஸ்லாமியர்கள் இந்த விஷயத்தில், தமிழ் என்ற அடையாளம் சார்ந்து இயங்குவதே நல்லது. (இது எனது கருத்து மட்டுமே) PJயின் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. (மேலும் பல விஷயங்களில் கூட)அது சரி, இது ஏன் பொதுவில் வைக்கப்படக் கூடாது ஏன்கிறீர்கள்? இதுவும் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வியே. இருசாராரும், தங்களிடையே விதைக்கப்பட்ட வேறுபாட்டைக் களைந்து, ஒன்றுபட இதுவே தருணம்.




உங்களுக்காக எழுதியவர் - நண்பன் at 10:52 PM

Tuesday, November 25, 2008

ஹிந்துக்களும் மதவாதமும்


ஹிந்துக்களும் மதவாதமும்
நான் நேற்று இரவு என்.டி.டிவி நிகழ்ச்சி ஒன்றில் இரவு எட்டரை டு ஒன்பது மணிக்கு ஸ்ரீநிவாசன் ஜெயின் தொகுத்து வழங்கியது... எப்படி சாத்வி பிரக்யா அவர்கள், ஹிந்துக்களின் எண்ணங்களை மதிக்காமல், அடிக்கு அடி என்ற விதத்தில், ஆர்மி ஆள் ஒருவர் துணையோடு, தன்னை தானே சங்கராச்சார்யா என்று பறை சாற்றிக்கொண்ட ஒருவரோடு இணைந்து, அவர் சொற்படி நடத்தியதாக விவரம்.... மல்கவ் மற்றும் சூரத் வெடிப்பு. உண்மையோ பொய்யோ, இது வரை நடக்க விட்டிருக்க கூடாது. எதற்காக இது வேண்டும்? இன்னொரு விடயம்... ஆர்.எஸ்.எஸ் ஆட்களை கொள்ள, ஐ.எஸ்.எஸ். பணம் கொடுத்தார்களாம் இவர்களிடம்... எங்கே போயிற்று மதம் வாதம்?அத்வானி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சமயத்திலும், அதை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வர வாஜ்பாயுடன் சேர்ந்து ராமர் கோவில் ரத யாத்திரை செய்து பயன் படுத்திக்கொண்டார். செல்வி ஜெயலலிதாவும், இந்தியாவில் ராமர் கோவில் கட்டாமல், எங்கு கட்டுவார் என்றார். நான் அப்போதே சொன்னேன், ஸ்ரீலங்காவில், மலேசியாவில், சிங்கபூரில் எல்லாம் ஹிந்துக்களின் கோவில் உள்ளது, உலகில் எங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கு தமிழ் கடவுள் கோவில் உள்ளது. ஹிந்துக்கள் வாழும் இடத்தில் ஹிந்துக்கள் கோவில். ஆனால், எதற்கு ஒரு மசூதி மீது கட்ட வேண்டும்? பாலக ராமர் சிலை ஒன்றை உள்ளே சென்று வைத்துவிட்டால், போதுமா?நாங்கள் வேலை விசயமாக அமெரிக்கா சென்ற போது சில சர்ச்சுகளில் உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. இந்தியாவில் கோவாவில் மட்டும் நடக்கும்... சென்னை சாந்தோமில் சுற்றுலாத்தலமாக இருப்பதால் ஒ.கே. காசு கேட்பார்கள், வெளியே உட்கார்ந்துக்கொண்டு.நாங்கள் அம்ரிட்சருக்கும் போய் உள்ளோம். அஜ்மீர் ஷேரிப்பிர்க்கும் போய் வந்தோம். நல்ல மரியாதை. பெண்களுக்கு அருமையான பாதுகாப்பு.முதலில் ஜாதி கொடுமைகளை களைய பாருங்கள்.அஹிம்சை தான் வாழ்க்கையில் வேண்டும். அமைதி வேண்டும்.கேடு கெட்ட உலகம் இதுங்க.இவர்கள் இப்படி செய்வதால், நாட்டில் உணவு பஞ்சம் தீருமா?கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வருமா?அரசியல்வாதிகளின் சொத்து அனைத்தும் பிடுங்கி, ஏழைகளுக்கு, தேவையானதை செய்ய வேண்டும். அதற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.*************நல்ல பதிவு ஒன்று இங்கே அண்ணன் வாஞ்சூர் அவர்கள் எழுதியது...சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்
Posted by Vinitha at 11:56 AM
Labels:

ஹிந்துக்களும் மதவாதமும்


ஹிந்துக்களும் மதவாதமும்
நான் நேற்று இரவு என்.டி.டிவி நிகழ்ச்சி ஒன்றில் இரவு எட்டரை டு ஒன்பது மணிக்கு ஸ்ரீநிவாசன் ஜெயின் தொகுத்து வழங்கியது... எப்படி சாத்வி பிரக்யா அவர்கள், ஹிந்துக்களின் எண்ணங்களை மதிக்காமல், அடிக்கு அடி என்ற விதத்தில், ஆர்மி ஆள் ஒருவர் துணையோடு, தன்னை தானே சங்கராச்சார்யா என்று பறை சாற்றிக்கொண்ட ஒருவரோடு இணைந்து, அவர் சொற்படி நடத்தியதாக விவரம்.... மல்கவ் மற்றும் சூரத் வெடிப்பு. உண்மையோ பொய்யோ, இது வரை நடக்க விட்டிருக்க கூடாது. எதற்காக இது வேண்டும்? இன்னொரு விடயம்... ஆர்.எஸ்.எஸ் ஆட்களை கொள்ள, ஐ.எஸ்.எஸ். பணம் கொடுத்தார்களாம் இவர்களிடம்... எங்கே போயிற்று மதம் வாதம்?அத்வானி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சமயத்திலும், அதை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வர வாஜ்பாயுடன் சேர்ந்து ராமர் கோவில் ரத யாத்திரை செய்து பயன் படுத்திக்கொண்டார். செல்வி ஜெயலலிதாவும், இந்தியாவில் ராமர் கோவில் கட்டாமல், எங்கு கட்டுவார் என்றார். நான் அப்போதே சொன்னேன், ஸ்ரீலங்காவில், மலேசியாவில், சிங்கபூரில் எல்லாம் ஹிந்துக்களின் கோவில் உள்ளது, உலகில் எங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கு தமிழ் கடவுள் கோவில் உள்ளது. ஹிந்துக்கள் வாழும் இடத்தில் ஹிந்துக்கள் கோவில். ஆனால், எதற்கு ஒரு மசூதி மீது கட்ட வேண்டும்? பாலக ராமர் சிலை ஒன்றை உள்ளே சென்று வைத்துவிட்டால், போதுமா?நாங்கள் வேலை விசயமாக அமெரிக்கா சென்ற போது சில சர்ச்சுகளில் உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. இந்தியாவில் கோவாவில் மட்டும் நடக்கும்... சென்னை சாந்தோமில் சுற்றுலாத்தலமாக இருப்பதால் ஒ.கே. காசு கேட்பார்கள், வெளியே உட்கார்ந்துக்கொண்டு.நாங்கள் அம்ரிட்சருக்கும் போய் உள்ளோம். அஜ்மீர் ஷேரிப்பிர்க்கும் போய் வந்தோம். நல்ல மரியாதை. பெண்களுக்கு அருமையான பாதுகாப்பு.முதலில் ஜாதி கொடுமைகளை களைய பாருங்கள்.அஹிம்சை தான் வாழ்க்கையில் வேண்டும். அமைதி வேண்டும்.கேடு கெட்ட உலகம் இதுங்க.இவர்கள் இப்படி செய்வதால், நாட்டில் உணவு பஞ்சம் தீருமா?கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வருமா?அரசியல்வாதிகளின் சொத்து அனைத்தும் பிடுங்கி, ஏழைகளுக்கு, தேவையானதை செய்ய வேண்டும். அதற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.*************நல்ல பதிவு ஒன்று இங்கே அண்ணன் வாஞ்சூர் அவர்கள் எழுதியது...சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்
Posted by Vinitha at 11:56 AM
Labels:

பார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்?



பார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்?
கேள்வி:பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும் ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள?சுபவீ பதில்:அதாவது இந்தியாவிலேயே தமிழகத்தின் நிலை ஒரு மாதிரியான வினோதமானது என்று தான் சொல்ல வேண்டும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை, தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றூ நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநில மக்களும் சமஸ்கிரதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள், வட மொழி ஆதிக்கத்தை ஒப்புக்க்கொண்டவர்களாக இருக்கிறார்கள், தென்னிந்தியாவிலே கூட கேரளம், கர்நாடகம் ஆந்திரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் இந்தியையோ வடமொழியையோ தமிழகத்தை போல எதிர்க்கவில்லை., தமிழகத்திலே மட்டும் தான் தமிழ் தனித்து இயங்கும் மொழியென்றும் வடமொழியை கூடாது என்றும் சொல்லுகிற முழக்கம் இருக்கிற காரணத்தால் இன்றைக்கும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மக்களின் காசுகளிலேயே பிழைத்துக்கொண்டிருந்தாலும் சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு அவர்கள் எதிராக நிற்க வேண்டும் என்ற உள் உணர்வே அவர்களை உந்தித்தள்ளுகிறது என்று கருத வேண்டி இருக்கிறது.------------------நன்றி: "தமிழ்வெளி"
button="vert";
submit_url ="http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_4892.html"

Posted by தமிழ் ஓவியா at 18:56
Labels:

5 comments:
sarath said...
நிதர்சனமான உண்மை!நம்மில் பலரும் படும் துன்பம் நாம் தமிழர் என்பதற்காக மட்டுமே!
25 November 2008 22:53
தமிழ் ஓவியா said...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
26 November 2008 05:59
தமிழ் நாடன் said...
அனைத்து பார்ப்பனர்களையும் இந்த போக்கில் சேர்த்துவிட முடியாது. தமிழுக்காக அரிய சேவைகளை செய்த உ.வே.சா போன்ற பெரியவர்களை நாம் மறந்துவிட முடியாது. ஆனால் தற்கால பார்ப்பன நன்பர்களிடம் உள்ள தமிழன் எதிர்ப்பு போக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.மனதளவில் அவர்கள் தம்மை தமிழராக உணர்வதில்லை என்பது உண்மைதான்.
26 November 2008 11:26
i criticize periyar said...
எப்போது பார்பனர்கள் எல்லோரும் சுப.வீயிடம் நாங்கள் ஈழப் போராட்டத்தை எதிர்க்கிறோம்என்று கையெழுத்துப் போட்டு கடிதம்கொடுத்தார்கள்.காங்கிரஸ்காரர்கள்என்ன நிலைபாடு எடுத்துள்ளார்கள்.அவர்கள் என்ன பார்பனரா?.காங்கிரஸ்காரர்களுடன்கூட்டணி வைத்திருப்பது யார்.அவர்கள் ஆதரவில் ஆட்சி நடத்துவது யார். பார்பன எதிர்ப்பில் குளிர்காயும் சுப.வீ போன்றவர்கள் இப்படி எதையாவது பேசித்தான் தாங்கள்இருக்கிறோம் என்று காட்ட வேண்டிஉள்ளது.பார்பனர்களுக்கு உலகமேஇருக்கிறது, தங்களை நிரூபிக்க.சுப.வீக்களின் அங்கீகாரம் தேவையில்லை.
26 November 2008 11:53
Chuttiarun said...
Nanbargale!! naangal www.thamizhstudio.com yenum kurumbadangalukkaana inayathalatthai nadathi varugirom. engalukku ungal blogil oru inaippu kodukkumaaru panivudan kettukkolgiren.http://www.thamizhstudio.com
26 November 2008 11:57
Post a Comment

Links to this post
தமிழ் ஓவியா: பார்ப்பனர்கள் ...
சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு ...
Posted byTBCD at26 November 2008 00:32
Create a Link
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)


என்றும் என்னுடன்

பார்ப்பனர்கள் தங்களின் குணத்தை மாற்றிக் கொண்டார்களா?

Thiratti.com


http://feeds.feedburner.com/satrumun?format=sigpro” type=”text/javascript”>

ஆங்கிலம் கற்க

online

இங்கு சிந்தித்தவர்கள்
var sc_project=3284235;
var sc_invisible=0;
var sc_partition=21;
var sc_security="c2cc9a6f";
View My Stats

தேன்கூடு திரட்டி
சங்கமம்

இணைப்புகள்
தமிழ்த்தோட்டம்
திருமன்றில்
வலைப்பதிவர்களின் அய்யம் தெளிய
சுப.வீ
பகுத்தறிவாளர் கழகம்
ஜாதிஒழிப்புத் திருமணம் செய்ய
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட
தமிழில் பெயர் சூட்டுவோம்
குருதிக்கொடை
http://www.princenrsama.blogspot.com/
http://www.periyar.org.in/
http://www.tamilnaatham.com/
http://www.keetru.com/
http://www.idhuthanunmai.blogspot.com/
http://www.thamizhagam.net/
http://www.jaathiolippu.blogspot.com/
http://www.naalaividiyum.blogspot.com/

Blog Archive
2008 (989)
November (122)
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றக் கட்சிகள...
பார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்?
ஆரியம் அலற
கடவுளும், மதமும் மனிதனை வெறியனாகவும், பைத்தியக்கா...
முசுலிம் குல்லாய் அணிவதும், தாடி வளர்ப்பதும், கிறி...
பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்...
இன்றைக்குமக்களை நோக்கி வீறுகொண்டு எழுந்து நிற்கும்...
பாரதியார் எல்லா மதங்களையும் சமமாக மதித்தாரா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கலைஞரின் பதில்க...
பார்ப்பனர்களும் - யூதர்களும்
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வெறிய...
பார்ப்பனர்களுக்கு கொடுத்த வரிகள் பட்டியல் பாரீர்...
பக்தி - ஒழுக்கத்தை வளர்க்கும் இலட்சணம் இது தானா?
பார்ப்பனர்கள் என்பவர்கள் யார்?
சோ கூட்டம் கற்பிக்கும் அபாண்டங்களை இடதுசாரி சிந்தன...
ஆண்கள் அடித்தால் பெண்கள் திருப்பி அடிக்கலாமா?
ஜெயலலிதாவிற்கு திருமாவளவன் பகிரங்க மடல்
காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார...
என் கையில் இருப்பது எழுதுகோல்! -தருப்பைப்புல் அல்ல...
சங்பரிவார்க் கும்பலின் வெடிகுண்டுக் கலாச்சாரம் எங்...
பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் என்ன...
இல்லாத விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும...
கோஷா முறையை ஆதரிக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு ஒரு சவா...
காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவர்க...
விடுதலைப்புலிகள்மீது இன்னும் வன்மம் ஏன்?காங்கிரசார...
ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு!
"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "
அறிவார்ந்த தீர்வுகளை அள்ளித்தரும் "வாழ்வியல் சிந்த...
சாலையோரக் கோயில்கள் இடிப்பு - இராமகோபாலன் என்ன சொல...
இந்து மதம் ஒழிந்து வருகின்றது
அய்யாவின் அடிச்சுவட்டில்!
இந்து மதத்துக்கும், வன்முறைக்கும் சம்பந்தம் உண்டா?...
தமிழ்நாடு மகாராஷ்டிரம் ஆகவேண்டுமா?
இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கலைஞர் பதவி விலகக்...
விழி பிதுங்கி நிற்கும் பா.ஜ.க.வும், அதன் பரிவாரங்க...
உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்ட...
ஆஸ்திகமும், நாஸ்திகமும்
தி.க., தி.மு.க. கருத்து வேறுபாட்டுடன் இருந்தபோது க...
பெரியார் இருந்த இடத்தில் வீரமணி
ராஜபக்சேவின் பேட்டி நயவஞ்சகமானவை !
கந்தன் -முருகன் பெயர்களின் காரணங்கள்
புத்தியை நாசப்படுத்துகிறவனுக்குத் தூக்குத் தண்டனை ...
1972 -இல் மின்வெட்டு ஏற்பட்ட போது "விடுதலை" எழுதிய...
பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்கள்
பூணூல் இல்லாத பார்ப்பான்
புரோகிதமற்ற திருமணங்களின் கதியென்ன?
கோயில் என்பது என்ன? பிரார்த்தனை என்றால் என்ன?
"துக்ளக்" அட்டைப்படத்துக்கு "விடுதலை" யின் கருத்து...
மயிலாப்பூர், மதுரை, திருச்செந்தூர் பக்தி விழாவினால...
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகா பயிற்சிகளை நிறுத்தாவிட்...
இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!
மாலேகான் குண்டுவெடிப்பு பற்றி அ.மார்க்ஸ்,ஜவாஹிருல்...
விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பயந்து 25,000 ச...
வெடிகுண்டுக் கலாச்சாரத்தை விதைத்து வளர்த்து வரும் ...
தாழ்த்தப்பட்டோருக்கும் கிரீமிலேயரா?
மாணவர்களே ஜாதி உணர்வைத் தூக்கி எறிந்து படியுங்கள்!...
பார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதா...
பார்ப்பான் மீன் பிடித்திருந்தால் இதை எழுதுவானா? இந...
இந்துப் பயங்கரவாதம் - மாலேகான் குண்டுவெடிப்பு மேலு...
பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்போம்!
ஈ.வெ.ராமசாமி " பெரியார்" ஆன வரலாறு
தேச விடுதலைக்குப் போராடிய பெரியார் இராமசாமி பாரம்ப...
தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்கள் யார்?
தமிழின உணர்வுகளுக்கு எதிராக எழுதிவரும் பார்ப்பனப் ...
மாலேகான் குண்டு வெடிப்பு -இந்து பயங்கரவாதிகளின் பி...
புத்தமும் - யுத்தமும்
இந்துப் பயங்கரவாதம் -பல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போத...
இந்தப் புளுகு கந்த புராணத்திலுமில்லையே கந்த புராணத...
சோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு மாதவிலக்கு - அன்று ...
நான் ஏன் தேசத் துரோகியாக இருக்கிறேன்?
காஷ்மீர் பண்டிட்கள் நலனுக்காகக் கண்ணீர் வடிக்கும் ...
பத்திரிகைகள் யார் கையில்?
பார்ப்பனர்களுக்கும், மான உணர்வுக்கும், வெட்கத்திற்...
இந்துமதப் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட மாலேகான் குண்டுவ...
ஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு தேவை.! - தமிழக...
பூணூல் போடும் பார்ப்பானும், பூணூல் போடும் செட்டியா...
மாலேகான் சதி -இந்து மதத் தீவிரவாதம் அம்பலம்
பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் அல்ல!
ஆரியத்துக்கு எதிர்ச் சொல் திராவிடம்
ஓ! திராவிடர்களே! கண் விழியுங்கள்! சீக்கிரம் எழுந்த...
திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டிய...
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலின் அநாகர...
நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான்
இந்துத்வ வெறியர்களின் வெடி குண்டுக் கலாச்சாரத்திற்...
கருமாதி பத்திரிகை என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட த...
பத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம்...
பார்ப்பனப் பத்திரிக்கைகளை புறக்கணிப்போம்!
மனிதச் சங்கிலியில் பார்ப்பனர்கள் கலந்துகொண்டார்களா...
சங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்!
லெனின் பற்றி அண்ணா
மக்கள் அறிவு பெற,மான உணர்ச்சி பெற கடவுள் மத, சாஸ்த...
நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லார...
வெற்றி மலரை முத்தமிட்ட ஒபாமா
மசூதி முன் மேளமடித்துக் கொண்டு போகக்கூடாது என்பத...
வன்முறையாளர்களான புலிகளை ஆதரித்து நியாயம் பேசுவது ...
ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த சீமான் - அமீர் ப...
பெரியார் பார்வையில் மதுவிலக்கு
மதுவிலக்குப் பற்றி அம்பேத்கர்
கீதையைப்பற்றி ரஜினிகாந்த் கருத்து மிகச் சரியானதே!...
ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடாமல் புறக்கணித்த முசுலி...
பெரியாரின் நிலை பற்றி அண்ணா
பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற பிரிவினை யாரிடமி...
கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே
நாம் ஒன்றுபட்டு அய்க்கியமாகக் குரல் கொடுத்தால் போர...
அறிஞர் அண்ணா பார்வையில் ஈழத்தமிழர்கள்
திராவிடரும் - கடவுளரும்
இந்துத்துவ பயங்கரவாதத்தின் புதியமுகம் மாலேகான் குண...
சிந்திப்பது கிடையாது
தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வி...
தமிழர்களே பார்ப்பனர்களைப் பகிஷ்காரம் செய்யுங்கள்!
அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி
வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் பற்றி...
கந்தசஷ்டி கொண்டாடும் பக்தர்கள் சிந்தனைக்கு
கந்தபுராணமும் - இராமாயணமும் ஒன்றே!
"கந்தசஷ்டி" - கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் ...
பார்ப்பனப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம்
ரயில்வே ஸ்டேஷன்களில் பிராமணாள் - இதராள் சாப்பிடும...
உயிர்களை உருவாக்கியது கடவுளா?
பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள...
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பார்ப்பன ஊடகங்கள் சிண்...
சூரசம்ஹாரம் என்பதன் சூழ்ச்சி என்ன?
அண்ணாவின் பார்வையில் பார்ப்பனர்கள் !
October (135)
September (88)
August (130)
July (125)
June (99)
May (94)
April (100)
March (42)
February (42)
January (12)
2007 (34)
December (34)

About Me

தமிழ் ஓவியா
பழனி, தமிழ்நாடு, India
நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள் View my complete profile